பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 1 October 2022

தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்

  வெற்றிசெல்வன்       Saturday, 1 October 2022
ரூபன் படுகொலை இறுதிப் பகுதி

மனித நேயம் இன்றி அரசியல் பக்குவம் இன்றி தமது புரட்சிகர கடமை பற்றிய புரிந்துணர்வு இன்றி வெறுமனே ஆயுதம் தாங்கி தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து குறிபார்த்து சுடும் போராளிக்கும் சிங்கள ராணுவ வீரனுக்கும் கூலிப்படையின் எனக்கும் என்ன வேறுபாடு இத்தகையவர்கள் மனித மேம்பாடு உடைய புதிய சமுதாயத்தை உருவாக்க தகுதியுடையவர்கள் தானா?
    
   எல்லாவற்றுக்கும் மேலாக போராளிகளுக்காக தம்மையும் ஒறுத்து ஆதரவும் தந்து அவர்களை நம்பி வாழும் தமிழ் மக்களிடமிருந்து இயக்கத்தின் உண்மை நிலைமை எவ்வளவு காலம் மறைத்து வைப்பீர்கள் . நீங்கள் மௌனம் சாதிப்பது ஊழல் நிறைந்த உங்கள்தலைமையுடன்சமரசம் செய்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருப்பதற்கு சமமாகும் இயக்கத்தில் இருக்கும் பல உண்மை போராளிகளை போலவே தமிழ் மக்களும் பல தியாகங்களை செய்து உள்ளார்கள் பலர் பலியாகி விட்டார்கள் இனி இழப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை இனியும் நீங்கள் உங்கள் தலைமையை பேணி பாதுகாப்பது யாருக்காக நீங்கள் போராட வந்தீர்களோ அவர்களுக்கு நீங்கள் இழைகும் மிகப்பெரிய துரோகமாகும்.
 தமிழ் மக்களே!
அமைதியையும் சமாதானத்தையும் நேசித்த நீங்கள் சிங்கள பேரினவாதத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் போர்க்குணம் கொண்டு கிளர்ந்து எழுந்து இருந்தீர்கள். பல உயிர்கள் பலியாகின உடைமைகள் பறிக்கப்பட்டன.இழப்பதற்கு எதுவுமின்றி இன்று தொடர்ந்து போராடுவதை தவிர வேறு வழியின்றி நிற்கிறீர்கள்ஆனால் உங்களுக்காக போராட முன்வந்துள்ளதாக கூறிக்கொள்ளும் இயக்கங்களின் பாசிச போக்கும் அராஜக நடவடிக்கைகளும் உங்களை விடுதலைக்கு இட்டுச் செல்லுமா? இந்த இயக்கங்களுக்கு நீங்கள் பொருள் உதவியும் உடல் உதவியும் தந்தீர்கள் பாதுகாப்பும் ஆதரவும் கொடுத்தீர்கள் உங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அர்ப பணி தீர்கள். உங்கள் ஆதரவு இன்றி இவ்வியக்கங்கள் ஈழமண்ணில் நடமாடவே முடியாது போராட்டத்திற்கான உங்கள் பங்களிப்பினால் இவ்வியக்கங்கள் தலைமைகளே விட அதிகமாக எதிரியின் கையில் அவமானத்தையும் அழிவையும்அனுபவித்தீர்கள். ஆகவே இவ்வியக்கததலைமைகளின் அராஜக போக்கை தட்டிக்கேட்க உங்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது சில வெற்றிகரமான தாக்குதல் மட்டும் விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை மேற்கொள்ளும் இயக்கமும் விடுதலை இயக்கம் ஆகி விடாது. அப்படி நீங்கள் தாக்குதல்களை மட்டும் ரசிக்க விரும்பினால் அந்நிய நாடுகளில் உள்ள கூலிப்படையினர் இவர்களை விட நுட்பமான வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வல்லவர்கள் பணம் கொடுத்தால் மட்டும் போதும்
ஆனால் இது உங்களை ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதற்காக நீங்கள் நடத்தும் போராட்டம் உங்களது நலன்களைப் பிரதி பலிக்கும் தலைமைகளேஇப் போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதி கொண்டவை எதிரியின் கொடுமையான கொலை கரங்களில் இருந்து தப்புவதற்காக அதே தன்மையை கொண்ட தலைமைகளுக்கு அடங்கி மீண்டும் அதே ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் போகிறீர்களா?
உங்களுக்காக போராடப் போவதாக கூறிக் கொண்டு உங்கள் பணத்தில் வாழ்ந்து கொண்டு உங்கள் பிள்ளைகளையே கொலை செய்து வரும் இந்த தலைமைகளை நீங்கள் கண்டிக்க மறுத்தாள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் உங்களையும் கடிக்க நீங்கள் அனுமதி கொடுக்கிறீர்கள் என்பதே பொருள். நீங்கள் பார்வையாளராக மட்டும் இருப்பது எத்தனை நாளைக்கு உங்களுடைய அலட்சியப் போக்கால் நேற்று இவர்கள் போராளிகளை கொலை செய்து காரணம் காட்டினார்கள் இன்று கொலைகளை செய்துவிட்டு மூடிமறைத்து மௌனம் சாதிக்கிறார்கள் செய்யவில்லை என்கிறார்கள் நாளைஇப்படித்தான் செய்வோம்நீங்கள் யார் கேட்பதற்கு என்பார்கள் பின்பும் கேட்டால் உங்களையும் கொள்வார்கள் இதனை நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா
  .
இயக்க தலைமைகளின் சர்வாதிகார போக்கை கண்டு மனம் குமுறும் பல இளம் போராளிகள் ஒவ்வொரு இயக்கத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் மௌனம் சாதிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் காரணம் கொஞ்சம் கூட ஜனநாயகத் தன்மை இல்லாத இவ்வியக்கங்கள் போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை ஒத்த கருத்துடைய மற்ற தோழருடன் கலந்துரையாடி தலைமையை விமர்சிக்கவோ தட்டிக் கேட்கவும் சுதந்திரம் எதுவுமில்லை இந்த நேர்மையான போராளிகளை பாதுகாக்கவும் அவர்கள் கேட்க வேண்டிய கேள்விகளை தலைமைகளிடம் கேட்கவேண்டியது உங்கள் கடமையாகும்போராளிகளை கொலை செய்துவிட்டு தலைமையில் காட்டும் காரணங்களை நம்பிவிடாதீர்கள் கொலையுண்ட போராளிகளின் நடவடிக்கைகளுக்கு மாசு கற்பித்து அபாண்டமான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இத்தகைய இயக்கங்களின் மரபு என்பதை தீர விசாரியுங்கள்
   .            .. உங்கள் பெயரில் தம்முயிரை அர்ப்பணித்து போராட வந்திருக்கும் பல நேர்மையான இளைஞர்களின் போராட்ட வாழ்வுக்கும் தொடர்ந்து பணிக்கும் நீங்கள் இன்று உத்தரவாதம் அளிக்க முடியும் நீங்கள் விடுதலைப் பாதையை நிர்ணயிக்கும் ஒரு கால கட்டத்தை அடைந்து உள்ளீர்கள் சிந்தியுங்கள் நாளைய பொழுது உங்கள் கையில்.
விடுதலைப் போராளிகளே! தமிழீழ மக்களே!

ரூபன் செய்த குற்றம்தான் என்ன?
போராளிகளை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்தானா?
எதிரி படையின் உளவாளியாக இயக்கத்திற்கு வந்தானா?
தனது வாழ்வை வளப்படுத்த இயக்கசொத்தை கொள்ளை அடித்தானா?
இல்லை
அவன் மக்களை நேசித்தான்
இயக்கத்தின் தவறான போக்குகளால் விடுதலைப் பாதை வழி மாறக் கூடாது என சிந்தித்தான்
தனக்கு நல்லது என்று பட்டதை மறைக்காமல் சூழ்ச்சி செய்யாமல் தலைமையிடம் எடுத்துரைத்தான் போராளிகள் கொல்லப் படுவதற்கு காரணம் கேட்டான்
 சர்வாதிகார தனமாக தலைமை செய்வதை சுட்டிக் காட்டினான்
மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு மாற்றி இயக்கங்களுடன் மோதல் ஏற்படுத்துவதே கண்டித்தான்
இயக்கத்தின் உட்கட்சி ஜனநாயகத்தை யும் அதிகார பரவலாக்கம் வற்புறுத்தினான்
தனக்கு இடப்பட்ட பணிகளை என்றாவது தட்டிக் கழித்தானா
போராட மாட்டேன் என்று சொன்னானா? அல்லது அமைப்பில் இருந்து கொண்டே இயக்கத்தின் தவறுகளை வெளியே விமர்சித்து திரிந்த ஆனா

மக்களின் உண்மையான விடுதலையை விரும்பி போராட வந்த ரூபனுக்கு புலிகளின் பரிசு சித்திரவதைக்கு பின் மரண தண்டனை

போராளிகள் உரிமைக் காப்பு இயக்கம்

12/08/1985
முற்றும்
logoblog

Thanks for reading தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment