1983 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை எங்கள் தமிழின விடுதலைப் போராட்டத்தால், குறிப்பாக இலங்கையின் வட பகுதி மக்கள், மாணவர்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும், வாழ்வதற்கே கஷ்டப்பட்டார்கள். மின்சாரம் இல்லை உணவுப் பொருளில்லை, சொந்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தமிழ் விடுதலை இயக்கங்கள் அந்த சொந்த தமிழ் மக்களயே மிரட்டி பணம் பறித்து சொத்துக்களை பறித்து கைது செய்து சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்த காலங்கள்.
மக்கள் பொறுத்துக் கொண்டார்கள் காரணம் தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் நாளை தமிழீழம் கிடைக்கும், என்ற நம்பிக்கையே காரணம்.
2009 ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியோடு எங்கள் தமிழ்ஈழ கனவு கலைந்தது. அதன்பின்பு காட்சிகள் மாறின. அதன்பின்பு விமான தாக்குதல் இல்லை சண்டைகள் இல்லை. தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவது குறைந்தது. அங்கேயே இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த எங்கள்தமிழ் மக்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களாலும் இன்று வரை சமாளித்து வந்தாலும், தங்கள் கஷ்டத்தின் மத்தியில் தங்கள் பிள்ளைகளை முடிந்த அளவு படிப்பித்து, நல்ல வேலைகள், வேறு பல துறைகளிலும் பிரகாசிக்க செய்தார்கள்.
விடுதலைப் போராட்ட காலங்களிலும் அதன் பின்பும் வெளிநாடுகளுக்கு தப்பிப்போய், அங்கு கடுமையாக உழைத்து, அந்தந்த நாட்டில் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பித்து எல்லாத்துறைகளிலும் தங்கள் பிள்ளைகளை பிரகாசிக்க செய்து, புகழ் பரப்பி மகிழ்ந்தார்கள்.
ஆனால் போராட்ட காலங்களில் இருந்து வெளிநாடுகளுக்குப் போகாமல் அங்கேயே படித்து சகல கஷ்டங்களிலும் வளர்ந்து படித்த பிள்ளைகள் விளையாட்டுகளில், வேறு பல துறைகளில் தங்கள் திறமையை காட்டி புகழ்பெற்று வருவது, பல பேருக்கு பிடிக்கவில்லை. இலங்கைத் தமிழர்கள் நாங்கள் வெளிநாட்டில் வசதியோடு படித்து உலகப் புகழ்பெறும் பிள்ளைகளை பற்றி மகிழ்ச்சி கொண்டாடும் நாங்கள் இலங்கையில் இருந்து வளர்ச்சி பெற்று வரும் பிள்ளைகளை மட்டம் தட்டி பேசுவது போல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முகநூலில் பதிவு போடுகிறார்கள்.
அண்ண்மையில் சில பதிவுகள் பார்த்தேன். தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்ணைப் பற்றி பலவித தவறான விமர்சனங்கள். அந்தப் பெண் இலங்கை தமிழர்களின் மானத்தை காப்பாற்ற வேண்டுமாம். ஆனால் இவர்கள் வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டு அடிக்கடி விருந்து என்ற பெயரில் குடித்து கும்மாளம் போடுவார்கள்.
எல்லாவித கஷ்டங்களையும் தாங்கி இலங்கையில் வளர்ந்து வரும் இளைஞர் சமுதாயம் இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ந்தால், இலங்கை நாட்டின் பலவித விளையாட்டுத்துறைகளில் சேர்ந்து விளையாடினால் அது தமிழினத்துக்கு செய்யும் துரோகம் என்பார்கள்.
தயவுசெய்து இனிமேல் சரி பிக் பாஸில் பங்கு பெற்ற பெண்ணை பற்றி தவறான பதிவுகள் போடாதீர்கள்
No comments:
Post a Comment