பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 10 February 2024

பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Saturday, 10 February 2024
-

மார்கழி 2002 தேனீயில் வெளியான அமிர்தலிங்கமும் பாலசிங்கமும் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்  தேனீ வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது

கனடாவிலிருந்து வெளியாகி இப்பொழுது நின்றுபோய்விட்ட தாயகம் பத்திரிகை anton Balasingam-20ஒரு தடவை ஒருவரின் கேள்விக்கு விடையளிக்கும்பொழுது எழுதியது.

கேள்வி:- பிரபாகரனின் பிரதான எதிரி யார்?.

பதில்:- அன்ரன் பாலசிங்கம்

அந்தத் தீர்க்கதரிசனம் நிதர்சனமாகும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அன்ரன் பாலசிங்கம் வடமராட்சியிலுள்ள வதிரியைப் பிறப்படமாகக் கொண்டவர். அவர் தனது பட்டப்படிப்பை முடித்ததன் பின்பு வீரகேசரி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணி புரிந்தார். இவர் 1970 இடதுசாரி ஐக்கியமுன்னணி அரசாங்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் வேலைசெய்தார். அவர் பிரித்தானியத்தூதரகத்தில் என்ன வேலை செய்தார் என்று வாசகர்கள் கேட்கக் கூடும். அது ஓர் மர்மமான விடயம். பாலசிங்கம் பிரித்தானியத் தூதரகத்தில ; என்னவாக வேலை செய்தார் என்பதை எங்களுக்குச் சொல்ல முடியுமா. இருபது வருடத்திற்கு முந்தி அவருக்குத் தெரியாதுதான் ஒரு நாள் தமிழ்மக்களின் தலைவராக வருவேன் என்று.

 புலிகள் இயக்கத்தை ஏதோ அன்ரன் பாலசிங்கம்தான் கட்டி வளர்த்தாக அனேகர் எண்ணக் கூடும ; ஆனால் புலிகள் இயக்கத்தின் தொடக்ககாலப் பிற்காலவளர்ச்சிக்கு அமிர்தலிங்கத்தின் பங்களிப்பு  அளப்பரியதென்பதை மாணவப்பேரவை உருவான காலத்திலிந்து அரசியலில் ஈடுபட்டவர்கள் நன்கறிவர். அமிர்தலிங்கம ; மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் போட்டியிட முன்பு  தீவிரவாத இளைஞர்களோடு பேசுவதற் கென்று இந்தியாவுககுச் சென்றபொழுது நுங்கம் பாக்கம் விமான நிலையத்தில் பிரபாகரனே அமிர்தலிங்கத்தை வரவேற்ற செயல் தமிழ் இளைஞர் இயக்கங்களோடு அன்றே தம்மை இணைத்தவர்களுக்குத் தெரியும்.

  பாலசிங்கம் எந்தவித விசாப் பிரச்சனையுமின்றி பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தார். அவர் லண்டனிலுள்ள south bank சர்வகலாசாலையில் படித்தார். அவர் அங்கு தனது கலாநிதிப் பட்டத்திற்கான கட்டுரையாகத் Theory of man என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரையைப் பல்கலைக் கழகம் தகுதிவாய்ந்ததாகவோ தரம் வாய்ந்ததாகவோ ஏற்றுக்கொள்ளாதது புதுமையல்ல.

 எழுபதுகளின் பிற்பகுதியில் லண்டனுக்கு அனேக தமிழ் இளைஞர்கள் படிப்பதற்கென்று குடியேறினர். அவர்களுள் அதிகமானவர்கள் தரப்படுத்தாலால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் மாணவப் பேரவையில் இணைந்தவர்களும் அடங்குவர். எப்பொழுதுமே பிறதேசத்து வாழ்க்கை தேசிய வாஞ்சையை அதிகரிக்கும். அதுவும் இங்கிலாந்து தனது பழையகாலனித்துவ மாந்தர்களை மனிதர்களாகக் கணக்குப்போடாத சூழ்நிலையானது மேலும் தேசப் பற்றைக் கூட்டும். ஆகவே லண்டனில் வந்த சிலர் அரசியல் உணர்வை மெல்லமெல்லப் பெறத் தொடங்கினர். இவர்களுள் வைகுந்தவாசன், புளொட் அமைப்பின் அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த மகா உத்தமன,; லண்டனில் தமிழ் ஈழப் புலிகளுக்குப் பொறுப்பாயிருந்த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணன், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகரும் ஈழவர் இடர்தீர எழுதிய இரத்தினசபாபதி, பின்னாளில் ரெலோவின் திம்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட சாள்ஸ்;, அன்ரன் பாலசிங்கம் அடங்குவர். இவர்கள் தங்களுக்குள்ளே கதைத்து யாழ்பாணத்து விவசாயக் குணாம்சத்தால் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டிருந்ததால் எந்தவித ஸ்தாபன வடிவத்தையும் எடுக்கவில்லை. அந்நாளில் லண்டனுக்கு விஜயம் செய்த அமிர்தலிங்கம் இவர்களை ஐக்கியப் படுத்தி Tamil Information Centre என்ற பேரில் ;ஸ்தாபனப்படுத்தினார்;. இது அமிர்தலிங்கத்தின் சாதனைகளில் ஒன்று.

இந்தத் ஸ்தாபன வாழ்க்கையின் பலாபலனாலேயே இவர்களின் கூட்டுக்கலந்துரையாடலால் பாலசிங்கம் Tamilnations self determination என்றஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டார். அந்தப்புத்தகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான இன்று socialist equality WRP (workers revolutionary party) யின் அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப் பட்டது. இதன் பின்விளைவாலேயே எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் இயக்கத்தை ரொக்சிய இயக்கமென்று சொன்னவர்களும் உண்டு.

 அந்த ஆங்கிலப் புத்தகத்தை அடியொற்றியே அன்று வெளிவந்த சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி; என்ற புத்தகம் வெளிவந்தது: அந்தப் புத்தகத்தை இலங்கைக்கு கொண்டுவர உதவியவர் கிருஷ்ணனாகும் . கிருஷ்ணனுக்கு அன்றய தமிழர்விடுதலைக் கூட்டணயின் கொழம்புக்கிளைச் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரனோடு தொடர்புகள் இருந்தது. உமாமகேஸ்வரனே அன்று புலி இயக்கத்தின் சர்வதேசத் தொடர்புகளுக்குப் பொறுப்பாக இருந்தவராகும்.  சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி புத்தகம் வெளிவந்த பிறகு திரு உமாமகேஸ்வரன பாலசிங்கத்தை ஒரு தடவை இந்தியாவுக்கு வரும்படி கேட்டதோடு அவரது பயணத்துக்கான விமானப் பயணச்சீட்டையும் அனுப்பியிருந்தார் இந்த நாட்களில் பல அரசியல் மாற்றங்களும் பல அரசியல் அபிவிருத்திகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

 எண்பதாம் ஆண்டின் தொடக்கத்தில் விழித்திடு என்ற பத்திரிகை ஜேர்மனியில் வெளிவந்தது: இது ஜேர்மனியில் உள்ள ஸ்ருடகாட் நகரத்தில் வெளிவந்துகொண்டிருந்தது. இந்தப் பத்திரிகையே தமிழீழப் போராட்டத்தை ஐரோப்பாவில் அணிவகுத்த பத்திரிகையாகும். அதை அந்நாளில் பரமதேவாவும் வல்வெட்டித்தறையைச் சேர்ந்த உதயகுமாரும் நடாத்திவந்தனர். ( இந்த இருவரும் இப்பொழுது அரசியலை விட்டு ஒதுங்கி கனடாவில் வாழ்கின்றனர்:) இந்தப்பத்திரிகையின் வரவால் இந்தப் பத்திரிகை நாடாத்துபவர்களைச் சந்திக்க இரண்டுதடவை அந்நாளைய சாவகச்சேரிப் பாரளுமன்ற உறுப்பினர்  நவரத்தினமும் ஆனந்தசங்கரியும் வந்திருந்தனர். இந்தப்பத்திரிகையை நாடத்தியவர்கள் 1981 இரத்தினபுரி இனக்கலவரத்தை அடுத்து ஜேர்மனியின் பொன் நகரத்தில் இருபதினாயிரத்துக்கு மேலான தமிழர்களை அணிவகுத்து ஓர் ஆர்ப்பாட்ட ஊhவலத்தை நடாத்தினார்கள். இதன் ஆர்ப்பாட்ட ஊhவலத்தின் பின்பே ஏறத்தாள ஐரோப்பிய நகரங்கள் முழுவதிலும் தமிழர்கள் தமிழீழ விடுதலைக்காக அணிவகுக்கப் பட்டனர். இந்நாட்களில் பரமதேவாவுக்கோ உதய குமாருக்கோ பாலசிங்கத்தோடு ஒரு தொடர்பும் இருந்ததில்லை. தொடர்புகள் கிருஷ்ணனோடேயே இருந்தது.

இந்த நாட்களில் புலிகள் இயக்கம் உடைந்து உமாமகேஸ்வரன் அணியாகவும் பிரபாகரன் அணியாகவும்  பிளவுபட்டது: அதன் பின்பு புதியபாதை சுந்தரத்தால் வெளிக்கொணரப் பட்டது: ஏற்கனவே இரத்தினசாபாபதியாலும் ஈரோசாலும் வெளியிடப்பட்ட ஈழவர் இடர்தீர வெளி வந்திருந்தது. இரத்தினசபாபதியும் மகாஉத்தமனும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடும் மற்றும் பல தேசியவிடுதலை இயக்கங்களோடும்  உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகும் பாலசிங்கம் அப்படியல்ல. விழித்திடு, புதியபாதை, ஈழவர் இடர்தீர எல்லாமே தமது கொள்கை சோஷலிசம் என்பதை வெளிபடையாகவே அறிவித்துக்கொண்டிருந்தன. ஜேர்மனியின் விழித்திடு பத்திரிகை யாரோடு சேருவதென்ற பிரச்சனை உருவெடுத்தது: பரமதேவா உமாமகேஸ்வரனோடு தொடர்பையையும் இறுக்கமாக்கிக் கொண்டிருந்தார். உதயகுமார் பிரபாகரனோடு தொடர்புகளை ஏற்படுத்தி விழித்திடுபத்திரிகை பிரபாகரனோடு சேரவேண்டும் என்றிருந்தார்: இந்த இக்கட்டான நேரத்தில் பிரபாகரனிடமிருந்து உதயகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது: அந்தக் கடிதத்தை உதயகுமார் தன்னோடு நெருக்கமாக இருந்த சிலருக்குக் காட்டியிருந்தார்: அந்தக் கடிதத்தில் பிரபாகரன் மேற்கண்டவாறு எழுதியிருந்தார்:~~நான் தங்கத்துரையாக்களோடு சேர்நது விட்டேன். இனிச் சாகும் வரை அவர்களை விட்டுப் பிரியமாட்டேன்.~~ என்று எழுதப்பட்டிருந்தது.

  இந்தக் கடிதத்தின் பின்னர் உதயகுமார் பிரபாகரனைச் சந்திக்கவென்று இந்தியா சென்றிருந்தார்: உமாமகேஸ்வரன் பிரபாகரன் பிளவு பற்றித் தெரியாத பாலசிங்கம் ஏற்கனவே உமாமகேஸ்வரன் அனுப்பிய விமானப் பயணச்சீட்டைப் பாவித்து உமாமகேஸ்வரனைச் சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால் பாலசிங்கமும் உதயகுமாரும் சென்றிருந்த காலத்தில் உமாமகேஸ்வரன் ஊர்மிளாவோடு தொடர்பு என்ற காரணத்தையும் வேறு பலகாரணங்களையும் காட்டி உமாமகேஸ்வரனை அனi;றய புலிகள் இயக்கம் தங்களின் இயக்கத்திலிருந்து விலக்கி வைத்திருந்தது. சென்னைக்கு வந்திருந்த பாலசிங்கம் ஏற்கனவே உமாமகேஸ்வரன் கொடுத்த விலாசத்திற்குச் சென்றபொழுது அங்கே உமாமகேஸ்வரன் இல்லாமல் பிரபாகரனே நின்றிருந்தார்: இந்தத் தற்செயற் சம்பவமே பாலசிங்கத்தைப் புலிகளோடு இணைத்தது . பிரபாகரன் பாலசிங்கத்தை தங்கத்துரை குட்டிமணியாக்களிடம்தான் கூட்டிச்சென்றார்: அதன்பின்பும் பிரபாகரன் தங்கத்துரை குட்டிமணியாக்களின் ரெலோவிலே சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். இந்நாட்களில் பிரபாகரன் தங்கத்துரை குட்டிமணியாக்களோடு சேர்ந்து குரும்பசிட்டீ வன்னியசிங்கம் நகைக் கடை கொள்ளை அடித்ததோடு வன்னியசிங்கத்தையும் கொன்றிருந்தார்கள். இந்த நகைக் கடைக் கொள்ளையானது பின்னாளில் திருநெல்வேலி வங்கிக்கொள்ளையைத் தயாரிப்பதற்காகவே செய்யப்பட்டது: குரும்பசிட்டி வன்னியசிங்கம் நகைக்கடைக்கொலை நியாயப்படுத்த முடியாத கொலையாக இருந்தது:

 மேலும் ஜேர்மனியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த விழித்திடு உமாமகேஸ்வரன் பிரபாகரன் பிளவோடு தொடர்ந்து வெளிவர முடியாததாக ;இருந்தது: அந்த விழித்திடுவுக்கு பாலசிங்கம் ஓரேயொரு கட்டுரை எழுதினார்: அதானோடு அது நின்று போனது:

இந்த நெருக்கடிக்குள்  லண்டனில் கிருஷ்ணன் உமாமகேஸ்வரனாக்களோடு சேர்ந்து கொண்டார்: பிரபாகரன் சேர்ந்திருந்த தங்கத்துரையின் ரெலோ இயக்கத்தை லண்டனில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த பாலசேகரம் (முட்டாசி) பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இந்நாட்களில் ஜேர்மனியில் ஸ்ருட்காட் நகரில் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்குக் கொண்டவருவதற்காக பாலசிங்கத்தை உதயகுமார் அழைத்திருந்தார். ஸ்ருட்காட்டில் மூர் ஹொட்டலில் 1981 இன் பிற்பகுதியில் பாலசிங்கத்தோடான கலந்துரையாடல் நடைபெற்றது. அதிலே குரும்பசிட்டி நகைக் கடை வன்னியசிங்கம் கொலையைப் பலர் ஆட்சேபித்த போது பாலசிங்கம் பின்வருமாறு விடையிறுத்தார்.

.~காட்டிலே இளைஞர்கள் சாப்பாடில்லாமல் ஓணானைச்சட்டுச் சாப்பிடுகிறர்கள். அவர்களின் உயிர் வாழ்வுக்காகவே நகைக்கடை கொள்ளையடிக்கபட்டது என்றார். பின்பு எந்த வரிசைக்கிரமமான தயாரிப்புமின்றி வீணே பொலிசையும் இராணுவத்தையும் ஆத்திரமூட்டி மக்களைத் துப்பாக்கிக் தீனியாக்கவேண்டாமென்று பாலசிங்கத்தைக கேட்ட பொழுது, அதற்கு விடையிறுத்த பாலசிங்கம் ~இரண்டொரு இராணுவத்தையோ பொலிசையோ கொல்வதோ அன்றேல் நாகவிகாரைப் புத்தபிக்கு போன்றவர்களைக் கொல்வதோ தனிமனித பயங்கரவாதமோ ஆத்திரமூட்டலோ ஆகாது. இதுதான் ஆயதப் பிரச்சாரம்.~ ;இதுதான் அன்றைய பாலசிங்கத்தின் அரசியல் ஆலோசனை. அந்தக் கூட்டத்திற்கு வந்த பாலசிங்கம் தனது அரசியல் முன்னோக்கையோ வேலைதிட்டத்தையோ தமிழ்மக்களின் உரிமையை எப்படி வென்றப்பது பற்றியோ தமிழர் வீடுதலைக்கூட்டணியைப்பற்றியோ இனவாத சிறிலஙகா அரசைப்பற்றியோ ஒன்றும் பேசவில்லை. மாத்திரமல்ல எதைப்பற்றியும்பேசாது உங்களின் கேள்விகளைக் கேளுங்கள் என்று கேட்டார். அதிலிருந்தே பாலசிங்கம் ஒருநாளும் அரசியற் ஸதாபனங்களில் இருக்கவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அரசியல் இயக்கமென்பது மக்களின் அரசியல் உணர்வை உயர்த்துவதன் மூலம் மக்கள் தாங்களாகவே மாற்று வேறுவழி ஏதுமில்லாத அந்த அரசியல் உரிமையை வென்றெடுக்கவேண்டும ; என்பதற்காகத் தாங்களாகவே முன்வந்து அர்பணிப்புக்களைச செய்வர்.

1981 ஜெர்மனி ஸ்ருட்காட நகருக்கு  போனபின்பு 1983 திருநெல்வேலியில் 13 இராணுவத்தைக்கொன்று 83 இனக்கலவரம் வெடிக்கும் வரையிலும் பாலசிங்கம் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. 1983 புலிகள் இயக்கம் ஓகோகோ என்று வளர்ந்த காலத்தில் லண்டனில் புலிகளைப்; பிரதிநிதித்துவப் படுத்தியது வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாலசேகரமேயொழிய பாலசிங்கம் அல்ல. பாலசிங்கம் பின்பு 1984 அளவிற்தான் மீண்டும் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார். 1984 இன் பின்பு தான் பாலசிங்கம் லண்டனில் புலியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்: அப்பொழுதெல்லாம் ஐரோப்பாவின் புலிகளின் பிரதிநிதியாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த உதயகுமாரே விளங்கினார்

இந்தியாவிலிருந்த பாலசிங்கத்தின் வேலை புலிகள் செய்யும் அத்தனை நெட்டூரங்களையும் தமிழ் மக்கள் விடுதலை விரோதங்களையும் நியாயப்படுத்தியது தான். அவர் இடையிலே தமிழ் மக்களின் பொருளாதாரம் பற்றி எழுதியபொழுது தமிழிழத்திலே காளான் வளர்ப்பு பற்றி எழுதினார். ரெலோ கொலையின் போது ரெலோ இந்தியத் தேசவிஸ்தரிப்புக்கு முண்டு கொடுக்கிறது என்று எழுதினார். பிரபாகரனை இந்திய அரசு சிறைப்பிடித்தபொழுது யாழ்பாணம் முழுவதும் புலிகள் இந்தியா தேசவிஸ்தரிப்பு நோக்காலேயே பிரபாகரனைக் கைது செய்தது: என பிரச்சாரம் செய்தனர்.

அதன்பின்பு இந்திய சமாதானப் படைகளோடு யுத்தந் தொடங்கியபொழுது ஏதோ இரண்டொரு தினங்களில் தாம் இந்தியப் படைகளை வெல்வதாகவும் தமக்கு SAM /surface to air missle கிடைக்கப் போவதாகவும் கூறினார். இவரது மர்மம் என்னவெனில் இந்தியாவிலும் இலங்கையிலும் தேடப்பட்ட பொழுதும் எந்தவித கிலேசமும் இன்றி விமானங்களினே}டு லண்டன் வந்திறங்கி விடுவார். தமிழ் மக்களும் இதுபற்றிக் கேள்வியெழுப்புவது கிடையாது. புலிகள் பிரேமதாசா ஒப்பந்தத்தின் போது வாழையிலையிற் சாப்பிட்டதை ரூபவாகினி காட்டியதைத் தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் இந்தச் சம்பவத்தின் பின்பு புலிகள் அமைப்பிற்கு முற்போக்கு முலாம் பூசினவர்கள் எல்லலாம் பயங்கரக் கனவு கண்டு விழித்தாகள்.

இவ்வளவு நாட்களும் அரசியல் ஆலோசகராக இருந்தவர் திடீரென்று அரசியல் வானுககு வந்து விட்டார். உலகிலுள்ள அரசியற் தலைவர்களுக்கெல்லாம் அரசியல் ஆலோசகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் திரை மறைவிலேயே ஆலோசனை வழங்குவர்கள். அவர்கள் எவரையும் ஆரசியல் ஆலோசகர் எனறு எந்த நாடும் அம்பலப்படுத்துவது கிடையாது.   பாலசிங்கத்தை டாக்டர் பாலசிங்கம் என்று எழுதியபொழுது ஏன் இப்படிப் பொய் சொல்லிப் புழுகுகிறீர்கள் என்று கேட்ட பொழுது அவரை டாக்டரென்று சொன்னால்தான் தமிழீழப் போராட்டத்திற்கு ஒரு அங்கீகாரம் உண்டென்றார்கள்.

 நாங்கள் பட்டத்தால்தான் மனிதனின் அறிவை அளக்கலாம் என்பவர்கள் அல்ல. பிளாட்டோ காலத்திலிருந்தே அறிவை அளக்கும் வழிகளை மனித சமூகம் தேடியது. உள்ள வழிகளிலே சோதனைகளும் பட்டங்களுமே சிறந்தது: வள்ளுவர் கூட

 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்  கொள்ளார் அறிவுடையார்  -குறள்-

கல்வி கற்றுப் பட்டம் பெறாதவனுடைய அறிவுடமை ஒரு நேரத்தில் நன்றாக இருந்தாலும் வரிசைக்கிரமமாகக் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் அவனது அறிவை அறிவாகக் கொள்ளாததோடு அவனையும் அங்கீகரிக்காவதவர்கள். இன்று சிங்கள மக்களிலேயுள்ள கற்றவர்களே பாலசிங்கம் டாக்டர் பட்டம் எடுக்காதவர் என்பதைத் தாய்லாந்திலேயே சொல்லியிருக்கிறார்கள். பாலசிங்கத்தின் நேர்மையும் கலாச்சாரமும் தமிழ் மக்களை ஏளனஞ் செய்யத்தான் வழிவகுத்தது:

 வன்னியிலே நடந்த ஊடகவியலாளர் மகா நாட்டிலே தலாவாக்கலையிலிருந்து வந்த நிருபர் கேள்வி கேள்விகேட்கும்பொழுது  தான் தலாவாக்கலையில் இருந்து வந்ததாக அறிமுகப் படுத்தியே கேள்வியைக் கேட்டார். தலவாக்கலைத் தோட்டம் நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தப் போராட்டங்களை நடாத்தி வெற்றிவாகை சூடிய தோட்டமாகும். பல நூறுமறை பத்திரிகைகளில் வந்த பெயரே பாலசிங்கத்திற்கு நினைவில் இல்லையென்றால் அவரின் அரசியல் ஞானம் எந்தமட்டத்தில் உள்ளது என்று எவரும் அளவிடலாம்.  அவரைக் கேள்வி கேட்க அனுமதிக்கும்பொழுது பாலசிங்கம் இப்படிக் கூறினாh: அந்தமகாநாட்டிலே வெட்கமில்லாமல்லாமல் தமிழ்ஈழத்திலே தொழிலாளர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தும் ஸ்தாபனங்கள் ஒன்றும் இல்லையென்றார்: அப்படியென்றால் தமிழீழத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உழையாத ஒட்டுண்ணிகள் அல்லது முலாளிகளாகத்தான் இருக்கவேண்டும். தொழிலாளிகள் இல்லாத தமிழீழத்திற்கு ஏன் சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி யென்ற புத்தகம் வேண்டும்.

 சன் ரீவிக்குப் பேட்டி கொடுத்தபொழுது பாலசிங்கம் சொன்னார் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் புலி சொல்லுறதைச் செய்வதைத் தவிர வேறோன்றையும் செய்யக்கூடாது என்று. இதுபற்றிக் கனடாவிலே ஒரு வானொலிக் கலந்துரையாடலில் ஆனந்தசங்கரியைக் கேள்வி கேட்டபொழுது ஆனந்தசங்கரி சொன்னார் பாலசிங்கம் எங்களையெல்லாம் சூரன் தூக்கிற ஆளாக எண்ணுகின்றார். இனிமேலாவது பொறுப்போடு நடக்கும்படி சொல்லுங்கோ. இப்பொழுது பாலசிங்கம் யுஎன்பி இனவாத அரசாங்கத்திற்கா ஒஸ்லோவிலே காசு தண்டப் போகப் போகிறார்: இதோ ஒரு பத்திரிகைச் செய்தி

A ceasefire is in place and the second round of peace talks between the government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has just concluded in Thailand. But the figures for the defence budget indicate that the UNF is prepared for war if the LTTE does not agree to its demands. Defence spending will be 50.2 billion rupees this year and 50.4 billion rupees next year, as compared to 51 billion rupees in 2001 when intense fighting was still taking place.

யுஎன்பி அரசாங்கமோ 50 பில்லியன் ரூபாவுக்கு மேலாக வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென இந்த வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. குமாரத்துங்கா அரசாங்கம் தான் உக்கிரமாகப் போராடியகாலத்திலேயே 51 பில்லியன் ரூபாவைNயு பாதுகாப்புக்கென்று ஒதுக்கியது. பாலசிங்கம் ஏதோ வெளிநாடுகள் நிதி தந்துவிட்டால் தமிழ் மக்களின் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்: தமிழ் மக்களின் துயரமே புலிகளின்விடுதலைப்போராட்டத் தவறுகளால வந்தது; என்பதை தமிழ் மக்கள் எப்போவோ உணர்ந்து விட்டார்கள். மக்களின் உணவு உடை உறைவிடம் என்பவற்றிற்கு உத்தரவாதம் வரும் வரை தமிழ் சிங்களப் பிரச்சனை ஓயப்போவதில்லை. ஒரு நாளைக்காவது தமிழ் சிங்களப் பிரச்சனை இல்லாமல் யுஎன்பியால் ஆட்சி நடாத்த முடியாது: என்றாவது தமிழ் சிங்களமக்களிடையே இனவாதம் ஒழிந்து ஒற்றுமை ஏற்பட்டு
logoblog

Thanks for reading பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment