மறைக்கப்பட்டிருந்த ஒரு துரோகம் :
நன்றி Ajeevan Veer.
JR , விஜய குமாரணதுங்கவை சிறையில் போடும் போது ரெஜினோல்ட் குரேயையும் தூக்கி உள்ளே போட்டார். அப்போது ரெஜினோல்ட் குரே முக்கியப்படுத்தப்படவில்லை. காரணம் அப்போது அவர் இங்கிலீஸ் டியுசன் மாஸ்ட்டராக இருந்ததுதான். எனவே அது எனக்கும் மறந்து போனது.
விஜய குமாரணதுங்க சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை விடுவிக்கச் சொல்லி சந்திரிகா JRடம் சென்று கேட்ட போது " அவனை நடிக்க மட்டும் சொல்லு" எனச் சொன்னார். விஜய அதைக் கேட்கவில்லை. வெளியே வந்தும் அரசியலை தொடர்ந்தார். UNP அதாவது JR மற்றும் பிரேமதாச எப்படியாவது விஜய குமாரணதுங்கவை அழிக்க நினைத்தனர். ஆனால் JVP முந்திக் கொண்டது. நேர்மை மற்றும் மக்கள் செல்வாக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாண்டி விஜய குமாரணதுங்கவுக்கு வளர்ந்த போது JVP யால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
இதில் ஒரு சதி என்னவென்றால் விஜய குமாரணதுங்க புளொட்டோடு மிக நெருக்கமாக இருந்தார். வவுனியாவிலிருந்து உமா மகேஸ்வரனை கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தார். புளொட் அமைப்பின் சிலர் அவரது பாதுகாவலர்களாக இருந்தார்கள். அதேசமயம் புளொட் JVPக்கு ஆயுத பயிற்சி வழங்கியது. அவர்களோடும் இருந்தார்கள். 1985களிலேயே JVPயை சேர்ந்த சிலர் பயிற்சிக்காக சென்னை வந்திருந்தனர். அவர்களில் சிலர் சில பிரச்சனைகளில் மாட்டி தமிழ் நாட்டு சிறையிலும் இருந்தனர். அவர்களில் ஒருவர் கனடாவில் வாழ்கிறார். விஜய குமாரணதுங்கவை கொலை செய்யப் போனவர்களில் புளொட் அமைப்பினரும் இருந்தனர். கொலை தொடர்பான கைதில் அவர் அது தெரிய வந்தது.
விஜய குமாரணதுங்க படுகொலையான நேரத்தில் அவரது பாதுகாப்புக்கு இருந்த எவரும் இருக்கவில்லை. எனவே அவரது சாவின் பின்னால் புளொட்டும் இருந்தது எனும் சந்தேகத்தை விஜய குமாரணதுங்கவின் நண்பர்கள் என்னோடு பேசினார்கள். பொதுவாகவே இயக்கங்கள் நன்றி மறக்கும் தன்மை கொண்டவை. தமது தேவைக்காக எவரையும் பலியிடும். இதை அனைவரும் உணர வேண்டும். தமக்காக போராட வந்தவர்களையே கொலை செய்யத் துணிந்த போது இவை எம்மாத்திரம்?
எனவே ரெஜினோல்ட் குரேயை விட அதிகமாக விஜய குமாரணதுங்கவுடன் அதிகமாக அரசியல் விடயங்களில் தெரிந்தவர் ஒசி அபேகுணசேகர. இவர் விஜய குமாரணதுங்கவின் கட்சி தலைவராக இருந்தார்.எனவே ஈழ போராளிகளை, காணப் போன அத்தனை இடங்களுக்கும் போய் வந்தார். விசேடமாக புலிகளை யாழ் சென்று சந்தித்தார். அவரும் கூட புலிகளின் பெண் தற்கொலை குண்டுக்கு காமினி திசாநாயக்கவின் தேர்தல் மேடையில் வைத்துக் 1994ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment