புதிய இலங்கை ஜனாதிபதியை தமிழர்கள் மட்டும் எத்தனை விதமான முறையில் விமர்சிக்கிறார்கள். தேர்தல் நடக்கும் முன்பு சீனாவின் செல்லப்பிள்ளை என்றார்கள். பின்பு அமெரிக்கா ரகசியமாக ஆதரிக்கிறது என்றார்கள். இப்பொழுது இந்தியா நினைத்தபடி அனுரா ஜனாதிபதி ஆகிவிட்டார். அனுரா இப்பொழுது இந்தியாவின் செல்லப்பிள்ளை என்று கூறுகிறார்கள்.
இப்படி நேரத்துக்கு ஒரு கதை சொல்பவர்கள் எல்லோரும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களது தயவில் வாழும் சுயநலம் மிக்கவர்களும் தான்
தேர்தல் காலத்தில் இந்தியா சஜித் பிரேமதாசாவை தான் ஆதரிக்கிறது என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது இந்தியா அனுராவை தான் ஆதரிக்கிறது என்று தமிழ் மக்களே முட்டாள்கள் என நினைத்து கருத்துகள் சொல்லி வருகிறார்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கள அரசியல் கட்சிகள் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் முன்வைத்து போட்டியிட்டன அப்படித்தான் வெற்றிகளும் பெற்று வந்தன. ஒவ்வொரு சிங்கள கட்சியும் அது ஜெவிபியாக இருந்தால் என்ன, அது சாரி கட்சிகளாக இருந்தால் என்ன தமிழருக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தால் மட்டுமே சிங்கள ப் பகுதிகளில் அவர்களால் தேர்தலில் நிற்க முடியும் வெல்ல முடியும்.
2009 க்கு பின்பு தமிழரை க்காட்டி தேர்தலின் நிக்க முடியாத நிலை. 2009 க்கு பின்பு சிங்கள மக்கள் பொருளாதார நிலையில் தங்களை காப்பாற்ற கூடியவர்கள் யார் ,எந்த கட்சி என்றுதான் பார்க்கத் தொடங்கினார்கள்.
அப்படித்தான் புதிய ஜனாதிபதி அனுரா வந்துள்ளார். அவருக்கு உடனடியாக இலங்கை பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டிய நிலை இருப்பதால், அதாவது அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களை பொருளாதார கஷ்டத்தில் இருந்து நிற்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகள் அரசியல் கட்சிகளிடம் தமிழர் உரிமைகள் பற்றி பேசாத தமிழர் தலைவர் அவர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் கடந்த ஜனாதிபதிகளிடம் சொகுசு கார் வாங்க பர்மிட், பார் வைக்க லைசன், மந்திரி பதவிகள் பணப்பெட்டிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு அவர்களிடம் தமிழர் உரிமைகளை மட்டும் கேட்டு பெற.
வில்லை. தேர்தல் காலங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கோடிக்கணக்கில் அபிவிருத்திக்கு என்ற பெயரில் கோடிகளில் கொடுத்த பணம் என்னவாயிற்று.
அனுரா நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பதை விட, ஏனென்றால் இவரை விட பயங்கரமான ஜனாதிபதிகளை பார்த்த தமிழர்கள் ஏன் இவரை கண்டு பயப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தில் வந்த ஒரு நாள் முதல்வர் ஒன்று இவரின் சில அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு பிடித்திருக்கிறது ஏன் தமிழ் மக்களுக்கும் கூட பிடித்திருக்கிறது. இவரின் ஜனாதிபதி அவர்களின் இந்த மாதிரி நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கக்கூடாது என்பதில் ஊழல் அரசியல்வாதிகளும் இதுவரை காலமும் தமிழர்களை ஏமாற்றி வந்த தமிழ் தலைவர்களும் தமிழ் மந்திரிகளும் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதற்காக தங்கள் எடுபுடிகளை விட்டு புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகளை கேலி செய்கிறார்கள். சரியோ பிழையோ ஒரு மருத்துவர் அர்ச்சனா வந்து அரச ஆஸ்பத்திரிகளில் நடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டினார். அப்படி அந்த அர்ஜுனா மருத்துவர் வெளிச்சம் போட்டும் காட்டும் வரை தமிழ் மந்திரிகளும் தமிழ் தலைவர்களும் இந்த ஊழல் பற்றி தெரியாமல் இருந்தார்கள். அவர்களுக்கும் அந்த ஊழல் காசு போய் தான் இருக்கிறது.
அர்ஜுனா மருத்துவர் தடம் புரளாமல் மருத்துவ ஊழல்களை மட்டும் நீதிமன்றத்தில் நிரூபித்திருந்தால் தமிழ் மந்திரிமார்களின் தமிழ் அரசியல்வாதிகளின் திறமையும் ஊழலும் வெளி வந்திருக்கும்.
புதிய ஜனாதிபதிக்கு நான் பரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு கொடுக்கவில்லை. குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனால் இப்போதே சில வெளிநாடுகள் தமிழர் பிரச்சினையை தூண்டிவிட்டு தங்களுக்கு தேவையான ஆதரவான பழைய வேறு ஜனாதிபதிகளை கொண்டு வர முயற்சிக்கலாம்.
இதனால் தமிழருக்கு நன்மை இல்லை இலங்கை நாட்டுக்கு நன்மை இல்லை.
பலரின் பலவித ஊழல்கள் வெளிவருமன சிங்கள, தமிழ் மந்திரி மாறும் அரசியல் தலைவர்களும் பயப்படுவதாக தெரிகிறது.
கார் பர்மிட் மதுபான பர்மிட் விபரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இனி புதிய நல்ல தலைவர்களை தேட வேண்டிய காலம் வந்து விட்டது
No comments:
Post a Comment