பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 9 May 2026

இது ஒரு பழைய பதிவு நன்றி முல்லை வெளிச்சம்.

  வெற்றிசெல்வன்       Saturday, 9 May 2026
“தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கல்வியாளர்கள்” 


இந்த காணொளியில் முகம் மறைக்கப்பட்டவர், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரதி தலைவர் திரு மாத்தையாவாவார்.

வலப்புறம் கண்ணாடியுடன் கருப்பு உடையில் காணப்படுபவர், ‘கறுவல் கண்ணாடி சந்திரன்’ என அழைக்கப்படும் ஒருவராவார்.
இவர் ஒரு கடுமையான கோபக்காரர். 1990களில் இவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பார்த்தால், பயந்து நடுங்குவார்கள்.

சரியான ஆண்டு தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், ஒரு முக்கியமான சம்பவம் —
ஒரு கல்வியாளர் இவரால் கடத்தப்பட்டு, பயங்கரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இவர் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவும், ஒரு இளம் கல்வியாளரின் கணவரும் ஆவார்.
அவரது மனைவியும் அதேபோல் ஒரு பாடசாலை ஆசிரியர்.

ஒருநாள், அவரது மனைவியின் பாடசாலையில் கல்வி பெறும் மாணவன் ஒருவன் வீட்டின் வாசலில் வந்து அவரை அழைக்கிறான்.
அப்போது அந்த கல்விமான் வீட்டு படிக்கட்டின் அருகே வருகிறார்.
மாணவன் ஒருவிடம் வரச் சொல்லி, உரையாடும் போது
திடீரென ‘கறுவல் கண்ணாடி சந்திரன்’ சைக்கிளில் அந்த இடத்தில் தோன்றி,
அதை பார்த்ததும் அவரது மனைவிக்கு சங்கடமான உணர்வு ஏற்படுகிறது.

அவரது மனைவி பதற்றத்துடன் கணவரிடம் கேட்கிறார்:
“என்ன பிரச்சனை? என்ன பிரச்சனை?”

அப்போது கணவர்:
“ஒன்றுமில்லை… அப்பா அவர்கள் தம்பியவிடம் ஏதோ விசாரிக்க வேண்டுமாம். நான் போயிட்டு வருகிறேன். பயப்பட வேண்டாம். நான் திரும்ப வருவேன்…”
என்று கூறி, அந்த மாணவனின் துவிசக்கர வண்டியில் ஏறிச் செல்கிறார்.

இளம் மனைவியும் பிஞ்சு குழந்தைகளும் அவரை அனுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில்,
இது அவருடைய கடைசி நிமிடங்கள் என்பதை யாரும் உணரவில்லை.

அவரை களிகாட்டு காட்டு பகுதியில் அமைந்த ‘ஜீவன் பேஸ்’ எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே இரண்டு மூன்று நாட்கள் மரக்கொண்டால் அடிக்கப்பட்டு, மயக்க நிலையில் நான்காவது நாளில் அவர் உயிரிழந்தார்.
அவரை அடித்து கொன்றவர், அப்போதைய முல்லைத்தீவு மாவட்டத் தளபதி, பின்னாளில் ‘பிரிகேடியர் லீமா’ என அறியப்பட்டவர்.

அவரது உடலையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை.
அந்த கல்வியாளர் ஊரின் மதிப்புமிக்க ஒருவர்.
இந்நிலைக்கு காரணமானது — ஒரு சிறிய தவறு:

இந்திய இராணுவ தாக்குதலில் காயமடைந்த நண்பனை வவுனியா வைத்தியசாலைக்கு தனது Two Hundred பைக்கில் கொண்டு சென்று சேர்த்தபோது, அங்கு தனது பழக்கமான TELO இயக்க போராளியுடன் சில வார்த்தைகள் பேசியது.
இதை யாரோ ஒருவர் பார்த்து, விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், அவரது தம்பி யாழ்ப்பாணத்தில் TELO இயக்கத்தில் இருந்தார்.
இதுவும் புலிகளுக்கு சந்தேகமாய் மாறியது.

இதனாலேயே, அவரை டயரில் வைத்து எரித்து, உடலையும் மறைத்து விட்டனர்.
இது மனிதாபிமானமற்ற கொடூர செயல்.

ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு ஆசிரியர் — இவற்றை தாண்டி, ஒரு உண்மையான மனிதர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது மனைவி
தான் பணியாற்றிய பாடசாலையில் இனி கற்பிக்க முடியாது என்று கூறி விரைவில் விலகினார்.
ஏனெனில், தன்னிடம் துரோகம் செய்தவர்,
அவளுடைய மாணவன் தான் என்பது அவருக்குள் ஆழமான புண்கொடுத்தது.

அந்த மாணவன் தற்போது ஐரோப்பா நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கிறான்.
கறுவல் கண்ணாடி சந்திரன், பின்னாளில் ஒரு சண்டையில் கொல்லப்பட்டார்.
பிரிகேடியர் லீமா, இதயம் வெடித்து இறந்தார்.

முற்றிலும் — விடுதலைப் புலிகளின் முக்கியத்துவம் கொண்டோரும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் மரணமடைந்தனர்.


நன்றி.
இது ஒரு உணர்வுப்பூர்வமான வரலாற்றுச் சாட்சியம்.
இது போன்ற உண்மைகள் வரலாற்றில் மறைக்கப்படக்கூடாது.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு நன்றி முல்லை வெளிச்சம்.

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment