கடந்த தமிழ் ஆயுதப் போராட்ட காலங்களில் காலத்துக்கு காலம் நேரத்துக்கு நேரம் தமிழ் மக்கள் இந்த இயக்கம் நல்லது அந்த இயக்கம் கூடாது என்று நினைத்து கடைசியில் தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பி விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தார்கள். அதன் முடிவு 2009 இல் விடுதலைப் புலிகளும் அழிந்து லட்சக்கணக்கான தமிழ் மக்களும் அழிந்து, போராட்ட ஆரம்ப காலங்களில் எமக்கு இருந்த உரிமைகளும் தாய் மண்ணும் இழந்து, இன்று வாள் வெட்டுஆவா குரூப்புகளும், தமிழ் பிள்ளைகள் போதை மருந்துகளுக்கு அடிமை ஆகியும், உள்ளனர்.
இதைவிட கொடுமையானது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மருத்துவர்கள் குறிப்பாக தமிழ் மருத்துவர்கள் ஊழல் செய்து தமிழ் மக்களையே சுரண்டி பிழைக்கும் நிலை யும் உள்ளது. இந்த ஊழலை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டிய மருத்துவர் அவர் கூறிய ஊழலுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய மக்களை பார்த்து தனக்குத்தான் மக்கள் ஆதரவு என்று நினைத்து தன்னிலை மறந்து அரசியல் ஆர்வம் கொண்டு, தான் தான் பெரிய நேர்மையான புதிய அரசியல்வாதி என்று நினைத்து அதை வைத்து சகல வழிகளிலும் பணம் சம்பாதிக்கும் வழியை தெரிந்து கொண்டு விட்டார்.
இதுதான் எமது ஆயுதப் போராட்ட வரலாறு தமிழ் மக்களுக்கு கொடுத்த பரிசு.
இப்போது இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களை ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் இவர் வல்லவர் இவர் நல்லவர் நாளும் தெரிந்தவர் நாட்டைக் காப்பாற்றியவர் என்று பல வகைகளிலும் தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
உண்மையில் இந்த தமிழ் தலைமைகள் செய்யும் பிரச்சாரத்தால் யாருக்கு லாபம் வரப்போகிறது இவர்கள் ஆதரிக்கும் நபர் ஜனாதிபதியாக வந்தால் இந்த தமிழ் தலைவர்களுக்கு பதவிகளும் பணப்பெட்டிகளும் கிடைக்கும் என்பது மட்டும் தான் உண்மை.
தமிழ் மக்களுக்காக உரிமைக்காக ஆரம்பத்தில் ஆயுதம் தூக்கி போராடிய இன்றைய வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக எப்படி எல்லாம் தமிழ் மக்களை மூளை சலவை செய்து வருகிறார்கள். தமிழ் மக்களும் அன்று போல் என்றும் முட்டாளாக இருப்பதுதான் வெட்கக்கேடு.
உண்மையாக கடந்த காலத்தில் கொலைகள் ஆள் கடத்தல்கள் கொள்ளைகள் செய்த இந்த தமிழ் தலைமைகள் இப்போது வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு மக்களுக்கு உண்மையாக சேவை செய்பவர்களாக இருந்தால் அனைத்து அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரது குறை நிறைகளை சரியான முறையில் தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். இவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தால் இலங்கையில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அதோடு குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் உரிமைகளும் கிடைக்கும் என்று பகிரங்கமாக அறிவித்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தங்கள் சுயநல பதவி பணத்துக்காக ஒருத்தரை மட்டும் ஆதரிக்க சொல்லி பிரச்சாரம் செய்வது வருந்தத்தக்கது.
இந்தக் கடந்த கால தமிழ் ஆயுத அயோக்கியர்கள் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு நல்லது. தமிழ் மக்களே சுயமாக சிந்தித்து யார் வந்தால் ஜனாதிபதியாக மக்களுக்கு நல்லது என்று யோசித்து வாக்கு போடுங்கள்
No comments:
Post a Comment