கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களையும் தமிழ அரசியல் தலைவர்களையும் கொலை செய்து அழிப்பதற்காக சிங்கள பகுதிகளில் இருந்த தமிழ் தலைவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து தமிழர்கள் தமிழர்களையே கொலை செய்ய எல்லா வசதிகளும் பணமும் கொடுத்து உதவிசெய்த சிங்களர் அரசியல் தலைவர்கள் இப்போதுதமிழர் பகுதிகளில் குறிப்பாக வட பகுதியில் தங்கள் சிங்கள அரசியலை நிலைநிறுத்தவும் புதிய சிங்கள கட்சிகளுக்கு தமிழ் அடிமைகளை சேர்க்கவும் தங்களுக்கு வடபகுதியில் அஞ்சலாக இருக்கக்கூடிய தங்களால் வளர்க்கப்பட்ட தமிழ் தலைவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தும்வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தின் சிங்களவர்களோடு சேர்ந்து செய்த வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்று இந்த டக்ளஸ் தேவானந்தாவின் கைது தமிழர்களுக்கு புதிய மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. வருங்காலத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது
அரசியல் காரணங்களுக்காக டக்ளஸ் தேவ ஆனந்தாவை கைது செய்த அரசாங்கம் அவருக்கு ஆயுதம் கொடுத்த ராணுவத்தினையும் அப்போது இருந்த அரசாங்க ஜனாதிபதியையும் எப்போது கைது செய்வார்கள்.
அத்தோடு 1988,1989 ஆண்டு தங்கள் அரசியல் எதிரிகளை கொலை செய்ய ஜேவிபி இயக்கம் , பிளாட் இயக்கத்தை பயன்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். அதற்காக சித்தார்த்தன் ஐயும் ஜேவிபி இயக்கத் தலைவர்களையும் விசாரணைக்காக எப்போது கைது செய்வார்கள்.
No comments:
Post a Comment