பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 7 May 2026

சிவராம் கொலை பற்றிய ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Thursday, 7 May 2026
#மாமனிதர்_சிவராம்_அவர்களின்_படுகொலை
#உண்மையில்_நடந்தது_என்ன ⁉️

⚠️ #தொலைபேசி_இனங்காணப்ப்ட்டது
மாமனிதர் சிவராமின் படுகொலையால் எழுந்த அழுத்தங்களை அடுத்து சிறிலங்கா பொலிஸாரினால் ஒப்புக்கு நடத்தப்பட்ட விசாரணையில் மாமனிதர் சிவராம் அவர்கள் பயன்படுத்திய #கைத்தொலைபேசி இனங்காணப்பட்டது.

⚠️ #கொலையாளி_சந்தேக_நபராக_இனங்காணப்பட்டார்
அதனை அடிப்படையாக வைத்து கொழும்பில் ஒரு அலுவலகத்தை சுற்றி வளைத்த பொலிசார் அங்கிருந்து சந்தேக நபர்களான #பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வேலாயுதன் நல்லநாதா என்ற நபர்களை கைது செய்தனர்

⚠️ #சிவராமின்_சிம்_மற்றும்_சிவராமை_கடத்த #பயன்படுத்திய_வாகனம்_கைப்பெற்றல்.
இவர்களுள் பீற்றரிடம் இருந்து சிவராமின் சிம் அட்டை கைப்பற்றப்பட்டது. அத்துடன் சிவராமை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அதே #வாகனமும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

⚠️ #சிவராமை_கடத்த_பயன்படுத்திய_வாகனம் #புளொட்_சித்தார்த்தனின்_வாகனம்_என_உறுதிசெய்யப்பட்டது
அந்த அலுவலகம் வேறு எதுவுமல்ல ”புளொட்” தேச விரோத ஒட்டுக்குழுவின் கொழும்புத் தலைமையகமே அது. அந்த வாகனம் வேறு எவரினதுமல்ல #சித்தார்த்தனின் தனிப்பட்ட பாவனையிலிருந்த வாகனமே அது. பீற்றரே அப்போதைய கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும், சித்தார்த்தனின் பிரத்தியேக வாகனச் சாரதியாகவும் இருந்தார்.

⚠️ #வழக்கு_தொடர்பான_ஆவணங்கள்_எரிப்பு
#கொலையாளி_விடுவிப்பு
”புளொட்” தேச விரோத ஒட்டுக்குழு அப்போது அரச பணியில் ஈடுபட்டிருந்ததால் வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டு, வழக்குத் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்ற களஞ்சியத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டு பீற்றர் எப்போது விடுவிக்கப்பட்டார் என்றே தெரியாத வகையில் விடுவிக்கப்பட்டிருந்ததார்.

⚠️ #கொலையாளி_கூட்டமைப்பின்_உள்ளூராட்சி #தேர்தலில்_போட்டியிட்டார்
அதன் பின்னர் இந்த பீற்றர் எனப்படும் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் துணை இராணுவக் குழுவான புளொட்டின் சார்பில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபைக்காக போட்டியிட்டார்

⚠️ #பொளொட்_சித்தார்த்தன்_மீது
#இன_அழிப்பு_குற்றச்சாட்டு_ஆதாரங்களுடன்
#சர்வதேச_மன்னிப்புச்சபை
சிறிலங்கா அரசுடன் இணைந்து தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தும், விடுதலைக்காக செயற்பட்டவர்களை கடத்திக் கொன்ற, 2009இன் பின்னரும் முகாம்களில் புகுந்த மக்களை கடத்தியதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையால் குற்றம் சாட்டப்படும் இந்த ”புளொட்” எனும் துணை இராணுவக் குழு எந்த கொள்கை அடிப்படையில் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டது? போர்க்குற்றங்களுக்காக விசாரணையை ஒப்புக்கு கேட்கும் கூட்டமைப்பு ஒரு வேளை போர்க்குற்றங்களுக்காக சிறிலங்கா அரச படைகளும் அதனுடன் சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் விசாரிக்கப்பட நேரும் பட்சத்தில் தங்களது பங்காளியான ”புளொட்” அமைப்பைக் காப்பாற்றுமா? இல்லை காட்டிக் கொடுக்குமா?

காப்பாற்றும் என்றால் போர்க்குற்ற விசாரணையை கோருவது மக்களை ஏமாற்றும் கண்துடைப்புக்காகவா? காட்டிக் கொடுக்கும் என்றால் போர்க்குற்றவாளிகளுடன் எந்த கொள்கை அடிப்படையில் இதுநாள் வரை இணைந்து செயற்படுகிறது? See Less
logoblog

Thanks for reading சிவராம் கொலை பற்றிய ஒரு பழைய பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment