பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 29 September 2022

தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள்கட்சி போராட்டமும் கொலைகளும்

  வெற்றிசெல்வன்       Thursday, 29 September 2022
ரூபன் கொலை பிரசுரம் பகுதி 2

புலிகளின் தலைமையின் கொலை நடவடிக்கைகள் இத்தகையதொரு வெகுசன இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கு ஊறு விளைவிப்பதாக கூறி சகபோராளிகளையும் மாற்று இயக்க தோழர்களையும் கொன்று ஒழிப்பது இயக்கங்களுக்கு உள்ளும், இயக்கங்கள்இடையேயும் மக்கள் மத்தியிலும் பிளவுகள், பூசல்களை தோற்றுவிக்கும் மக்களுக்கு போராட்டத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் போராளிகளும் அவர்களைத் தொடர்ந்து வெகுசனபிரிவுகளும் போராட்டத்தில் விரக்தியடைந்து  விலக நேரிடும்

நீண்டகாலமாகவே சக போராளிகளை கொன்றழிக்கும் பாரம்பரியம் படைத்த விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் அடியாட்களும் நெருக்கடியான காலகட்டத்தில் கூட இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை மாறாக போராட்டத்தையே பின்னடைய செய்யக்கூடிய தமது அழிவு நடவடிக்கைகள் இன்று வரைதொடர்ந்தது

எதிரியுடன் கூட சமரசம் பேச வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளான விடுதலைப்புலிகளின் தலைமை எதிரியுடன் விருந்துண்டு அதற்கு காட்டிய பெரும்தன்மையில் ஒரு சிறிதளவேனும் தனது இயக்கத்தில் இருந்து விலகிய பொழுது இலட்சியத்துக்குதன்னை அர்ப்பணித்த சக விடுதலைப் போராளிக்கு காட்ட முடியாமல் போனது வேதனைக்குரியது இவர்கள் ஒற்றுமை பற்றியும் விடுதலைப் பற்றியும் போடும் கோஷங்கள் போலியானவை என்வும் இதிலிருந்து நமக்குத் தெளிவாகிறது

இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள மற்ற இயக்கங்களும் இக் கொலைகளை கண்டிக்காமல் மௌனமாய் இருப்பது இவர்கள் தமது தவறுகளை நியாயப்படுத்தும் கொலை செய்து விட்டு தாம் செய்யவில்லை என்று அறிக்கை விடவும் மட்டுமே ஐக்கிய பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாக இந்த ஐக்கியம் தலைமைகள்  ஊடாக தொடங்கும் பொழுது மக்களை திசை திருப்புவதற்காக அமைப்பில் உள்ளவர்களை திருப்திப்படுத்தவும் ஆடப்படும் நாடகமே அன்றி விடுதலையே முதன்மைப்படுத்தும் நடவடிக்கை அல்ல என்பதும் நன்கு புலனாகிறது

 விமர்சனங்களுக்கு அஞ்சும் கொலைத்தலைமைகள்

விமர்சனம் இன்றி புரட்சிகர சிந்தனையிலேயே அதை நடைமுறைப்படுத்துவதில் வளர்ச்சி இல்லை இயக்கத்தினுள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஒவ்வொரு தோழனுக்கும் உரிமை இருப்பதுதான் புரட்சிகர மரபு இயக்கத் தலைமையின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் விமர்சிப்பதும் ஒவ்வொரு போராளிகளினதும் கடமையும் கூட விடுதலைப் போருக்கு வந்தவர்கள் கூலிக்காக ஆயுதமேந்தி கொலை செய்ய வந்தவர்கள் அல்ல போராளிகள் ஒவ்வொருவரும் போராட்டத்தின் அரசியல் ராணுவம் ஆகிய இரு பரிமாணங்களிலும் முழுமையான பங்களிப்பை செய்வதே போராட்டம் சரியான திசையில் செல்ல வழி வகுக்கும்

புரட்சிகர ஆயுத வன்முறையானது தேசத்தின் அல்லது வர்க்கத்தின் எதிரியை வீழ்த்த பிரயோகிக்கப்பட வேண்டிய தொன்றாகும். விடுதலைப்புலிகளின் தலைமையோ தன்னை விமர்சிக்கின்ற சொந்த இயக்கத் தோழர்களுக்கும் எதிராக சக போராளி இருக்கும் எதிராக தன் ஆயுதத்தை திருப்புவது பாசிச வெறி கொண்ட தலைமைகளே விமர்சனங்களுக்கு கொலைகளை பதிலாக வைக்கின்றனர்

மேலும் மற்றவர்களின் விமர்சனங்களை அரசியல் தளத்தில் எதிர்கொள்ள அஞ்சி எங்கே தன் ஆதிக்கம் நிலைகுலைந்து போகுமோ என்ற பயத்தில் போராளிகளின் மேல் தனது உளவுப்படை குண்டர் படை படைகள் மூலம் தன் சர்வாதிகாரப் பிடியை இறுக்குகின்றனர்

.மேலும் விடுதலைப்புலிகளின் தலைமை புரியும் கொலைகள் விமர்சனத்தை கண்டு அஞ்சி நடுங்கும் அதன் மனக்கோளாறு ஆகியவற்றிலிருந்து வெளிப்படையான போராட்டம் பற்றிய கோட்பாடு யுத்த தந்திரம் ஆகியவை தொடர்பான சரியானதொரு அரசியல் ராணுவ கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க முடியாத அதன் இயலாமை பற்றாக்குறை அரசியல் வங்குரோத்து கோழைத்தனம் ஆகியவை இவர்களை பாசிச நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பது நமக்கு தெளிவாகின்றது

 இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த தலைமையின் குறிக்கோள் உண்மையிலேயே தமிழ் மக்களின் விடுதலை தானா ஆயுதம் ஏந்தியது என்று கேட்க வைக்கின்றது 

ஆரோக்கியமான சக்திகளை அன்னியப்படுத்தி  அவர்களை கொன்று ஒழிப்பது எம்மை விடுதலையை நோக்கி இட்டுச் செல்லுமா?

 போராட்டத்தைமுன்னெடுக்க சரியான கோட்பாடு யுத்ததந்திரத்தை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த தலைமை என்ற நிலை மாறி தலைமையின் இருப்புக்காக  இயக்கமும் இசைவான கொள்கையும்ப பிரச்சார நியாயப்படுத்தவே அவர்களது தலைகீழாக நிற்கிறது 

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சில தனி நபர்களும் அவர்களை சூழ இருக்கும் அடியாள் கும்பலினதும் புகழ் அந்தஸ்து நலனுக்காகவும் அதிகாரத்தைத் தம்வசம் மாத்திரமே வைத்திருப்பதாகவும் நிலைகுலைந்து போன தமது ஆளுமைகளை பலவந்தமாக போராளி மேல் திணித்து ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக தனிப்பட்ட பகைமை தீர்த்துக் கட்டுவதற்கு அவர்கள் போராட்டத்தை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

. இத்தகையதொரு போரில் எத்தனையோ தீரமான இளைஞர்கள் எதிரியின் கையிலும் இந்தகொலைகார கும்பல் களில் கையிலும் அகப்பட்டு பலிகடாவாகப்பட்டுள்ளனர் என்பது எமக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது

போராளிகளே

எங்கள இனவெறி அரசின் ஒடுக்குமுறைக்கு நீண்டகாலமாக பலியாகிகொண்டிருந்த தமிழ் மக்களின் விடிவுக்காக போராட முன் வந்துள்ளீர்கள்.ஒரு சுதந்திர சோசலிச சமுதாயத்தை தமிழீழ மண்ணில் அமைப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கு உண்மையான விமோசனம் உண்டு என்று கூறி அதை அடைய தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்கள் .

இன்று உங்கள் இயக்கத் தலைமைகள்தமிழ் மக்களின் முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்லும் தன்மை உடையவை என்பதை நம்புகிறீர்களா ?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் விடுதலை வேட்கையுடன் மக்கள் பால் அன்புடனும் தீவிரமாகப் போராடிய 
 மடிந்தனர் போராளிகளின் தியாகங்கள் பலவற்றால் தமிழீழ மண்ணில் ஆயுதப்போராட்டம் புதிய பரிணாமம் பெற்றது என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தோழர்கள் பலர் கடும் உழைப்பு களத்தில்போராடிக் கொண்டிருக்கின்றனர்

 ஆனால் இப் போராளிகளின்பங்களிப்புகள் தியாகங்கள் தலைமையின் பாசிச நடவடிக்கைகளால் அர்த்தமற்றுப் போய்விடும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது ஒரு சர்வாதிகார தலைமையின் அதும் அதன் அடியாட்களின் அதன் ஆதிக்கத்தை நலனை பாதுகாப்பதற்காகவும் அவர்களது விளம்பரத்துக்கு வீரமிக்க இளைஞர்களின் வாழ்வுகள் உரமாகபோகவில்லையா?

ஏக்கத்தின் ஒட்டுமொத்தமான நடவடிக்கைகள்போக்குகளை நிர்ணயிப்பதில் இப் போராளிகளின் பங்கு என்ன?

வெளியே பிரச்சார பகட்டுக்காக மாத்திரம் மத்திய குழு அரசியல் குழு என்று கூறிவிட்டு நடைமுறையில் உட்கட்சி ஜனநாயகத்தை வேரோடு அழித்து தனது குண்டர் படை உளவுப் படைகளின் உதவியுடன் இயக்கத் தலைமைபோராளிகளை அடக்கி ஒடுக்குகிறது.ராணுவக் கட்டுப்பாடு என்ற போர்வையில் அடிமட்ட போராளிகளுக்கு எதுவுமே தெரியாமல் தனது ஊழலை மறைக்கின்றது.

 விஷயம் தெரிந்து கேள்வி கேட்போரை ஒதுக்கி விரட்டுகிறது அல்லது சித்திரவதை செய்து கொலை செய்கிறது மனித விரோதிகளான தனது அடியார்களுக்கு மாத்திரம் சலுகைகளையும் அதிகாரத்தையும் வழங்குகின்றது

   இத்தகைய தலைமையின் பாசிச நடவடிக்கைகள் உருவாக்கிய நச்சு சூழலில் தோழர்கள் மத்தியில்ஒத்துழைப்பும் பரஸ்பர நம்பிக்கையும் தோழமை உணர்வை வளர்ப்பது சாத்தியமில்லை.மாறாக சந்தேகம் பயம் பிரிவினை ஆகியவை தான் தோழர்கள் நட்புடன் பேசமுடியாது ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன் மனக்கசப்பும் நோக்கும் துர்ப்பாக்கிய நிலையத்தினுள் உள்ளே இன்று ஏற்பட்பட்டுள்ளது தொடர்ந்து சக போராளிகள் கொலை செய்யப்படும் பொழுது இதை பார்த்து நிற்கும் மற்றைய போராளிகள் மனம் குமுறலாம்.அதேசமயம் பிரச்சினைகள் புரியாத அரசியல் பக்குவம் அடையாத பல இளம் போராளிகளின் மனித உணர்வுகள் வழங்கப்பட்டு அவர்கள் தலைமைக்கு சாதகமான பகடைகள் ஆக கொலையாளிகளாக மாறலாம் இன்று இயக்கம் கொலையாளிகள் கொல்லப்படுபவர்கள் என இரு சாராரை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது

தொடரும்

logoblog

Thanks for reading தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள்கட்சி போராட்டமும் கொலைகளும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment