பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 22 October 2024

சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்காமல் இருப்பதற்கு காரணமே தமிழ் தலைமைகள்தான்

  வெற்றிசெல்வன்       Tuesday, 22 October 2024

இலங்கையின் சிங்களப் பகுதிகளில் பெருமளவு சிங்கள மக்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு, இதுவரை காலமும் இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள்  ஒதுக்கப்பட்டு, இதுவரை ஆட்சி செய்யாத ஜேவிபி கட்சியின் புதிய பரிமாணமான NPP கட்சியின் தலைவர் அனுர குமார திசை நாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக வந்த பின்பு தமிழர் பகுதிகளிலும் பொதுமக்களிடம் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த தமிழ் பொது மக்களின் மாற்றத்தால் அதிர்ந்து போய் உள்ள இதுவரை காலமும் பதவியும் பணமும் பெற்று தமிழ் மக்களை நீண்ட காலம் ஏமாற்றி வந்த தமிழ் தலைவர்கள் என்போர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் தாங்களும் அப்படியும் பதவிகள் பெற வேண்டும் என்ற ஆசையில் புதிய கட்சிகள் தோன்றுகின்றன புதிய கூட்டுகள் தோன்றுகின்றன பழைய கட்சிகள் உடைகின்றன. இதுவரை காலமும் இல்லாதவாறு பல கட்சிகளும் பல சுயேச்சை குழுக்களும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவென்று பதவி ஆசையில் பல பொய்களைக் கூறி, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 


இம்முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் இனவாதம் மதவாதம் முதல் முறையாக பேசப்படவில்லை என்பதே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் தமிழ் பகுதிகளில் தமிழ் தலைவர்கள் இதுவரை இல்லாதவாறு தமிழ் தேசியம் பற்றியும் தமிழர் உரிமைகள் பற்றியும் இனவாதங்களும் பேசியதும் நடந்தது. 

                நடக்கவிருக்கும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் NPP கட்சியும் தமிழர் பிரதேசங்களில் போட்டியிடுவதால், பல ஊழல் பெருச்சாளிகள் இதுவரை காலமும் தமிழர்களை ஏமாற்றியது இனிமேல் நடக்காது என்ற பயத்தில் அவர்களும் அவர்கள் ஆதரவாளர்கள் பலரும் இப்பொழுது தமிழர் பாதுகாப்பு தமிழ் தேசியம் தமிழர் உரிமைகள் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்கள். தமிழர் பகுதிகளில், சிங்களக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது, தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் வரவேண்டும் இப்போதுதான் தமிழர் உரிமைகள் பற்றி பேச முடியும் உலக நாடுகளும் கவனத்தில் கொள்ளும், அப்போதுதான் சிங்கள அரசுடன் தமிழர் உரிமைகள் பற்றி பேசி தமிழர்களுக்கு உரிமைகள் பெற முடியும் என்று, பேச்சின் மூலம் தொடர்ந்து தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவார்கள். இன்று புதிய இலங்கை ஜனாதிபதி தமிழர்களுக்கு எதிரானவர் என்று காட்டுவதற்கு பலரும் முயற்சி செய்கிறார்கள். இதுவரை இருந்த ஜனாதிபதிகள் எல்லாம் தமிழருக்கு நல்லது செய்தது போல இவர்கள் பேச்சு இருக்கிறது. 


இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து எல்லா சிங்கள அரசியல் கட்சிகளும் சிங்கள தலைவர்களும் இனவாதம் பேசியே பதவிக்கு வந்தார்கள் . அந்த காலத்தில் இருந்த தமிழர் பகுதி தமிழர் தலைவர்கள் பதவிக்கு வந்த சிங்கள கட்சிகளிடம் தங்களுக்கு பதவி பெறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்கள். தமிழ் தலைவர்கள் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் தமிழருக்கு எதிரான செயல்பாடுகள் இவற்றையும் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுகள் தொடர்ந்து 1977 பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற ஆசனத்தை பிடிப்பதற்காகவே பெரும் உணர்ச்சிகரமாக தமிழர்களை இந்த தேர்தல் தமிழ் ஈழம் பெற மக்களின் ஆணையை பெறுவதற்காகவே என்று கூறி ஏமாற்றினார்கள். தமிழ் மக்களும் குறிப்பாக இளைஞர்களும் இதை உண்மை என்று நம்பி கடுமையாக வேலை செய்து அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி அமுதலிங்கம் தலைமையில் வெற்றி பெற்றார்கள் 

    சிங்கள பகுதியில் தீவிரஇனவாதம் பேசிய unp கட்சி J.R ஜெயவர்த்தன பெரும் அளவில் வெற்றி பெற்று இலங்கை பிரதமரானார். அதிசயத்திலும் அதிசயமாக இரண்டாவது கூடுதல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியானது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். பதவிகள் கிடைத்தவுடன் அதோடு எதிர்பாக்காத எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கிடைத்தவுடன் வாக்கு சேகரிப்பதற்காக சொன்ன தமிழ் ஈழம்தான் முடிவு என்ற கோஷம் கொள்கை குப்பை கூடையில் போட்டார்கள். வளமை போல் சிங்களத் தலைவர்களுடன் தோலில் கை போட்டுக்கொண்டு பதவிகளும் தங்களுக்கு தேவையான வசதியலையும் பெற்றுக் கொண்டு தமிழர்களை ஏமாற்றினார்கள். ஜெயவர்தனா தமிழர்களே ஏமாற்ற அமிர்தலிங்கத்துக்கு மாவட்ட சபை என்ற உப்பு சப்பில்லாத ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்தார். அமிர்தலிங்கமும் இதை சிறந்த தீர்வு என்று தமிழ் மக்களிடம் தூக்கி கொண்டு வந்தார். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கெட்ட காலம், இவரின் தேர்தல் கால ஏமாற்று கோசமான அடைந்தால் தமிழீழம் என்ற ஏமாற்று கோசத்தால் கவரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனித்தமிழ் ஈழம் பெற அளவித ஆயுத குழுக்களாக தோன்றி அரசாங்கத்துக்கு மறைமுக எதிர்ப்பை காட்டத் தொடங்கினார்கள். இளைஞர் இயக்கங்களின் ஆயுத தோற்றம் இலங்கை பிரதமராக இருந்து ஜனாதிபதியான ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் அவர்களால் இனிமேல் தமிழர்கள் மேல் தலைமை தாங்க முடியாது என்பதை தெரிந்து கொண்டார். 

ஆனாலும் மாவட்ட சபை தேர்தல் நேரம் 1981 ஆண்டு தனது ump கட்சி மந்திரி மார்களையும் ரவுடிகளையும் யாழ்ப்பாணம் அனுப்பி ஆசியாவில் புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகத்தை எரித்து அழித்தார். யாழ் நகரையே எரியுட்ட செய்தார்.

அதன் பின்பு தீவிரமடைந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் அதை முறியடிக்க கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட தமிழ அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். என் பின்பு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டப் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கி இயக்கங்களை இலங்கை அரசுக்கு எதிராக தனது நலனை முன்னிறுத்தி வழிநடத்த தொடங்கியது. இந்த நேரத்தில் திடீர் வளர்ச்சி பெற்ற இயக்கங்கள் தங்கள் தங்கள் அப்பாவி தோழர்களே கொலை செய்வதும், மற்ற இயக்கங்களை கொலை செய்வதுமாக தங்களின் யார் பெரியவன் என்ற ஈகோவால் தமிழர்களின் கொலைகார இயக்கமா மாற தொடங்கினார்கள். விடுதலைப்புலிகள் உச்சகட்டமாக telo இயக்கத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொலை செய்தார்கள் அதில் 400க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிருடன் டயர் போட்டு எரித்து கொல்ல ப்பட்டார்கள். இதை முன் நின்று செய்தது பின்னாளில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து இறந்த தியாகி திலீபன் தான். புளொட் இயக்கம் பயிற்சிக்கு வந்த அப்பாவி இளைஞர்களை சந்தேகப்பட்டும் பொழுதுபோக்குக்காகவும் தமிழ்நாட்டு முகாம்களில் வைத்து கொலை செய்து புதைத்தார்கள். 

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு இந்தியா அமைதிப்படையை எதிர்க்க தமிழ் மக்களின் பரம எதிரியா கருதும் இலங்கை அரசின் ஜனாதிபதியுடன் விடுதலை புலிகள் நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று கூறி கைகோர்த்துக்கொண்டு, இந்திய அமைதிப்படையையும் மற்ற இயக்கங்களின் தமிழ்போராளிகளையும், ஆதரவாளர்களையும் சகட்டு மேனிக்கு கொலை செய்தார்கள். இது சிங்கள மக்களும் சிங்கள தலைவர்களும் எதிர்பார்க்காத மாற்றம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இதே நேரம் மற்ற இயக்கங்கள் இந்திய அமைதி காப்பு படையுடன் சேர்ந்து விடுதலை புலிகளை கொலை செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அப்பாவை தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் கொலை செய்து கொள்ளையடிக்கும் தொழிலையே செய்தார்கள். இதுவும் சிங்கள மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருந்தது. அதே நேரம் புளொட் செயல் அதிபர்  உமா மகேஸ்வரன் தமிழர்களுக்கு எதிரியான இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித அதுல முதலியின்  பாதுகாப்பில் கொழும்பிலிருந்து கொண்டு, தனது இயக்கத்தை சிங்கள கட்சிகளுக்கு கூலிப்படையாக செயல்பட வைத்துக்கொண்டு தனது பங்குக்கு சிங்கள மக்களுக்கு சிங்கள தலைவர்களுக்கு உதவியாக இருந்தார். 

1987 பின்பு தமிழ் இயக்கங்கள் இயக்கங்கள் ஆரம்பித்த நோக்கத்தை விட்டு முடிந்த அளவு தமிழ் இளைஞர்களையே மக்களையே தமிழ் பெண்களை கொலை செய்து மகிழ்ந்தார்கள். இந்திய படை போன பின்பு காட்சிகள் மாறின. சிங்கள அரசின் துணையுடன் ஆயுதங்கள் பெற்று பெரும் வளர்ச்சி பெற்று, தங்களுக்கு உதவி செய்த இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவையே கொலை செய்தார்கள். மற்ற இயக்கங்களின் இளைஞர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் விடுதலை விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இதே நேரம் மற்ற ஆயுத இயக்கங்கள் சிங்கள ராணுவ  சேர்ந்து கொண்டு கோடிக்கணக்கான பணமும் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளின் அழிக்கிறேன் என்ற போர்வையில் அப்பாவி தமிழ் மக்களையும் இளைஞர்களையும் கொலை செய்து தமிழ் பெண்களை கற்பழித்து கொலை செய்து தமிழ் வீடுகளில் கொள்ளை அடித்து தங்களே வளர்த்துக் கொண்டார்கள். தமிழர்களை தமிழ் இயக்கங்களே கொலை செய்யும் நடவடிக்கை 2009 விடுதலைப்புலிகள் அழியும் வரை நடந்தது உலகம் அறியும் 


அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழ் கட்சிகள் இன்று வரை எந்த அரசாங்கத்திடமும் எந்த ஜனாதிபதிகளும் தமிழர் உரிமைகள் பற்றி பெரிய போராட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. பதவிகளும் பணப்பெட்டிகளும் மட்டுமே அவர்களுக்கு தேவையாக இருந்தது. சில தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்ற சிறு சிறு போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்துவதாக காட்டிக் கொண்டு தாங்கள் தான் உண்மையான போராளிகள் என்று காட்டிக் கொண்டார்கள். 


சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இருந்த சிங்கள தலைவர்களுக்கும் பிரதம மந்திரிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிகளுக்கும் தமிழ் தலைவர்களை பற்றி நன்கு தெரிந்திருப்பதால் இவர்கள் தமிழர்களுக்கு உரிமைகள் கேட்டு மனசார போராட மாட்டார்கள் என்று தெரிந்துள்ளது அதனால் அவர்கள் இவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதோடு இந்த தமிழ் தலைவர்கள் ரகசியமாக சிங்கள தலைவருடன் ஜனாதிபதியுடன் பேச்சுக்கள் நடத்தி தங்களுக்கு தேவையான வாய்ப்பு வசதிகள் பணப்பெட்டிகள் வாங்கிக் கொள்வது சிங்கள தலைவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இந்த தமிழ் தலைவர் தமிழ் பகுதிகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கருத்துக்கள் சொல்லிவிட்டு அடுத்த நாள் ரகசியமாக கொழும்பு போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பண பட்டியல் வாங்கிக் கொண்டு திரும்புவது வாடிக்கை. இந்த மாதிரி பதவிக்கும் , பணத்துக்கும் அடிமையான தலைவர்களை வளர்த்து விடுவது இலங்கை அரசாங்கத்துக்கும் சிங்கள மக்களுக்கும் நன்மை என்பது தெரிந்து கொண்டார்கள். இந்த மாதிரியான தமிழ் தலைவர்களை அடக்கி விட்டால், நாளை உண்மையாகவே மக்களுக்காக போராடக்கூடிய தமிழ் தலைவர்கள் உருவாகி விடுவார்கள் என்ற பயம் அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த மாதிரி காவாலித்தனமான தமிழ் தலைவர்களை உருவாக்குவது போராட்டத்தை முடக்குவதற்கு தான். 


இதற்குத்தான் 1983 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனாவை சில உலக நாடுகள் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாக கண்டித்திருந்தன. மிதவாத தலைவரான அமிர்தலிங்க உட்பட தமிழர் கூட்டணி எம்பிளின் பதவிகளை பறிக்காமல் இருந்திருந்தால் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இந்த அளவு வளர்ந்து இருக்காது. அமுதலிங்கத்தின் மூலம் அப்போது தமிழ் மக்களை சமாதானம் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். 


2009 க்கு பின் விடுதலை புலிகள் அழிந்த பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தமிழர் உரிமைகள் பற்றி பெரிதாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் போராட்டமும் நடத்தவில்லை. எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் போகும்போது தமிழர் உரிமைகள் பற்றி மட்டுமே பேசிவிட்டு கடந்து செல்வார்கள். ஆனால் 2009 க்கு பிறகு இன்று வரை தங்களுக்கு தேவையான பணப்பெட்டிகளும் பதவிகளும் வாங்க மட்டும் தவறவில்லை 

இவர்களைப் பற்றிய அறிந்த எந்த சிங்கள அரசியல் தலைவரும் ஒரு காலமும் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுப்பது பற்றி யோசிக்க மாட்டார்கள். காரணம் தமிழ் தலைவர்கள் யாரும் தமிழர்களுக்கு உண்மையாக இருக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். இது சிங்களத் தலைவர்களின் தவறு அல்ல. தமிழ் அயோக்கியர்கள் தலைவர்களாக இருந்து செயல்பட்ட விதமே. 


புதிய அரசாங்கம் அனுரகுமார தலைமையில் வந்தவுடன் இவர்களுக்கு தங்களின் கடந்த கால பதவி பண பெட்டிகள் வாங்க முடியாது ரகசிய பேரங்கள் நடத்த முடியாது என்ற நிலை தெரிந்து விட்டது. அதனால் தான் இன்று இவர்கள் தமிழ் தேசியம் தமிழர் உரிமைகள் தமிழ் பகுதிகளில் தமிழர் கட்சிகள் பிரதிநிதிகள் தான் வரவேண்டும் என்று தமிழ் மக்களை மூளை சலவை செய்து வருகிறார்கள். தங்களுக்கு பதவிகள் சரி கிடைக்கட்டும் என்று. 


புதிய அரசாங்கம் தமிழ் மக்களை சிந்திக்க வைத்ததும் அல்லாமல், தமிழ் மக்களை இதுவரை காலம் ஏமாற்றி வந்த தமிழ் தலைவர்களையும் பயப்படவும் வைத்துள்ளது என்பது நல்ல விடயமே. 

இனிமேல் சரி கடந்த காலத் தவறுகளில் இருந்து விடுபட்டு தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கு நல்ல சேவை செய்யக்கூடிய தலைவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும்.




logoblog

Thanks for reading சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்காமல் இருப்பதற்கு காரணமே தமிழ் தலைமைகள்தான்

Previous
« Prev Post

No comments:

Post a Comment