பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 23 September 2024

இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்தை இலங்கைத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

  வெற்றிசெல்வன்       Monday, 23 September 2024

இலங்கையின் தமிழ் மக்களின் தமிழ் தலைவர்களும் அவர்களது ஆமாம் சாமி போடும் நண்பர்களும், பெரும்பாலான அரசியல் அறிவற்ற அரசியல்ஆய்வாளர்களும் அன்று முதல் இன்று வரை முட்டாள்தனமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

அவர்களது கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசியலில் ஆதரவாக இருப்பதில்லை மாறாக தமிழ் மக்களுக்கு ஆளுங்கட்சி எதிராகவே செயல்படவே உதவி செய்கிறது 


இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவியேற்று ஒரு நாள் ஆவதற்குள் அதற்குள் தமிழ் மக்களை பயமுறுத்தும் விதமாக எத்தனை விதமான கருத்துக்களை கூறுகிறார்கள். இவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள். வடக்கு கிழக்கே பிரித்தவர்கள். ஆட்சியை இந்தியா கவிழ்த்து விடும். இப்படிப் போன்ற மட்டமான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் திணித்து, இலங்கையின் வளர்ச்சியில் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. இவர்கள் மஹிந்தா குடும்பம், பிரேமதாசா குடும்பம், ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் தான் தமிழர்களை பாதுகாப்பாக உரிமையியல் தந்து வாழ வைக்க கூடியவர்கள் என்று வாய்க்கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் அது இந்த பிரச்சாரம் தமிழ் மக்களுக்கானது அல்ல தங்களுக்கு அமைச்சர் பதவியும் பணமும் பெற்றுக் கொள்ள மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். 

இலங்கையில் சிங்கள மக்கள் வாக்குரிமையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள். வாக்குரிமையில் அந்த மாற்றத்துக்கு நாங்கள் உரிமை இல்லாதவர்களாக இருந்தாலும் இனி மேல் சரி மாற்றத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். 


புதிய ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் இலங்கையில் இனவாதம் பேசாமல்., எல்லா இன மக்களையும் இலங்கைமக்கள் எனபார்த்து அரசாங்கத்தை நடத்தினால் நல்லது தானே.

புதிய மாற்றம் வருவதை இப்போது இருக்கும் எந்த ஒரு தமிழ் சீர்கெட்ட தலைவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் பிரச்சினைகளும் தீர்ந்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாது. 

சிலவேளை இதற்காகவே புதிய அரசாங்கத்துக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து இவர்கள் சதி செய்யக்கூடும் மக்கள் அவதாரமாக இருக்கவும். 


என்று புதிய ஜனாதிபதியை விட மஹிந்தா குடும்பம்,, பிரேமதாசா குடும்பம், ரணில் விக்கிரமசிங்க. போன்றவர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வளவு கீழ்த்தரமான செய்திகள். 


இலங்கையில் தமிழர்களை பாதுகாப்போம் என்று கூறி ஆயுதம் தூக்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள் சொந்ததமிழர்களுக்கு செய்யாத கொடுமைகளையா புதிய ஜனாதிபதி செய்துவிட்டார். சொந்த தமிழ் மக்களையே கொலை செய்து கற்பழித்து வழிப்பறி கொள்ளைகள் செய்து கடத்தி கொலை செய்து எல்லாவித அநியாயங்களையும் செய்த இயக்கங்களையும் இயக்கத் தலைவர்களையும் இன்றும் நாங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். 

  இந்த தமிழ் தலைவர்களின் நம்பிக்கை வைத்து போராட்டத்துக்கு வந்து உயிரிழந்த ஆயிரமாயிரம் இளைஞர்களின் உயிரும் அவர்களை குடும்பத்தாரின் சோகமும் தான் என் கவலைக்குரியது. 

  தயவுசெய்து புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் எதிராக கருத்துக்கள் கூறாமல் அவர்கள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்று பாருங்கள். 

இதுவரை பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட தமிழ் தலைவர்கள் வழிகாட்டிய கடந்த காலஇலங்கை ஜனாதிபதிகளை ஏற்றுக்கொண்டோம். ஆனால் தமிழ் பொது மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தமிழ் தலைவர்களுக்கு பணப்பெட்டிகளும் பதவிகளும் பார் நடத்த வசதிகளும் லைசென்ஸ்களும், பல கோடி பெருமதியான கார்கள் வாங்க பர்மீட்டுகளும் தாராளமாக கிடைத்தன. தங்களுக்கு கிடைத்த இந்த வசதிகளை தான் அவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த வசதிகள் என்று கூறி வருகிறார்கள். 


தயவுசெய்து இலங்கையில் இனிமேல் தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், சிலவேளை தேவையானஉரிமைகள் கூட கிடைக்க இலங்கையின் ஜனாதிபதி நினைத்தால்மட்டுமே முடியும்.

அதோடு சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு உரிய அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி தெரிந்து கொள்ள சிங்கள மக்களிடமும் போய் உண்மை நிலைகளை கலந்து பேசுங்கள். இனி இலங்கையில் இனவாத அரசு வேண்டாம். 


புதிய அரசாங்கத்திற்கு புதிய ஜனாதிபதி அனுர குமார திசா நாயாவுக்கு ஆதரவு கொடுங்கள். உரிமையோடு போய் எங்கள் பிரச்சனைகளை கூறுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.



logoblog

Thanks for reading இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்தை இலங்கைத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment