நான் இங்கு சிங்களவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய தமிழ் இயக்கங்கள் எப்படி திசை திரும்பி தமிழர்களையே அடித்து சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் என்பதை இலங்கையில் இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வளர்ந்துவரும் எமது தமிழ் இளம் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை முன்பு ஆயுதமேந்திய இயக்கங்கள் ஏமாற்றினார். இப்போது ஆயுதம் ஏந்தாத அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள். எனக்கு கிடைக்கும் பதிவுகளை போடும்போது அது அது புலிகளால் மற்றைய இயக்கங்கள் என்று பார்ப்பதைவிட எப்படி எமது சொந்த இனத்தையே சித்திரவதை செய்து கொலை செய்தோம் என்பதை பார்க்க வேண்டும். சிலர் உடனடியாக அந்த இயக்கம் அப்படி செய்தது இந்த இயக்கம் அப்படி செய்தது அது உனக்கு தெரியாதா என் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளால் எழுதுகிறார்கள்
என்னைப் பொருத்தவரை மற்ற இயக்கங்கள் செய்த அநியாயங்களையும் துரோகங்களையும் சித்திரவதைகளையும் கொலைகளையும் எழுத்தில் கொண்டு வந்து பதிவு செய்யுங்கள் இல்லை பதிவுகளை என்னிடம் அனுப்பினால் நான் போடுகிறேன். கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடப்பதாக வித்தை காட்டும் வித்தை காரன் போல் அந்த இயக்கும் இப்படி செய்தது இந்த இயக்கம் இப்படி செய்தது எனக்கு எல்லாம் தெரியும் எழுதுவேன் எழுதுவேன் என்று கூறாமல் உண்மையாகவே உண்மைகளை போடுங்கள் மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வேண்டும் மக்கள் செய்த அநியாயங்கள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் கட்டாயம் பதிவு செய் வேன்.
நான் இந்த தமிழ் விடுதலை போராட்டத்திற்கு 83 ஆம் ஆண்டுக்குப் பின்பு வரவில்லை 76 ஆம் ஆண்டு உயர்தர கல்வி படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வட்டுக்கோட்டை மாநாடு முதல் இன்றுவரை பார்த்திருக்கிறேன் செல்வாவுடன் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அமிர்தலிங்கம் முதல் எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களையும் நேரில் சந்தித்து பழகும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது டெல்லியில் வைத்து பிரபாகரனிடம் பேசும்போதும் நாங்கள் இருவரும் எம்ஜிஆர் படங்களை பற்றி மட்டும் தான் பேசுவோம் காரணம் இருவரும் எம்ஜிஆர் ரசிகர்கள் எங்களுடன் பேச்சில் பாலகுமார் கலந்து கொள்வார்.எல்லாத் தலைவர்களும் பழகுவதற்கு தனிப்பட்ட முறையில் நல்லவர்கள்தான் ஆனால் இயக்க தலைவர்கள் என்ற முறையில் அவர்களின் செயல்பாடுகள் விடுதலைக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானதாகவே இருந்து வந்துள்ளது.
வெளிநாட்டில் வசதியாக வாழ்க்கை வாழும்தமிழர் குடும்பங்கள் இனி ஒரு காலமும் இலங்கை வந்து வாழப் போவதில்லை ஆனால் இலங்கை சுற்றுலா வந்து போவார்கள்.ஆனா அதே நீரம் இலங்கையில் போராட்டங்கள் பிரச்சினைகள் இருப்பதை விரும்புவார்கள் காரணம் தாங்கள் வெளிநாட்டில் சொகுசாக வாழ பணம் சேர்க்க என்பதே உண்மை. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு விளம்பரம் படம் காட்ட உதவும். நான் போடும் இந்தப் பதிவு பிரபாகரனின் திருமணத்திற்கு பின்புவிடுதலைப் புலிகளின் முகாம்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து சென்றவர்களில் ஒருவரை (ரூபன்) கைது செய்து சித்திரவதை செய்து கொலை செய்த படியால் பிரிந்து சென்ற மற்றவர்கள், அஞ்சலி செய்து அடுத்த பிரசுரம் அந்தப் பிரசுரம் புலிகளை மட்டுமல்ல மத்திய இயக்கங்களுக்கும் ஓர் சாட்டையடி.இந்த பிரசுரம் வெளியிட்ட பலர் இன்றும் வெளிநாடுகளில் இருப்பதாக கேள்வி.இதை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக என்று பார்க்காமல் எல்லா விடுதலை இயக்கங்களும் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக இருந்தார்கள் என்று பார்க்கவும். நன்றி பார்க்கும் பார்வை உங்களுடையது தயவுசெய்து உங்கள் கருத்துகளை பண்பாடற்ற வார்த்தைகளால் எழுதி நீங்கள் நேசிக்கும் தலைவரை கேவல படுத்தாதீர்கள்.
ரூபன் கொலை பிரசுரம் பகுதி 1
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமது சொந்த இயக்கத் தோழர்களை சித்திரவதை செய்து கொலை செய்து மகிழ்வதும் இயக்கத் தோழர்களே புதைகுழிக்கு அனுப்புவதும் சாதாரண விடயங்கள் ஆகிவிட்டன. நெருக்கடியான இக் காலகட்டத்தில்கூட இக் கொலைகள் தொடர்கின்றன கொள்கை விளக்கங்கள் தத்துவப் பேராசிரியர் நியாயப் படுத்தல்கள் புரட்சிகர பேட்டிகள் எல்லாவற்றையும் மீறி இவர்களது முகத்திரை கிழிந்து கோர முகங்கள் அடிக்கடி வெளியே தெரிகின்றன. இயக்கங்களின் பாசிச தலைமைகளை தோழர்கள் விமர்சிக்கும் போது, அவ் விமர்சனங்களை சந்திக்க துணிவற்ற இந்தகோழைகள்சிங்கள ராணுவத்தை விட கேவலமான முறையில் தோழர்களே சித்திரவதைக்கு உள்ளாக்கி சமாதி கட்டுகின்றனர்.
இந்த மனித விரோத பாரம்பரியத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் ஆன தமிழீழ விடுதலைப் புலிகள்
அண்மையில் மற்றும் ஒரு போராளியை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து பாரம்பரியத்தை மிகுந்த ஆர்வத்துடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்
ரூபன் கடத்தப்பட்டு கொலை
10_07_1985 புதன்கிழமை மாலை மூன்று முப்பது மணி அளவில கப்புது நெல்லியடி யைச் சேர்ந்த ரூபன் எனப்படும் தயாநிதிஎன்பவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்(LTTE) வேதாரண்யத்தில் வைத்து இரும்பு கம்பிகளால் தாக்கி தமது வானில் ஏற்றி கொலைக்களம் கொண்டு சென்றுள்ளனர்
தீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நான்கு வருடங்களாக உதவி வந்தவர். நெல்லியடியில் இவ்வியக்கம் நன்மதிப்பைப் பெற பிரச்சார வேலைகளில் கடுமையாக உழைத்தவர் அக் கிராமத்தில் இருந்து பல போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர காரணமாயிருந்தார் 1983 ஆம் ஆண்டு இயக்கத்தின் முழுநேர உறுப்பினராக பயிற்சிக்காக இந்தியா வந்தார்.அந்த இயக்கத்தின் கொள்கை விளக்கங்கள் பிரச்சாரங்கள் போட்டிகளுக்கும் அதன் நடை முறைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என படிப்படியாக கண்டு கொண்ட மக்களின் உண்மையான விடுதலையை நேசித்த இவருக்குஇயக்கத் தலைமையின் சர்வாதிகாரப்போக்கிற்கும் டாம்பீக வாழ்க்கையும் அதிருப்தியை கொடுத்தனஇயக்கத்துக்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்த நீண்டகால உறுப்பினர்கள் வெளியேற்றம் இயக்கத்தலைவர் தமது உறவினர்கள் நண்பர்கள் எடுபிடிகள் கொண்ட குண்டர் படையை யும் உளவு படையையும் வைத்திருந் தார்.போலியாக பிரசுரங்களில் மாத்திரம் மத்திய குழுவினால் வெளியிடப்பட்டது என அச்சு ஏற்றிவிட்டு, தலைமையும் அதன் எடுபிடி களும் சகல அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தனர். விமர்சனம் செய்பவர்களை கொலை செய்தல் ஆகிய இன்னும் பல ஜனநாயக விரோத பாசிசப் போக்குகள் கண்டு அதிருப்தி கொண்ட இவர். ரூபன் இருந்த முகாமில் அவரும் அவரை ஒத்த கருத்துடைய தோழர்களும் இயக்கத்தின் தவறான போக்கைவிமர்சித்தனர். முகாமில் இருந்த போராளிகள் உண்மை நிலைமையை உணர்ந்தமையால் இவர் இருந்த முகாம் ஆட்டம் காணத் தொடங்கியது இவர்களின் விமர்சனங்களுக்கு தலைமை பதில் அளிக்கத் தவறியது ஆனால் இவர்களின் கேள்விகள் விமர்சனங்கள் நியாயமான வையே என்ற உணர்வு முகாமில் பரவலாக காணப்பட்டது.
இந்த விமர்சனங்கள் காரணமாகரூபன் உடன் சேர்ந்து 16 தோழர்கள் அடையாளம் காணப்பட்டனர் இவர்களை கொலை செய்தால் முகாமில்உள்ளவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்ற காரணத்தால் இவர்கள் வெளியேறஅனுமதிக்கப்பட்டனர்ஆனால் வெளியேறிய நாளிலிருந்து இவர்கள் அனைவரும் புலிகளின் உளவுப் படையினர் துரத்தப்பட்டு கொண்டே வாழ்ந்து வந்துள்ளனர் இவர்கள்வெளியே வந்து தங்கள் அன்றாட வாழ்வுக்கே அவலபட்டு சிங்களராணுவத்தினருக்கும் அதேநேரத்தில் புலிகளுக்கும் இடையே அகப்பட்டு திரும்பிப் போக முடியாமல் இந்தியாவிலும் பகிரங்கமாக வாழ முடியாமல் ஒளிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இவ்வாறான நிலையில் ரூபன் பலருடன் கடன்பட்டு தன்னுடன் வெளியேறிய தோழர்களின் உணவுக்கும் போன் உறைஇடத்துக்கும் ஏற்பாடு செய்தார். இவரது உறவினர்கள்கூடாது மீண்டும் கல்வியைத் தொடரும் படி நுழைவுச்சீட்டு எடுத்துக்கொடுத்து நிர்ப்பந்திக்க போதிலும் தனிமனிதனாக போதிலும் விடுதலைக்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்ய வேண்டும் என எண்ணி திருச்சியில் உள்ள ஓர் ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இந்திய கரையை அடைந்த தமிழ் அகதிகளுக்கு தொண்டாற்றினார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைவெறி நடவடிக்கைகளுக்கு எந்தவிதத்திலும் குறைவின்றி சாதனைகள் புரிந்த மற்றைய பெரிய இயக்கங்களிலும் சேர்ந்து இயங்க ரூபன் விரும்பவில்லை 2_07_1985அன்று அகதிகளுக்காக வந்த பொருட்களை எடுத்து வருவதற்காக ஆசிரமத்தில் இருந்து இன்னொரு இளைஞனுடன் வேதாரணியம் இயக்கத்தில் இருந்து வெளியேறி வேறு ஒரு இயக்கத்திலும் சேரவில்லை என்ற படியால்தன்னை புலிகள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது ஆனால் அது தவறானது ரூபன் 10_07_1985அன்று வேதாரண்யத்தில் புலிகளின் வீட்டுக்கு அருகாமையில் சென்ற பொழுது முதல் நாளும் அதே வழியாக சென்ற பொழுது அவர்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை . பொட்டு என்ற இயக்க குண்டர் படை கொலை காரனும், அவன் சகாக்களும் ரூபனே மறித்து உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தோம் வசமாக மாட்டினார் என்று கூறியபடி இரும்பு கம்பியால் மிருகத்தனமாக தாக்கி அவரை நினைவு லக்கசெய்துள்ளனர். உடனடியாக தங்களது வானில் ஏற்றி கரை நோக்கி சென்றுள்ளனர் இதன்பின் ரூபன் வீடு திரும்பவில்லைபுதனுடன் சேர்ந்து சென்றவர் வேதாரணியம் போலீசாரிடம் இதுபற்றி முறையீடு செய்த போதும் அவர்களுக்குஎதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பின்னர் பின்னர் அவர் தொலைபேசி மூலம் ரூபன் இருந்து வந்த ஆசிரமம் சுவாமிக்கு தகவல் தெரிவித்தார் எழுந்து வெளியே வரும் போது புலிகள் அவரை கைது செய்து தமது காவலில் வைத்துள்ளனர் நான்கு மணி நேரத்தின் பின் பொட்டுஅங்கு வந்து ரூபனை திருச்சிக்கு அனுப்பி விட்டதாக கூறி அவரைப் போகச் சொன்னார் திருச்சி சென்று ஆசிரமத்தில்பார்த்த பொழுதுரூபன் அங்கில்லை பின்னர் திருச்சியில் உள்ள புலிகளின் அலுவலகத்தில் சுவாமி யாரும் அந்த நண்பரும் செய்தபோது திவாகர் என்ற புலிகளின் திருச்சி கிளை பொறுப்பாளர் மிரட்டுகிற தொனியில் பேசி இதனை வெளியே கூறினாள் உங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என சொல்லியுள்ளார்
இன்று சிங்கள இனவெறி அரசின் கொடிய இனப்படுகொலைக்கு ஆளாகி பரிதவிக்கும் தமிழ் மக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுக்கத் வேண்டியதொரு நெருக்கடியான திருப்பு முனையில் நிற்கின்றனர் காரணம்தமிழ் மக்களின் விமோசனத்திற்காக போராட வந்த விடுதலை இயக்கங்கள் என பறைசாற்றிக் கொள்ளும் பெரிய இயக்கங்கள்விடுதலைப் போராட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் தமது பாசிச நடவடிக்கைகளை இன்னும் தொடர்கின்றன. எமது தோழர்கள் தமது சொந்த இயக்க தலைமைகளில் அதையே அவர்கள் கூறும் விடுதலையின் பெயரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் இந்தப் பெரியஇயக்கங்களின் பாசறைகள் சித்ரவதை முகாம்கள் ஆகவும் கொலை தளங்களாக மாறி வருகின்றன. சிங்கள இனவெறி இராணுவம் கொன்று குவித்த தமிழர்களின் எண்ணிக்கை கணக்குப் பார்த்து படம்பிடித்து புத்தகம் அடித்து விளம்பரம் தேடி பணம் பண்ணும் இந்தகும்பல்களின் திரைகளுக்கு பின்னால் நியாயம் கேட்டபல போராளிகளின் சடலங்களை மூடி மறைக்கப்பட்டுள்ளன இன்று தமிழீழ விடுதலைப் போராட்டமானது பாசிச வெறி பிடித்த இயக்க தலைமைகளுக்கு வேண்டாத நேர்மையான பல போராளிகளின் ரத்தத்தால் எழுதப்படும் கரை படிந்த துயர வரலாறாக திசை மாறி வருகிறது.
ஐக்கியமா? சந்தர்ப்பவாத கூட்டா
உண்மையான விடுதலை பற்றும் தீர்க்கதரிசனமும் அரசியல் விவேகமும் உடைய ஒரு இயக்கத் தலைமை பரந்துபட்ட மக்கள் கூட்டத்தை விடுதலையை நோக்கி அணி திரட்டுவது இக்கால கட்டத்தின் முக்கிய தேவை என்பதை உணர்ந்து கொள்ளும் அதற்கு முதற்படியாக விடுதலையை நேசிக்கும் தனி மனிதர்கள் குழுக்கள்வெகுஜன அமைப்புக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டங்களில் வெவ்வேறு மட்டங்களில்பங்கேற்க உரிமை உண்டு என்பது ஏற்றுக கொள்ளும் அவசியம் அடுத்து இத்தகைய சக்திகள் எல்லாவற்றையும்ஒன்றாக கொண்டுவந்து பலம் பொருந்திய வெகுசன இயக்கத்தை கட்டியெழுப்புவது போராட்டம் வெற்றிபெற இன்றியமையாதது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்மேலும் இவற்றை உணர்ந்ததோடு அல்லாமல் விசுவாசத்துடன் நடைமுறைப்படுத்த உழைக்கும்இயக்கமும் அதன் தலைமை மே இறுதியில் நாடளாவிய தேசிய விடுதலை இயக்கம் ஒன்றுக்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தி முன்னெடுத்துச் செல்லும் தலைமை பெறும்.
தொடரும்
No comments:
Post a Comment