இந்த உலகில் எது நிச்சயம் இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம் பிறந்த மனிதன் அது போல் இறப்பது. பிறந்த ஒரு மனிதனின் மரணம் பல விதங்களில் இருக்கலாம். பிறந்த மனிதன் அவனின் செயல்பாடுகள் மனிதன் இறந்த பின் விமர்சிக்கப்படுகின்றன. ஒரு மனிதனால் மக்களும் ஊர்களும் நாடும் நல்ல பயனைப் பெற்றால் அவரின் மரணத்தின் பின் மக்கள் கவலைப்படுவார்கள் நல்ல ஒரு மனிதன் போய்விட்டான் என்று. அதற்காக அவர் இறந்த பின்பு அவர் இருக்கும் போது செய்யாத செயல்களை எல்லாம் சொல்லி அவர் இருந்திருந்தால் எப்படி எல்லாம் மாற்றம் வந்திருக்கும் அநியாயமாக இறந்துவிட்டார், அவர் உயிருடன் இருக்கும் போது அவரைப் பற்றி தரை குறைவாக பேசியவர்கள் உயிருடன் இருக்கும் போது அவரைக் கண்டும் காணாமல் போனவர்கள் எல்லாம் அவர்களின் மரணத்தின் பின்பு தங்கள் சுய தேவைக்காக வாய்க்கூசாமல் புகழ் பாடுகிறார்கள். அண்மை காலங்களில் நடக்கும் செய்திகள் இவை. உயிருடன் இருக்கும் போது அந்த மனிதன் என்ன சாதனை செய்தான். அதனால் பிற்காலத்தில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று யாரும் எழுதுவதுமில்லை பேசுவதும் இல்லை
எமது ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சேர்ந்த அவ்வளவு இளைஞர்களும் பெண்களும் இலங்கை இராணுவத்துடன் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவோம் என்ற நினைப்பில் தான் இயக்கங்களில் சேர்ந்தார்கள். இலங்கை ராணுவ சண்டையில் இறந்தவர்கள் பற்றி கவலை பட தேவையில்லை. அவர்கள் வரும்போது மரணத்தை தெரிந்து கொண்டே வந்தவர்கள் வீர மரணம் அவர்களது.
ஆனால் எங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் சக தமிழ் விடுதலைஇயக்கங்களால் தலைமைகளின், தலைமை போட்டிகளாலும், தான் மட்டுமே விடுதலை இயக்கத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற ஆசையாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சொந்த தமிழர்களாலேயே கொல்லப்பட்டார்கள். சிங்கள ராணுவம் சிங்கள அரசு செய்ய நினைத்ததை தான் மட்டுமே தலைமை தாங்கோ வேண்டும் என்ற நினைப்பில் போராட வந்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் கடுமையான சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். இப்படி கொல்லப்பட்டதை உலகத் தமிழர்கள் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப துரோகியர் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு வரியில் முடித்து விடுவார்கள் விட்டார்கள். எவ்வளவு பெரிய கொடுமை.
இன்று பத்மநாபா ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தமுடைய சாந்தனின் மரணம் வருந்தத்தக்க என்ன காரணம் என்றால் அவர் இலங்கை போய் தனது தாயின் மடியில் இருந்து தாயின் முகத்தை பார்த்திருந்தால் தாய்க்கு சிறு சந்தோசமாவது கிடைத்திருக்கும்.
இதைப் பற்றி பதிவுகள் செய்யும் உலகத் தமிழர்கள் இந்திய அரசையும் தமிழ்நாட்டு அரசையும் வசைப்பாடுகிறார்கள். உண்மைதான் உலக அரசாங்கங்களுக்கு மனிதாபிமானங்கள் இல்லை. சட்டங்கள் தான் பேசும்.
அதுபோல் தமிழ் மக்களே சிங்கள அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்ற புறப்பட்ட மனிதாபிமானம் உள்ள நல்ல சிந்தனையுள்ள அவ்வளவு தமிழ் ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கங்களும் மனிதாபிமானத்துடன் தமிழர்களிடம் நடந்து கொண்டார்களா. தலைமைக்கு போட்டி என்று நினைத்த இளைஞர்களையும், மற்ற இயக்க தமிழ் இளைஞர்களையும் பிடித்துக் கொண்டு போய் எப்படி எப்படியான சித்திரவதைகள், பின்பு கொலைகள். தம்பியின் நிலைப்பற்றி விசாரிக்க வந்த அண்ணனிடம் தம்பியின் கொலையை மறைத்து தம்பி சிங்கப்பூர் போய் விட்டான் என்றும் பொய் கதை கூறி அண்ணனை கடலில் கொன்ற சம்பவங்களும் உண்டு. இப்படியான பல சம்பவங்கள் எல்லா இயக்கங்களும் செய்தன. அதிகம் விடுதலைப்புலிகள் ஆயிரக்கணக்கான மற்ற இயக்க இளைஞர்களையும் தங்களிடம் சேராத இளைஞர்களையும் பிடித்துக் கொண்டு போய் மிக கடுமையான முறையில் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற சம்பவங்களும் 90 ஆம் ஆண்டுக்குப் பின்பு தான் நடந்தன. அதைப் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டார்கள் கேட்டால் துரோகிகள் செத்தார்கள் என்று கூறுவார்கள். தங்கள் மகனைப் பார்க்க, இல்லாவிட்டால் தங்கள் மகனின் முகத்தை சரி காட்டுங்கள் என்று வந்த தாய் தகப்பனையும் சகோதரிகளையும் அடித்து விரட்டியவர்கள் விடுதலைப்புலி இயக்கத்தார். எதிர்த்துப் பேசிய அவர்களின் குடும்பத்தார் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன துணுக்காய் சித்திரைவதை முகாம் பற்றி அறியாதவர்கள் இருந்தால் அறிந்து கொள்ளலாம். எங்கள் மனிதாபி தானம் எப்படிப்பட்டது என்று. ஹிட்லர் யூதர்களை விஷப் புகை போட்டு கொலை செய்ததாக படித்திருக்கிறோம். ஆனால் எங்கள் தமிழ்விடுதலை இயக்கங்கள் சொந்தத் தமிழ் மக்களையே மாதக்கணக்காக வருடக் கணக்காக சித்திரவதைக்கு என்று ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் வைத்து கொலை செய்வது அண்மையில் நடந்த சம்பவம்.
உலகில் அரசாங்கங்களை குறை கூறும் தமிழ் மக்கள் கடந்த காலத்து தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் செய்த சித்திரவதை கொலைகளையும் எண்ணி பாருங்கள்
No comments:
Post a Comment