எனது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் இன்று எல்லோராலும் தேசியத் தலைவர் என்று அன்புடன் பல லட்சம் தமிழர்களால் குறிப்பிடப்படுபவரை பற்றி எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கொள்கை வேறுபாடுகள் இருந்து நாங்கள் அவரை விமர்சிப்பதை தவிர்க்க முடியாது.
ஆனாலும் சீமான் என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அவருக்கும் தேசிய தலைவருக்கும் நடந்த பத்து நிமிட சந்திப்பை வைத்து பல காலங்கள் அவருடன் பழகியது போல் கதை அளந்து கொண்டிருக்கிறார். அது பரவாயில்லை ஆனால் விடுதலை புலிகள் இயக்கத்தை யும, அதன் தலைவரையும் கடும் யுத்தம் காலத்தில் தனக்கு சாப்பாடு பரிமாறியதை பற்றியும், காட்டுக்குள் மிகப்பெரிய டேபிள் போட்டு விருந்து நடந்ததாகவும் தனக்காக பலவித சமையல்கள் செய்து போட்டி போட்டு சாப்பிட்டது போன்ற கதைகளை கூறி, விடுதலை புலிகளின் போராட்டத்தை அசிங்கப்படுத்துகிறார். ஒவ்வொரு போராளியும் அந்த நேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்கள். சீமான் மறைமுகமாக விடுதலை புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் அசிங்கப்படுத்துவது தெரியாமல் வெளிநாட்டில் வசிக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் அவருக்கு பெருமளவு பணம் அனுப்பி கொண்டு இருப்பது வெட்கப்பட வேண்டியது ஆகும்.
இந்தியாவில் சீமான் என்றால் இலங்கையில் ஒரு மருத்துவர். இந்த மருத்துவரை வெளிநாட்டில் இருந்து கொண்டு பெரும் அளவு பணமும் அனுப்பிக்கொண்டு பல இளைஞர் தமிழர்கள் ஆதரிப்பது அவர்கள் விருப்பம்.
ஆனால் கடும் பல போராட்டங்களின் பின்பு தனது குடும்பத்தையே போராட்டத்திற்கு பலி கொடுத்த தேசிய தலைவரோடு மருத்துவரை ஒப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தமளிக்கும் செயல்.
தேசியத் தலைவரையும் மருத்துவரையும் ஒப்பிட்டு அவருக்கு நிகரானவர் என்று புகழ் பாடும் கூட்டம் சந்தர்ப்பவாதிகள். இந்தக் கூட்டம் மருத்துவரை பேசிய தலைவர் அளவுக்கு புகழ்ந்து ஒப்பிட்டு பேசி வருவது இலங்கையிலேயே தேசிய தலைவரை அவமானப்படுத்துவதாகும். பலர் இப்பதிவை பார்த்து , நீயும் தேசியத் தலைவரை இப்போது புகழ்கிறாயே என்று கூறலாம். நானும் தேசிய தலைவரையும் சம காலத்து இன்னொரு இயக்க போராளி என்ற முறையில், ஆயிரம் குற்றம் குறை கண்டாலும் அவரை தங்கள் தேவைக்காக புகழ்ந்து புகழ் பாடிக் கொண்டு திரியும் கூட்டம் மருத்துவரோடு அவரை ஒப்பிட்டுப் பேசுவது பொறுத்துக் கொள்ள முடியாது
No comments:
Post a Comment