கடந்த 75 வருடங்களாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பதவி பணத்துக்காக ஏமாற்றி வந்த தமிழ் அரசியல்வாதிகள், பின்பு ஆயுத தாரி இயக்கங்கள், பின்பு வெள்ளை வேட்டிகட்டிய தமிழ் தலைவர்களாக மாறிய ஆயுத இயக்க தலைவர்கள், எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் பொருளாதாரம் ரீதியாகவும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் செய்து விட்டார்கள்.
தென் இலங்கையில் புதிய மாற்றம் வடபகுதி மக்களையும் மிகவும் கவர்ந்து கொண்டதால், பழைய ஊழல் பெருச்சாளிகள்எல்லாம் நிலை தடுமாறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
அடுத்த பொது தேர்தலில் தங்களுக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாவிட்டாலும், கொழும்பு போன்ற சிங்களப் தமிழ்பகுதிகளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் கிடைக்கும் வாக்குகளை பொறுத்து தேசிய பட்டியலில் இடம் கிடைத்துவிடும் தலைவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் எல்லாம் கொழும்பு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவா தேர்தலில் நிற்கிறார்கள். வட பகுதி தமிழ் மக்களுக்கு நன்மை செய்துவிட்டார்கள்.
கடும் யுத்தம் நடந்த காலங்களில் கூட தென்னிலங்கையிலும் குறிப்பாக கொழும்பிலும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். வடபகுதி தமிழ் மக்கள் கூட பாதுகாப்புக்காக கொழும்பு நோக்கி தான் வந்தார்கள். இப்பொழுது வடபகுதி தமிழ அரசியல்வாதிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதால் இங்கு வாழும் தமிழ் மக்களும் இனி அமைதியாக வாழ முடியாது.
வடபகுதி தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையில் தென்பகுதியில் தமிழர்களை அரசியல் ரீதியில் கலவரப்படுத்திவிட்டு, அந்தப் பழியை புதிய ஜனாதிபதி மற்றும் npp கட்சியின் மீது இலகுஆக போட்டு, தப்பி விடுவார்கள்.
புதிய அரசாங்கத்துக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள், இந்த வடபகுதி தமிழ் தலைவர்களை தூண்டிவிட்டு, சிங்கள பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் நிம்மதியை குலைத்து தமிழ் சிங்கள இனக்கலவரத்தை தூண்டி, தங்கள் நோக்கத்தை நிறைவேற்றவே, வடபகுதி தமிழ் கட்சிகள் கொழும்பில் போட்டியிடுவதாக தெரிகிறது
தமிழ் மக்கள் தான் இவர்களுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்
No comments:
Post a Comment