பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 28 September 2024

சிங்கள அரசு தமிழர்களின் உரிமையை மறுக்கும் அதே நேரம், தமிழர்கள் சொந்த தமிழ் மக்களையே சாதிகாரியாக பிரித்து உரிமைகள் மறுப்பது சரியா

  வெற்றிசெல்வன்       Saturday, 28 September 2024
கடந்த 75 வருடங்களாக இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சிங்கள அரசுகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள் என்று பல அரசியல் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்கள் நடத்தி பல ஆயிரம் தமிழர்களை இழந்து நிற்கின்றோம். பல ஆயிரம் தமிழர்களில், சரிக்கு சமமாக போய் சொந்த தமிழ் மக்களையே கொலை செய்து கற்பழித்து கொள்ளையடித்து வந்தது தமிழர் ஆயுத தூக்கிய விடுதலை இயக்கங்கள். இது எல்லோருக்கும் தெரியும். 
   சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள் என்று இன்றும் கூறுகிறோம். ஆனால் 75 வருடங்களுக்கு மேலாக தமிழர்களே சொந்த தமிழ் மக்களேயே, சாதிவாரியாக பிரித்து அவர்களை அடக்கி ஒடுக்கி சமுதாயத்தில் தங்களுக்கு அடிமையாக தானே மேல் தட்டு தமிழ் மக்கள் வைத்திருந்தார் கள். அவ்வளவு அடிபட்ட பிறகும் இன்றும் தமிழ் மக்கள் சாதிகள் கூறி தமிழர்களை ஒதுக்கி வைப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையா? 

சிங்கள மக்கள் தமிழர்களை ஒதுக்கி வைப்பதாக கூறிய ஆயுதம் போராட்டம் நடத்திய எங்கள் தமிழர் தலைவர்கள் ஏன் தமிழர்கள் சாதி வாரியாக பிரித்து தமிழர்களை அடக்கி ஒதுக்கியதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தவில்லை. முதலில் நாங்கள் தமிழர்களை தமிழர்களே ஒதுக்கும் நடவடிக்கைக்கு எதிராக பிரிய போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அது ஏன் நாங்கள் செய்யவில்லை. இன்றும் கூட கோயில் திருவிழாக்களில் சாதி காட்டி சண்டை வருவதாக கேள்வி. 

இந்தியாவில் தமிழ்நாட்டில் கூட சாதி காட்டி தமிழர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. சாதிகளை ஊக்குவித்து அதன் தலைவர்கள் சொகுசாக வாழ்ந்து வருவதையும் பார்க்கலாம். தலைவர்கள் வளர்ந்தாலும் அந்த சாதி மக்கள் அடிமையாக தான் இருக்கிறார்கள். 

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் என்று ஒன்று படுவதை விட தமிழனை தமிழன் அடக்கியாள செய்து கொண்டு தமிழர்கள் உரிமைகள் பெற்று பேசுவது தான் வேடிக்கை. 

இலங்கைதமிழன் தலைவர்கள் தமிழ் பகுதிகளில் சாதியை ஒழித்து விட்டு அந்த தமிழ் மக்களுக்கும் சம உரிமை கொடுத்துவிட்டு, பின்பு சிங்கள அரசிடம் தமிழர் உரிமைப் போராட்டம் நடத்துங்கள். வெற்றி பெறும்
logoblog

Thanks for reading சிங்கள அரசு தமிழர்களின் உரிமையை மறுக்கும் அதே நேரம், தமிழர்கள் சொந்த தமிழ் மக்களையே சாதிகாரியாக பிரித்து உரிமைகள் மறுப்பது சரியா

Previous
« Prev Post

No comments:

Post a Comment