பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 18 October 2024

பல இயக்க உட்கொலைகளை செய்த சித்தார்த்தன் சிவனேசன் பவன் பாராளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிடுகிறார்கள் இவர்கள் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும்.

  வெற்றிசெல்வன்       Friday, 18 October 2024
புளொட் இயக்கம் இலங்கை தமிழ் மக்களின் காவலனா அல்லது தமிழ் மக்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் துரோகத்தின் உச்சமா

பல ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களாலும் பல நல்ல தலைவர்களாலும் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலை கழகம் புளொட் அன்றும் தலைவரின் சர்வாதிகார போக்காலும், அன்று தமிழர்களின் எதிரியான உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலிதா அதுல முதலியின்  நட்பாலும், தமிழர் விடுதலைக்கும் எமது இயக்கத்துக்கும் செய்த துரோகம் போல, உமா மகேஸ்வரன் துரோகம் செய்துவிட்டார் என்று சித்தர்தனும் ,மாணிக்கம் தாசனும் கழகத் தோழர்களே உசுப்பி விட்டு அவரை மரண தண்டனை என்று கூறி கொலை செய்துவிட்டு பின்பு அவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கழகத் தோழர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு பின்பு சித்தார்த்தன் மாணிக்கதாசனை விடுதலைப் புலிகள் உதவியுடன் கொலை செய்ததாக தகவல்கள். 

அந்த காலத்தில் வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் கொள்ளையடித்த பணங்களும் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணங்களும் ஆட்களை கடத்தி பெறப்பட்ட பணங்களும் வங்கிகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணங்களும் வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட பணங்களும் முழுமையாக இயக்கத்துக்கு வராமல் தனிப்பட்ட உமா மகேஸ்வரன் அவர்களின் தனிப்பட்ட கணக்குக்கு சென்றது போல், 
இன்று மாணிக்கம் தாசனால் பல வழிகளில் சேகரிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம், பின்னர் ஆர்ஆர் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களாக சித்தார்த்தனின் உதவியுடன் மாற்றப்பட்டதாக கழகத் தோழர்கள் கூறி வருத்தப்பட்டார்கள். இப்போது RR பேரில் இருந்த சொத்துக்கள் எல்லாம், இன்று இருக்கும் கழகத் தோழர்களுக்கும் மத்திய குழுவுக்கும் தெரியாமல் கழகத்தின் தனிப்பட்ட ஒருவரின் பெயருக்கு இன்று மாற்றப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்துக் கேட்கும் பல பழைய தோழர்களை கொலை செய்து விடுவதாக பயமுறுத்தல் நடக்கிறது என்றும் பல பொதுவானவர்கள் கூறி கவலைப்பட்டார்கள். 
புளொட் இயக்கம் தொடர்ந்து தமிழ் மக்களுக்கும் பழைய இயக்கத் தோழர்களுக்கும் துரோகங்கள் செய்து வருவதாக அறியக்கூடியதாக உள்ளது. இன்று பல இடங்களில் இயக்கத்துக்காக சொத்துக்களையும் வீடு வாசல்களையும் இழந்து பழைய தோழர்கள் ஒதுக்கப்பட்டு விடுதலைப் புலிகளில் இருந்த வசதியான தோழர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இது உண்மையா என்று கழகத் தோழர்கள் தான் கூற வேண்டும்.
எமது இயக்கம் நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காகத்தான் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் பேச்சைக் கேட்டு எமது அன்புக்குரிய தலைவர் உமா மகேஸ்வரன் மரண தண்டனைக்கு பழைய தோழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது. உமா மகேஸ்வரன் அன்று லலித் அதுல முதளியின் உதவியோடு தட்டிக் கேட்கும் இயக்கத் தோழர்களே தட்டி வைத்தார். இன்று சித்தார்த்தன் தனக்கு எதிராக இருக்கும் இயக்கத் தோழர்களை ரணில் விக்கிரமசிங்கவின் உதவியோடு தட்டிக் கேட்பதாக சில செய்திகள் உண்மையா. 
இனிமேலும் இலங்கை தமிழ் மக்களுக்கு புளொட் இயக்கம் தேவையா.
சில ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும்.



logoblog

Thanks for reading பல இயக்க உட்கொலைகளை செய்த சித்தார்த்தன் சிவனேசன் பவன் பாராளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிடுகிறார்கள் இவர்கள் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும்.

Previous
« Prev Post

No comments:

Post a Comment