இலங்கையின் புதிய ஜனாதிபதியை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.
முன்பு அடிக்கடி நான் எனது பதிவுகளில் இலங்கை தமிழர்பிரச்சனையை தீர்க்கக் கூடியவர்கள் இலங்கையின் ஜனாதிபதியும் சிங்கள மக்களும் தான் என்று, தமிழ் தலைவர்கள் மட்டும் வெளிநாடுகளையும் குறிப்பாக அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள்தான் தமிழருக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் என்று தங்களை வளர்த்துக் கொள்ள தமிழ் மக்களே தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
கடந்த கால சரித்திரத்தில் இந்த வெளிநாடுகள் யாரும் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க உண்மையான முயற்சிகள் எடுக்கவில்லை. இப்பொழுது கூட புதிய இலங்கைஜனாதிபதி தங்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் இந்த தமிழர்களின் துரோக தலைவர்களை தூண்டிவிட்டு , இலங்கையின் ஜனாதிபதிக்கு பிரச்சனை கொடுக்க பார்ப்பார்கள்.இலங்கையில் மிச்சம் இருக்கும் தமிழர்களையும் அழிப்பதற்கு இது வழி வகுக்கும். இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு சாதகமாக வந்தால் இந்த நாடுகள் தமிழர்களே பற்றி பேசுவதற்கே தயங்கும்.
புதிய ஜனாதிபதி இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமானால், இனிமேல் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு பதவிக்காகவும் பணத்துக்காகவும் வரும் ஊழல் நிறைந்த கொலைகார தமிழர் தலைவர்களை தூரவே வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தமிழ் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற விடக் கூடாது.
வேண்டுமானால் ஆயுதப் போராட்ட காலத்தில் இந்த தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது நடத்திய கடத்தல்கள் கொள்ளைகள் கொள்ளைகள் சித்திரவதைகள் போன்றவற்றை ஒரு விசாரணை கமிஷன் வைத்து உலகத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். யுத்தத்தின்போது இலங்கை ராணுவம் செய்த சித்திரவதியில் கொலைகள் புதிய அரசாங்கம் கணக்கில் அடித்துக் கொள்ளாது.
ஆனாலும் தமிழ் இயக்கங்கள் தமிழர்கள் மேல் செய்த கடத்தல்கள் கொலைகள் சித்திரவதைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை பெற முயற்சி செய்ய வேண்டும். ஆனால் வெளிநாட்டுத் தமிழர்களையும் இலங்கையில் இருக்கும் ஊழல் தமிழ் தலைவர்களையும் கலந்த காலம் போல் நம்பி இருந்தால் இலங்கையில் தமிழர்களே தங்களே அழித்துக் கொள்ளும் நிலை தான் வரும்.
தமிழர்களுக்கு எந்த ஒரு உதவிகளும் செய்யாத ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசா போன்றவர்களை ஆதரிக்கும் நாங்கள் ஏன் அனுரகுமார ஆதரிக்கக்கூடாது.
ஆயுதப் போராட்ட காலத்தில் எங்களை நம்பி இருந்த தமிழ் மக்களையும் இளைஞர்களையும் இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் எத்தனை பேரை எப்படி எல்லாம் கொலை செய்தோம். உயிரோடு தான் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை எரித்து கொலை செய்தோம். தமிழ்நாட்டில் முகாம்களில் தமிழ் தலைவர்களை நம்பி வந்த இளைஞர்களை கொலை செய்து புதைத்தோம்.
நாங்கள் தமிழ் இயக்கங்கள் தமிழருக்கு செய்த கொடுமையை விட ஜேவிபி தமிழருக்கு என்ன கொடுமை செய்தது.
தமிழ் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது
No comments:
Post a Comment