புதிய புரட்சியாளர் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்களின் சுயரூபம் வெளிவந்து கொண்டிருக்கிறது என நம்பப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் பெரிய பெரிய ஆயுதப் போராட்டங்களையும் கொலைகளையும் சிங்கள ராணுவத்தின் கடும் தாக்குதலையும் சமாளித்து எழுந்து வந்தவர்கள், இன்று வரை நிலைமைகளை ஆராய்ந்து பார்த்து சரியான முடிவுகள் எடுக்கத் தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது. மருத்துவர் அர்ச்சனா கூறிய ஊழல்கள் பல வருடங்காலமா நடந்து இருப்பது உண்மை. தமிழ் பொதுமக்கள் அந்த ஊழலுக்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பிடித்து அதை சரி செய்து இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு குற்றச்சாட்டுகள் சொன்ன மருத்துவர் அர்ஜுனாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி அவர் புகழ் பாடி, அவரே தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக புகழ் பாடி கொண்டு இருக்கிறார்கள். நான் முதல் கூறியவாறு இலங்கையில் இன்னொரு சீமான் உருவாகி கொண்டு வருகிறார் என.
இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் வெளிநாட்டில் இருக்கும் சில முக்கிய இலங்கை தமிழர்கள் மருத்துவர் அர்ச்சனாவின் கடன்களை அடைத்து உதவி செய்துவிட்டு, மருத்துவரை இயக்குவதாக தகவல்.
அதே நேரம் தென்னிலங்கை சிங்கள கட்சிகளுக்கு ஜனாதிபதி தேர்தலில் தனக்கு பெரும்பான்மையான வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆதரவு இருப்பதாகவும் தன்னால் அவர்களுக்கு உதவ முடியும் என்றும், மறைமுகமாக பேரம் பேசுகிறார் என்றும் ஊழலை எதிர்க்கும் வைத்தியர் தமிழ் மக்களை மீண்டும் முட்டாளாக்கிவிட்ட தாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இப்பொழுது அவரின் தொலைபேசி உரையாடல் ஒன்று அவரின் உண்மை முகத்தை வெளி கொண்டு வந்துள்ளது.
No comments:
Post a Comment