ஒரு புரியாத புதிர்
அந்த காலத்தில் ஜேவிபி கட்சி தமிழருக்கு எதிரானது. வடக்கு கிழக்கை சட்டமூலம் பிரித்தார்கள். அதனால் jvp எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சரி
பிரேமதாசா தமிழருக்கு எதிரானவர். அதனால் அவர் மகன் சஜித் பிரேமதாசாவை எதிர்க்க வேண்டும் அவர் தமிழருக்கு நல்லது செய்ய மாட்டார். என்று கூறுகிறார்கள்
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ஆதரவு பெற்று ஜனாதிபதியாக வந்த மஹிந்த ராஜபக்ஷா பல வருட போராட்டத்தை முடி கொண்டு வந்து பல அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டார்கள் அதனால் அவரின் மகன் நமால் ராஜபக்சே அவர்களையும் ஆதரிக்க கூடாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்கி பாதயாத்திரை போனவரும், 1977 ஆம் ஆண்டு முதல் தமிழர்களே எப்படி அழிக்கலாம் என்று திட்டம் போட்டு 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வரலாற்று புகழ் மிக்க நூலகத்தையும் எரித்து 1983 ஆம் ஆண்டு சரி வெளிக்கடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகளையும் படுகொலை செய்து, தமிழர்கள் சாவது பற்றி எனக்கு கவலை இல்லை என்று கொக்கரித்த JR ஜெயவர்த்தனாவின் மருமகனும் ஜெயவர்த்தனாவின் அரசியல் வாரிசுமான ரணில் விக்கிரமசிங்க எப்படி தமிழருக்கு ஜனாதிபதியாக வந்தால் ஆதரவு தருவாரா இல்லையா. அவரை ஆதரிப்பவர்கள் விளக்கம் கூற வேண்டும்
No comments:
Post a Comment