பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 30 September 2022

ராஜராஜ சோழனும், ஈழத் தமிழர்களும்

  வெற்றிசெல்வன்       Friday, 30 September 2022

எங்கள் ஈழநாட்டில் நடைபெற்ற கிட்டத்தட்ட ஐம்பது வருட தமிழர்களின் உரிமைக்காக போராடிய அரசியல் கட்சிகளும் ஆயுதம் தூக்கி போராடிய இயக்கங்களும் போராடி தோற்று , தோக்கும் முன், முடிந்தளவு தமிழ் மக்களையும் தமிழ் இளைஞர்களையும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப கொன்று அழித்தோம்.

இந்தப் ஈழத் தமிழ்போராட்டத்தை நேரடியாக பார்த்தவர்களும், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களும், இதில் பல தமிழ் இளைஞர்களை நேரடியாக கொலை செய்த தலைவர்களும், இன்னும் இன்றும் இருக்கிறார்கள். ஆனாலும் யாராலும் இன்றும் நடந்தஉண்மைகளை எழுத முடியாமல் உள்ளது. அப்படி எழுதினாலும், உண்மைகளை உண்மை என்று தெரிந்தாலும் பலர் மறுத்து தங்கள் தங்கள் வசதிக்கேற்ப இந்த 50 வருட சரித்திரத்தையே மாற்றுகிறார்கள். இந்த தலைவர் இப்படிப்பட்டவர் அந்த தலைவர் அப்படிப்பட்டவர் இவர்கள் இருந்திருந்தால் எமது போராட்டம் எப்பவும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ் ஈழம்எல்லாம் கிடைத்திருக்கும். என்று எழுதுகிறார்கள். ஆனால் அந்தத் தலைவர்கள் இருக்கும் போது என்ன செய்தார்கள், அவர்களால் தமிழர்களின் ஏதாவது ஒரு உரிமையை பெற முடிந்ததா என்று எழுத மாட்டார்கள். இப்படி எங்களுக்குத் நேரடியாக தெரிந்த 50 வருட சரித்திரத்தையே தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் ஆயிரம் வருடத்துக்கும் முந்திய சோழர்களின் கதையை தாங்களும் அந்த காலத்தில் பிறந்து வளர்ந்தது போல் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து விமர்சிக்கிறார்கள்.

நாங்களும் படிக்கும் காலத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் கதைகளைப் படித்து எமது தமிழ் மன்னர்களின் வீரத்தை போற்றி புகழ்ந்தோம். சிறந்த வீரனான சிற்றரசன் வில்வழிஒரி கொல்லிமலை தலைவன் கடையேழு வள்ளல்களில் ஒருவர். இவரின் பெருமையை பொறுக்க மாட்டாத சேர சோழ பாண்டியர்கள் ஒன்று சேர்ந்து கொன்றதாக படித்திருப்போம். அப்போது கூட நாங்கள் அதை பற்றி சிந்திக்கவில்லை. அந்த காலத்திலேயே தமிழ் அரசர்கள் தமிழர்களையேஒருவரை ஒருவர் கொன்று ஆட்சி செய்திருக்கிறார்கள். ஒரு நல்லவனை கொல்ல கூட்டும் சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த சரித்திர உண்மைகள் படித்து நாங்கள் யாரும் எங்கள் இனத்தையே கொல்லும் தவறை திருத்தவில்லை.

பொன்னியின் செல்வன் கதை சில பல கல்வெட்டுகள் இருந்த சரித்திர உண்மைகளை கொண்டு கல்கி அவர்கள் ஒரு சிறந்த சரித்திர நாவலை எழுதினார். அதில் கதையின் கதாநாயகர்களை பற்றி பல உயர்வான வீரமான செய்திகளை கூறி, அவர்களை மேம்படுத்தினார். அது உண்மையாக இருக்கக் கூட வாய்ப்பு இல்லை.

ஆனால் நாங்கள் எங்களுக்குதெரிந்த நேரடியான தலைவர்களின் கொலைபாதகங்களை எல்லாம் மறைத்து அவர்களைப் பற்றி உயர்வாக அவர்கள் வீரத்தைப் பற்றி எழுதி மகிழ்கிறோம். பொய் என்று தெரிந்தும்.

ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய சோழர் கதைகளை பலவித கதைகளை ஆவேசமாக பேசியும்முகநூலில் எழுதியும் வருகிறார்கள். ராஜராஜ சோழன் சிங்களவர்களை, பௌத்தர்களை அழித்தான். சாதியை வளர்த்தான். பல பல குற்றச்சாட்டுகள். ஏதோ நேரில் பார்த்தது போல் முகநூலில் எழுதுகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தையும், சரித்திர நாவலையும் பொழுதுபோக்காக பார்க்க வேண்டுமே ஒழிய. ஆவேச பட தேவையில்லை.

சிந்திக்க வேண்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இன்று வரை தமிழர் என்னும் இனம் தங்களுக்கு சண்டையிட்டு எதிரியிடம் மண்டியிட்ட கதையை. இனியாவது திருந்த வேண்டும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் ராஜ சோழன் உட்பட தமிழ் மன்னர்களின் சரித்திரத்தைவிலாவாரியாக பேசி, உணர்ச்சிபொங்க எழுதும் பலரும், எங்களுடைய போராட்டம் பற்றிய உண்மைகளை எழுத மாட்டார்கள். காரணம் ஒன்று பயம், மற்றது தங்கள் எழுத்து வியாபாரம் படுத்து விடும், தங்கள் எழுத்து விற்பனைக்கு யாரைப் பற்றி உயர்வாக எழுதினாள் பணம் கிடைக்கும் என்ற ஆசைதான்.

இனிமே சரி எங்கள் 50 வருட போராட்ட சரித்திரத்தை பற்றி உண்மைகளை மட்டும் எழுதுங்கள். கொலைகார இயக்கத் தலைவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதாமல் வருங்கால தமிழ் இளைஞர்கள் நல்வழியில் நடக்க உண்மையாலே வெளிக்கொண்டு வாருங்கள்.


logoblog

Thanks for reading ராஜராஜ சோழனும், ஈழத் தமிழர்களும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment