மாகாண மட்டமே அதிகூடிய அதிகாரப்பகிர்வு; வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை
2017-09-22 10:26:25 | General
1. தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாயம் 1 மற்றும் 2 ஆகியவற்றினால் உள்ளடக்கப்படும் விடயங்கள்:
உறுப்புரைகள் 1 மற்றும் 2
* இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாயிருப்பதோடு, பாராதீனப்படுத்த முடியாததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.
* இலங்கை பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இருத்தல் வேண்டும்.
* பிரிந்து செல்லுதலை (நாட்டைக் கூறுபோடுதல்) தடுக்கும் பொருட்டு அரசியலமைப்பில் விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்
* அதி கூடிய பகிர்வு வழங்கப்படல் வேண்டும்.
* அரசியலமைப்பு இலங்கையின் மீயுயர் சட்டமாயிருத்தல் வேண்டும்.
அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் (தேவைப்படுமிடத்து) மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
விடயங்கள்:
ஜனாதிபதி அரசியலமைப்பு சபையை தாபிப்பதற்கான தீர்மானம் பற்றி உரையாற்றுகையில்; தெற்கில் உள்ள மக்கள் "பெடரல்' (Federal) எனும் பதம் தொடர்பாக அச்சமடைந்திருக்கும் வேளையில் வடக்கில் மக்கள் "யுனிற்றரி' (Unitary) எனும் பதம் தொடர்பிலும் அச்சமடைந்திருந்தனர் எனக் கூறினார்.
அரசியலமைப்பானது மக்கள் அச்சமடைய வேண்டிய ஆவணமொன்று அல்ல. "யுனிற்றரி ஸ்ரேற்' (Unitary State) எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடியதாயுள்ளது. எனவே, ஆங்கிலப் பதமான "யுனிற்றரி ஸ்ரேற்' (Unitary state) இலங்கைக்குப் பொருத்தமற்றதாயிருக்கும்.
பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான "ஏகிய இராஜ்ஜிய' நன்கு விபரிக்கிறது. இது தமிழ் மொழியில் "ஒருமித்த நாடு' என்பதற்கு சமனாகும்.
இத்தகைய சூழமைவுகளில் பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
ஸ்ரீலங்கா (இலங்கை) அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு ஏற்புடையதான மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு எனும் குடியரசாகும்.
இந்த உறுப்புரையின் ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன் அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
உறுப்புரை 3
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். அத்துடன் ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.
உறுப்புரை 4
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
மக்களின் சட்டமாக்கல், ஆட்சித்துறை, நீதி முறைத் தத்துவங்கள் அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறாக பிரயோகிக்கப்படல் வேண்டும்.
உறுப்புரை 5
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையின் ஆள்புலம், அரசியலமைப்பின் அட்டவணை ஙீஙீஙீ இல் வழங்கப்பட்டவாறாக மாகாணங்கள் உள்ளடங்கலாக மற்றும் அதன் ஆள்புல நிலப்பரப்புகள் மற்றும் வான் பரப்பு, அத்துடன் எதிர்காலத்தில் பெறப்படக் கூடியவாறான அத்தகைய மேலதிக ஆள்புலம் உள்ளடங்கலாக சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவாறாக அதன் புவியியல் ஆள்புலத்தைக் கொண்டிருக்கும்.
இலங்கை அதன் ஆள்புலத்திற்குரிய சட்டத்தினால், வழக்கத்தினால் மற்றும் பயன்பாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை இலங்கையின் ஆள்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரடகனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து விலகித் தனியாவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது.
உறுப்புரை 6
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையின் தேசியக் கொடி இரண்டாம் அட்டவணையில் குறித்து வரையப்பட்டிருக்கும் சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும்.
கொடி தற்போது அங்கீகரிக்கப்படுகின்றவாறு இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 7
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையின் தேசிய கீதம் "ஸ்ரீலங்கா மாதா/ ஸ்ரீலங்கா தாயே' என்பதாக இருத்தல் வேண்டும். அதன் சொற்களும் இசையமைப்பும் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்.
தேசிய கீதம் அரசியலமைப்பின் சிங்கள மற்றும் தமிழ் வடிவங்களில் தற்போது அங்கீகரிக்கப்படுகின்றவாறு இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 8
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையின் தேசிய தினம் பெப்ரவரி நான்காம் நாளாக இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் II /உறுப்புரை 9
பின்வரும் உருவாக்கம் பரிசீலிக்கப்படலாம்:
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க 10 ஆம் 14(1) (உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
அல்லது
இலங்கையில் பௌத்த மதத்துக்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும். எல்லா மதங்களையும் மற்றும் அதன் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் மற்றும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன், அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை எல்லா ஆட்களுக்கும் உத்தரவாதமளிக்கும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
II. அதிகாரப் பகிர்வு கோட்பாடுகள்
1. துணையாக்கக் கோட்பாடு பிரயோகிக்கப்படும்
வழிப்படுத்தற்குழு, உபகுழுக்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் குழுவினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சமர்ப்பிப்புகளில் துணையாக்கற் கோட்பாடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. (கீழ் மட்டத்தில் கையாளப்பட வேண்டிய ஏதுவாக இருந்தாலும் அதிகாரமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்).
மத்திய சுற்றயல் உறவுகள் பற்றிய உபகுழுவின் அறிக்கை, உள்ளூர் அதிகார சபைகளுக்கும் அதிக தத்துவமும் அதிகாரமும் பகிரப்பட வேண்டுமென்று விதந்துரைக்கிறது.
அரசாங்கத்தின் மூன்று மட்டங்களுக்குமிடையில் விடயங்களையும் பணிகளையும் ஒதுக்குவது பற்றி தீர்மானிக்கும் போது குறித்த கோட்பாடு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2. மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக இருக்கும்
இதுவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையாகும். முதலமைச்சர்கள் மாகாண சபையின் மற்றும் பல்வேறு உபகுழுக்களின் சமர்ப்பிப்புகள் இந்த அடிப்படையிலேயே முன்வைத்துள்ளன.
அரசியல் கட்சிகளும் இந்தக் கோட்பாட்டை பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ளன. மாகாணம் அதிகாரப் பகிர்வின் முதல்நிலை அலகாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கையில் மத்திய சுற்றயல் உறவுகள் தொடர்பான உபகுழு அறிக்கையில் குறிப்பாக விதந்துரைக்கின்றன.
அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற முன்மொழிவை வழிப்படுத்தும் குழு ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்பு (அட்டவணையூடாக) புவியியல் பரப்பு/ ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அதேபோன்று பிரதான ஆட்புலத்தின் புவியியல் பரப்பு ஆகியவற்றை அடையாளம் காணவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகிறது.
பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன :
இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் ங்உறுப்புரை 154அ(3)சி உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கும்.
சமூகப் பேரவைகள்
அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு புவியியல் பிரதேசங்களிலும், அத்தகைய பிரதேசங்களுள் சிறுபான்மையினராகவுள்ள சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆக்கப்படுதல் வேண்டும்.
2.1 மாகாண சபைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு
அத்தகைய மாகாணங்களின் நிறைவேற்றுப் பகுதிக்குள் வரும் விடயங்கள் தொடர்பாக மாகாணங்களுக்கிடையிலான சாத்தியமான ஒத்துழைப்பு பற்றி தெளிவான குறிப்பீடுகளை அரசியலமைப்பில் உள்ளடக்க விதந்துரைக்கப்பட்டது.
2.2 பிரிந்து தனியாவதற்கெதிரான காப்பீடுகள்
பிரிந்து தனியாவதற்கெதிரான காப்பீடுகளையும் உள்ளடக்கிய ஒரு வாசகத்தை (வாசகங்களை) அரசியலமைப்பு உள்ளடக்க வேண்டுமென விதந்துரைக்கப்படுகின்றது.
இலங்கை அரசு "பிரிக்கப்படாதது மற்றும் பிரிக்கப்பட முடியாதது' என அரசியலமைப்பு குறப்பிட்டுக் கூறுதல் வேண்டும்.
"எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகாரசபை, இலங்கையின் ஆட்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடொன்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ, இலங்கையிலிருந்து பிரித்துத் தனியாக்குவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது' இந்த அரசியலமைப்பு பொதுமக்களின் பாதுகாப்புடன் போதுமானளவு காப்பீடுகளை வழங்கும். யோசனை கோட்பாடுகள்/ உருவாக்கங்கள் என்பன இந்த அறிக்கையின் 44 ஆம் பக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளன.
3. உள்ளூரதிகார சபைகள்
3.1 மாகாண சபைகளுக்குக் கீழ் உள்ளூர் அதிகார சபைகள் 3 ஆம் மட்டமாக இருத்தல்
மாகாண சபைகளின் கீழ் தொழிற்படும் அரசாங்கத்தின் மூன்றாவது மட்டமொன்றாக உள்ளூர் அதிகாரசபைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும், நீதி போன்றவற்றுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பிலான மாகாண சபைகளின் மேற்பார்வைத் தத்துவங்களைப் பாதிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு ஆக்கப்பட வேண்டுமெனவும், விதந்துரைக்கப்படுகின்றது.
அத்தகைய உள்ளூர் அதிகார சபைகள் சட்டவாக்கத் தத்துவத்தைப் பிரயோகிக்காத அதேவேளை, சட்டத்தால் விதந்துரைக்கப்பட்டவாறாக அவை மத்திய மற்றும் மாகாணங்கள் ஆகிய இரண்டிலும் குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்கான அமுலாக்கல முகவராண்மையொன்றாகக் காணப்படும்.
3.2 உள்ளூரதிகார சபைகளுடன் தொடர்பான சட்டகச் சட்டவாக்கம்
உள்ளூரதிகார சபைகளின் யாப்பு, தேர்தல், வடிவம், கட்டமைப்பு மற்றும் அதிகாரங்கள் தொடர்பாக சட்டகச் சட்டவாக்கம், சீர்மை என்ற விடயங்களை விதிப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் விதந்துரைக்கப்பட்டது.
எனினும் உள்ளூரதிகார சபைகளை தேசிய நியமம்/ சட்டகச் சட்டவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தரமுயர்த்தல் மாகாண சபைகளின் அதிகாரத்துக்குள் இருத்தல் வேண்டும். பல்வேறு வகையான உள்ளூரதிகார சபைகள் மற்றும் அவற்றின் வேறுபடும் அதிகாரங்களும் பணிகளும் பற்றிய மூலப்பிரமாணங்கள் தொடர்பாக ஏற்பாடுகளை வழங்குவதற்கு ஒரு சட்டம் சட்டமாக்கப்படலாம்.
சனத்தொகை / நிலப்பரப்பு போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட, இரண்டு வகையான உள்ளூர் அதிகாரசபைகள் (உதாரணம். மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள்) மாத்திரமே இருத்தல் வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது. வெவ்வேறு வகைகளிலான உள்ளூர் அதிகார சபைகளின் தத்துவங்களும் பணிகளும் (அமுலாக்கற் தத்துவங்கள் உள்ளடங்கலாக) வேறுபடும். அத்தகைய வகைப்படுத்தல்/ தத்துவங்களின் விபரங்கள் ஆக்கப்படவுள்ள சட்டக சட்டவாக்கத்தினால் தீர்மானிக்கப்படும்.
4. அரசாங்கத்தின் பல்வேறுபட்ட மட்டங்களுக்கான அதிகாரப் பகிர்வு தெளிவாகவும் ஐயமற்றதாகவும் இருக்க வேண்டும்.
4.1 வழிப்படுத்தும் குழு முன்னிலையில் சமர்ப்பிப்புகளை முன்வைத்த முதல் அமைச்சர்கள் மத்தியில் உள்ளடங்கலாக அதிகாரிகள் தெளிவாகவும் ஐயமின்றியும் பகிரப்பட்டு தற்போதுள்ள ஒருங்கியை நிரல் இல்லாமல் செய்யப்பட வேண்டுமென்ற பொதுவான இணக்கப்பாடு உள்ளது. பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்குமிடையேயான உறவுகள் பற்றிய தற்காலிக உப குழுவின் அறிக்கையிலும் இது ஆலோசிக்கப்பட்டது.
4.2 இரண்டு நிரல்களை அறிமுகப்படுத்துமாறு விதந்துரைக்கிறது, அதாவது தேசிய நிரல் மற்றும் மாகாண சபை நிரல்சி அத்துடன் உள்ளூர் அதிகார சபை நிரல்.
தேசிய நிரலொன்றும் (ஒதுக்கிய நிரல்) மாகாண நிரலொன்றும் இருத்தல் வேண்டுமென்ற கருத்தை வழிப்படுத்தும் குழு கொண்டிருந்தது. ஒருங்கியை நிரலொன்றில் வைத்துக்கொள்ள வேண்டிய விடயப்பரப்புகளைக் குறித்துரைக்கும் ஒருங்கியை நிரலொன்றை வைத்துக் கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையின் இறைமை, ஆள்புல எல்லை, பாதுகாப்பு/ தேசிய பந்தோபஸ்து மற்றும் பொருளாதார ஐக்கியம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான விடயங்களைத் தேசிய நிரல் உள்ளடக்கும்.
4.3 தேசிய நிரலிலுள்ள தெரிவு செய்யப்பட்ட விடயங்கள் மீதான மாகாணங்களின் தொழிற்பாடுகளின் அமுலாக்கத்தை பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யலாம்.
4.4 பாராளுமன்றம் அல்லது மாகாண சபைகள், தமது நோக்கெல்லையினுள் வரும் குறித்துரைக்கப்பட்ட தொழிற்பாடுகளின் அமுலாக்கம் உள்ளூர் அதிகாரசபைகளால் மேற்கொள்ளப்படுவதற்கு சட்டத்தினால்/ நியதிச்சட்டத்தினால் ஏற்பாடு செய்யலாம்.
No comments:
Post a Comment