1986 ஆண்டு விடுதலை புலிகளால் தடை செய்யப்பட்டு கொலை செய்ய தேடப்பட்ட Telo,plote,தோழர்களைeprlf தோழர்கள் காப்பாற்ற முற்பட்டபோது அதை தடுத்து அவர்களை துரத்திய அந்த நேரம் பொறுப்பில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பணம் பதவிக்காக தனது தலைவனே பத்மநாபாவையே கொலை செய்ய விடுதலை புலிகளுக்கு உதவி செய்தவர், அதுபோல் திட்டமிட்டு பதவிக்காக தனது தலைவணையே மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்து, பின்பு அந்த கொலையை மறைக்க உண்மை தெரிந்த தோழர்களையே கொலை செய்த ,மற்றவர்கள் சிலரைகொலை செய்த முயற்சித்த சித்தார்த்தன் அவர்களும் இன்று கூட்டு சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள் .
இந்த மாதிரி துரோகிகளை தமிழ் மக்கள் அடியோடு அரசியலில் இருந்து ஒதுக்கி தள்ள வேண்டும்
மனுநீதி
நினைவு மீட்டல் - 1986
——————————
விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ரெலோ மற்றும் புளொட் இயக்க கிழக்குப் பிராந்திய போராளிகள் 1986 ஏப்ரலுக்குப் பின்னான காலத்தில் போக இடம் தெரியாமல் உயிர் காக்க ஓடி வந்த உடுவில் களஞ்சிய முகாமுக்கு நானே அந்த நேரத்தில் பொறுப்பாக இருந்தேன், (பொறுப்பாக இருந்த தோழர் மோகன் (வெற்றிலை) தொடர்பற்றுப் போனார், என்னவானார் என்பதை அறிய முடியவில்லை அதனால் உதவியாக இருந்த நானே பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை அந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டது.)
உரும்பராய் தலைமையகத்துக்குச் சென்று களஞ்சிய முகாம் இயக்கத் தோழர்களுக்கும் மற்றும் உயிர்த் தஞ்சம் கோரியுள்ள சகோதர இயக்க ரெலோ மற்றும் புளொட் இயக்க போராளிகளுக்கும் உணவுக்காகச் செலவான பணத் செலவீனத்தை தருமாறு சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்ட போது, இடுப்பில் கட்டியிருந்த் கைத்துப்பாக்கியை மேசை மேலே வைத்து விட்டு கதிரையில் இருந்தவாறு தனது இரு கால்களையும் அதே மேசை மேலே போட்டவாறு இயக்கத்தின் வேலைத் திட்டத்துக்கு ஏற்ப செயற்பட முடியா விட்டால் எல்லோரும் முகாமை விட்டு வெளியேறலாம் என்று கர்ஜித்தார் , அது மட்டுமா “நீர் அப்பரின் ஆளாம் உண்மையா?” எனக் கேட்டதுடன் எந்தச் செலவீனமும் தரமுடியாது என்றார்.
யார் அந்த அப்பர்? .....
வேதனையுடன் திரும்பிய போது கிழக்கின் கல்லாறைச் சேர்ந்த தோழர் நவம் ஓடி வந்து சிறு தொகையை எனது கைக்குள் திணித்து இது இயக்கப் பணமல்ல (தொகையை மறந்து விட்டேன் 200 ரூபாய் என நினைக்கின்றேன்) எனத் தந்தார்.
இந்தப் பணம் களஞ்சிய முகாமின் மாதாந்தச் செலவுக்கென கடன்பட்ட உடுவில் கிறவல்குழி கடைக்கு செலுத்தப் போதுமானதல்ல.
உரும்பராயில் இருந்து உடுவில்லுக்கு துவிச்சக்கர வண்டியில் நானும் தோழர் பெனாண்டோவும் வருவதற்கு இடையில் எனது பொறுப்பில் இருந்த உடுவில் களஞ்சிய முகாம் காரணமின்றியே எனக்குச் சொல்லப்படாமல் மூடப்பட்டு உள்ளே இருந்த ரெலோ மற்றும் புளொட் போராளிகளும் கூடவே எமது இயக்க போராளிகளும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் உத்தரவுக்கமைய வெளியே துரத்தப்பட்டார்கள், அல்லது வெளியேற்றப்பட்டார்கள். அந்த நிமிடத்தில் இருந்து அங்கிருந்த அந்த தோழர்கள் என்னவானார்கள் என இன்று வரை என்னால் அறிய முடியாமலே உள்ளது வேதனையே.
கடனை அடைக்க முடியாது என்பதால் கையில் இருந்த இயக்கத்துக்குச் சொந்தமான துவிச்சக்கர சைக்கிளை விற்று கொஞ்சப் பணம் செலுத்தினோம், முழுக் கடனையும் கொடுத்து விட முடியாதமையால் அன்றிரவு தங்க இடமில்லாததால் மானிப்பாயை அண்டியுள்ள சங்குவேலியிலுள்ள கடையொன்றின் வாசலில் நித்திரையைக் கழித்து அடுத்த நாள் வேலை தேடி அநாதையாகி கூலி வேலை தேடி கிடைத்த பணத்தைப் பெற்று கடனை அடைத்தேன். இதுவெல்லாம் ஈழ விடுதலையை நேசித்ததால் எனக்குக் கிடைத்த வெகுமானம் என்பேன்.
-------------- ஜனன்.
No comments:
Post a Comment