முன்பு கேள்விப்பட்ட ஒரு உண்மையான செய்தி. ஒரு இயக்கத்தின் உள் முரண்பாடுகளால் 1985 ஆண்டுஇயக்கத்தை விட்டு விலகி , பல பெண் சகோதரிகளை கொண்ட அந்தத் தோழர் சிறு சிறு வேலைகளை செய்து தனது குடும்பத்துக்கு உதவி செய்து வந்தார். அவர்தான் குடும்பத்தின் மூத்த மகன்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து நல்ல வேறு வேலைத் தேடி கொழும்பு வந்திருக்கிரார். 1987ஆண்டு, இல்லை 1988 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.
இந்தத் தோழர் தனது நண்பருடன் ஒரு நேர்முக தேர்வுக்கு போய்க்கொண்டிருக்கும் போது வெள்ளவத்தையில் வைத்து, அவர் முன்பு இருந்த இயக்கத்தின் கொழும்பு முக்கிய நபரும், அவரின் அடியாள் தோழரும், வேலை தேடி வந்த தோழருக்கு முன்பே நெருக்கமானவர்கள் அவர்கள்.
அப்போது கொழும்பு முக்கிய நபர் வேலை தேடி வந்த முன்னாள் தோழரே பார்த்து மச்சான் எங்கே போகிறாய் வா டீ குடிப்போம் என்று அழைத்து டீ குடித்துள்ளார்கள். வேலை தேடி வந்த முன்னாள் தோழர் வீட்டில் சரியான கஷ்டம் மச்சான், இன்று ஒரு வேலை தேடி இந்த ஒரு இன்டர்வியூக்கு போகிறேன் என்று கூறிவிட்டு விடை பெற்று ப் போக, இயக்கத்தின் கொழும்பு முக்கிய நபர் தனது அடியாள் தோழரிடம் நாங்கள் எல்லாம் இயக்கத்தில் இருந்து கஷ்டப்படுகிறோம், இவன் மட்டும் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற போகிறேன் என்று எங்களிடமே கூறிவிட்டுப் போகிறான், விடக்கூடாது அவனை சுட்டுக் கொள் என்று உத்தரவு போட்டுள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் முன் அடியாள் தோழர் வேலை தேடி வந்த தோழரே சுட்டுக் கொன்று போட்டுவிட்டார்.
மூத்த மகனை இழந்த அந்த குடும்பம் பல வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார்கள். இந்தக் கொலை மட்டுமல்ல இன்னும் பல அப்பாவி மக்களின் கொலைகளும் இவர்களால் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்
No comments:
Post a Comment