பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 26 September 2024

தமிழ் தலைவர்களுக்கு இப்பொழுது தான் தங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் வந்து விட்டது

  வெற்றிசெல்வன்       Thursday, 26 September 2024
2009 க்கு பிற்பாடு எப்படி இருந்தாலும் தமிழ் மக்கள் எங்களைத்தான் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என்று நினைத்து இருந்த வெள்ளூர் வேஷ்டி கட்டிய முன்னாள் கொலைகார ஆயுத இயக்கத் தலைவர்கள் இதுவரை காலமும் அவர்கள் நினைத்த மாதிரி தமிழ் மக்கள் இவர்களைப் பற்றி அறியாமலோ அல்லது அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாமல் இவர்களுக்கு வாக்குகளை போட்டார்கள். 
இந்த தமிழ் தலைவர்களும் யார் சிங்கள ஜனாதிபதியாக சிங்கள அரசாங்கம் வந்தாலும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி தாங்கள் போய் பதவியும் பணமும் பெற்று விடலாம் என்று என்று நினைத்தார்கள் உண்மையில் அதுதான் நடந்தது இதுவரை காலமும். 
எந்த மலையக, வடகிழக்கு தமிழர் தலைவர்கள் எல்லாரும் இதுவரை தாங்கள் வசதியாக மட்டுமே இருந்தார்கள் மக்களின் வசதி மக்களின் உரிமைகள் பற்றி எந்த விதத்திலும் கவலைப்படவில்லை. காரணம் புதிதாக வரும் இலங்கை ஜனாதிபதி எப்படியும் தங்களுக்கு பதவி பணம் கொடுத்து ஆதரித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களே தொடர்ந்து ஏமாற்றி வந்த தமிழ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த புதிய ஜனாதிபதி இடம் தாங்கள் போய் பதவியும் பணமும் பெற முடியாது. இன்று தெளிவாக உணர்ந்து விட்டார்கள். அதோடு இப்பொழுது தமிழ் மக்களும், சிங்கள மக்களின் மனமாற்றம் போல் ஏன் தாங்களும் நல்ல தலைவர்களை தெரிவு செய்யக்கூடாது என்று தெளிவு பெற்று விட்டார்கள். 
புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் மக்களுக்கு ஏன் தமிழ் மக்களுக்கு கூட வருங்காலம் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்ள தொடங்கி விட்டார்கள். 

2009 க்கு பின்பு பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல கூட்டணிகள் மாறினார்கள் புதுப்புது கூட்டணிகள் உருவாக்கினார்கள். எதற்காக செய்தார்கள் தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவா? இல்லை தங்கள் சொந்த வசதி வாய்ப்புக்காக மட்டுமே இந்த தமிழ் தலைவர்கள் இவ்வளவு காலம் நாட்களை கடத்தி வந்தார்கள். இப்பொழுது அவர்கள் மேலே இடி விழுந்து விட்டது. 

கடந்த இரண்டு நாட்களாக தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழர்களின் ஒற்றுமையை உலகத்துக்கு காட்ட வேண்டும் என்று புதுப்புது கூட்டணிகள் போடுகிறார்கள். 
இப்பொழுது தான் இவர்களுக்கு தமிழ் மக்களின் உரிமைகள், வாழ்க்கைதரம் பற்றி தெரிகிறதா.
தமிழர்கள் இனியும் ஏமாற வேண்டாம். இவர்களை ஓய்வு பெற செய்து கடந்த காலத்தில் இவர்கள் செய்த கொலை கொள்ளை கடத்தல்களுக்கு தண்டனை பெற வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் செய்த கடந்த கால சமூக விரோத செயல்களை ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக இலங்கை மக்கள் முன்பு மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி விட வேண்டும். 

இதுதான் வருங்கால தமிழர்களுக்கு நல்ல முடிவு நல்ல பாதுகாப்பாக இருக்கும்
logoblog

Thanks for reading தமிழ் தலைவர்களுக்கு இப்பொழுது தான் தங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் வந்து விட்டது

Previous
« Prev Post

No comments:

Post a Comment