இன்று இலங்கைத் தமிழர்களின் முக்கியமான சொல் துரோகி. பல பேருக்கு இதன் அர்த்தம் தெரியுமோ தெரியாது. இந்த துரோகி என்றசொல் தான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்கள் இன்று அழிந்து போக காரணம். 1970 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் தோற்று தியாகராஜா அவர்கள் வென்றவுடன், அதிர்ச்சி அடைந்த அமிர்தலிங்கம் அவர்கள் 1977 தேர்தலில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆரம்பித்த சொல்தான் துரோகி.
மக்கள் செல்வாக்கால் வெற்றி பெற்ற மாற்றுக் கட்சி உறுப்பினர்களை அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவர்களை தமிழ் துரோகிகள் என்று தமிழரசு கட்சி பின்பு தமிழ் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட யாழ் மேயர் யாழ் நகருக்கு தன்னால் முடிந்த அளவு எல்லா வளர்ச்சியையும் செய்து கொடுத்திருந்தார். செய்து கொண்டு இருந்தார். அவர் அவர் தமிழரசு கட்சிக்கு அரசியல் ரீதியில் எதிரியாக இருந்தாரே தவிர தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கவில்லை. இது அந்த காலத்தில் இளைஞர்களாக இருந்த பலருக்கும் தெரிந்திருக்கும். சிலவேளை அரசியல் காரணமாக இன்று மறுக்கலாம். அதுபோல் வட்டுக்கோட்டை எம்பி தியாகராஜா, நல்லூர் எம்பி அருளாம்பழம், சங்கிலிப்பாய் வினோதன், கிளி நொச்சி எம் பி குமாரசூரியர் தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்தார்கள். இவர்கள் அரசாங்கத்தின் உதவியுடன் தமிழ் இளைஞர்களுக்கு பல வேலை வாய்ப்புகளும் குறிப்பாக போஸ்ட் ஆபீஸ் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தார்கள். விசுவமடு என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு விவசாயி செய்ய காணிகள் பிரித்துக் கொடுத்தார்கள். அதன் மூலம் தமிழ் விவசாயிகள் மிகவும் பயனடைந்தார்கள். விஸ்வமடு இடத்தில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு மிகவும் மதிப்புக்கு கூடியிருந்தது. அப்போது ஒரு புகழ் பெற்ற நாடகம் வெளிக்கிடடி விஸ்வமடு. இது இப்போது அரசியல் செய்யும் இளைஞர்களுக்கு தெரியுமா
இவர்கள் தமிழ் மக்களுக்கு தங்களால் செய்யும் முடிந்த அளவு உதவிகளை பெற்ற மக்கள் இவர்களுக்கு தேர்தலில் வாக்கு போட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழ் தேசியம் தமிழர் உரிமைகள் தனித்தமிழ் ஈழம் போன்ற கோஷங்களை முன்வைத்து முக்கியமாக திரு அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமா. அப்போது யாழ்ப்பாணத்தில் சொந்த வீடு வாசல்களுடன் இருந்த மக்கள், அப்போது இருந்த அப்பா அம்மா பெரிய அளவு வருமானம் இல்லாவிட்டாலும் முடிந்தளவு எத்தனை பிள்ளைகள் வீட்டில் இருந்தாலும் படிப்பும் சாப்பாட்டுக்கும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார்கள். அதனால் 1970 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட இளைஞர்களுக்கு பணம் கஷ்டமோ எதுவும் தெரியவில்லை.
இளைஞர்களும் தரப்படுத்தல் போன்ற கல்வி திட்டங்கள் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று பெற்றோர்களிடம் கூறி தாங்களும் போராட அனுமதி பெற்று சுதந்திரமாக திரிந்தார்கள்.
இந்த தரப்படுத்தலை எதிர்த்து அரசாங்கத்துக்கு எதிராக உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் தாங்கள் தேர்தலில் வாக்கு பெற மறைமுகமாக அமைத்த மாணவர் பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றிலிருந்து இருந்தவர்கள் யாரும் உண்மையில் நன்றாக படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்று நினைத்தவர்கள் இல்லை. மாறாக இப்படியான போராட்டங்களில் ஈடுபடுவதால் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்க தேவையில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்னாலும் தெரிந்து கொண்டு தாங்கள் தான் தமிழ் மக்களை உரிமைகளை பெற போராட போவதாக கூறிக்கொண்டு தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றுக்கு கூலிப்படையாக செயல்பட்டார்கள் என்பது உண்மை.
அதுல அப்போது நானும் ஒரு ஆள் தான். மாணிப்பாய்ந்து கல்லூரியில் உயர்தரப் படித்துக் கொண்டிருக்கும் போது 1977 ஆண்டு தேர்தல் நேரம் அமிர்தலிங்கம், மங்கையர்க்கரசி, தர்மலிங்கம் போன்றவர்களால் நேரடியாக எங்களுக்கு சொல்லப்பட்டு, பகுத்தறியும் சிந்தனையை கைவிட்டு இவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்கள் எங்களோடு நெருங்கி பழகுகிறார்கள் என்ற ஆர்வத்தால் மாற்று கட்சி ஆதரவாளர்கள் அவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்கள் ஆசிரியர்கள் அவர்கள் வீடுகளை தாக்கினோம். என்னோடு படித்த பிள்ளைகளின் அப்பா ஆசிரியர் சிவகுரு அவர்கள் வீட்டுக்கு கல்லெறிந்தோம். புகழ்பெற்ற தமிழ் ஆசிரியர் வித்துவான் வேலன் அவர் வீட்டுக்கு கல் எரிந்தோம். தர்மலிங்கத்தார் தனக்குப் போட்டியாக அரசியலில் களமிறங்கக்கூடிய பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற உதவி செய்த சங்கிலிப்பாய் வினோதினை மிரட்டச் சொன்னார். அதன்படி பல இரவுகள் அவர் வீட்டுக்கு கல் எரிந்து மிரட்டல் விட்டோம். வினோதனின் தம்பிமார் எமக்கு நெருங்கிய நண்பர்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை அன்றிருந்த சூழ்நிலையில். இவர்கள் தான் தமிழ் தலைவர்களால் அடையாளம் காட்டப்பட்ட துரோகிகள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு.. இது அரசாங்கத்துக்கும் உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டு குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை அதை பேசி தீர்த்துக்கலாம். இதை வைத்து தமிழரசு கட்சி அரசியல் செய்ய விளைந்தது. இதுவே மாநாடு சிதற காரணம். இலங்கை அரசாங்கம் உலகத் தமிழராட்சி மாநாட்டுக்கு சம்பந்தமில்லாத இராஜநார்த்தனனை அமிர்தலிங்கம் வரவழைக்க அதற்கு இலங்கை அரசாங்கம் தடை போட்டு பிரச்சனை படுத்த கலவர மேற்பட்டு போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மின்சார வயர் அறுந்து பல உயிர்கள் பலியாகி தமிழரசு கட்சிஅரசியல் செய்ய இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். யார் இந்த இரா. ஜனார்த்தனன். தமிழ்நாட்டில் அமிர்தலிங்கத்துக்கு எடுபிடி வேலைகள் செய்து இலங்கை தமிழர் போராட்டத்தையும் இலங்கை தலைமுறைவு போராளி தலைவர்களுக்கு தமிழ்நாட்டு தமிழர்கள் செய்யும் உதவிகளை ஏமாற்றி பிழைத்தவர் தான் இந்த ஜனார்த்தனன்,
இன்று இருக்கும் இளைஞர்கள் வட்டுக்கோட்டை மாநாடு தீர்மானங்கள் பெரிதாக பேசுகின்றார்கள்.1976 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் கூட்டத்தை மாணவர்களாக இருந்த நானும் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..
தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற உதவிகளை செய்த வேறு கட்சித் தலைவர்கள்,யாழ் நகர மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த யாழ் மேயர் துரைப்பா இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய துரோகம் செய்த துரோகிகளாக இனம் காணப்பட்டார்கள். தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் குறிப்பாக அம்புதலிங்கத்தின் பேச்சுக்களை கேட்டு ஏமாந்த அரைகுறை படிப்புடன் இருந்த இளைஞர்கள் சிறுவர்கள் துரோகியலென்று என்று மனப்பாடமே செய்து கொண்டார்கள். குறிப்பாக அமிர்தலிங்கம் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக செய்யும் சிறுவன் பிரபாகரன். பிரபாகரனை துறைய பாவை கொலை செய்ய பயன்படுத்திக் கொண்டார் அமிர்தலிங்கம். அதுபோல் புளொட் இயக்கத்தை உருவாக்கியவர்கள் ஒருவரான சுந்தரம் அமிர்தலிங்கம் ஜெயவருதனா கூட்டில் உருவான மாவட்ட சபையை தொடர்ந்து எதிர்த்து புதிய பாதை பத்திரிகையில் எழுதி வந்ததனால் அமிர்தலிங்கத்தின் ஏற்பாட்டில் பிரபாகரன் மூலம் சித்ரா அச்சகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
முன்பு அரசாங்கத்தின் உதவியுடன் தமிழருக்கு நல்லது செய்தவர்களை துரோகியல் என்று அடையாளம் காட்டிய அமிர்தலிங்கம், தனக்கு பாராளுமன்ற பதவியும் எதிர்க்கட்சித் தலைவர, கிடைத்தவுடன் இலங்கை ஜனாதிபதியுடன் நட்பு பாராட்டி மாவட்ட சபையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட சபை மூலம் அபிவிருத்தி ஏற்படும் என்றார். இது துரோகம் இல்லையா? ஏன் அன்று பிரபாகரனுக்கு அமிர்தலிங்கம் மாவட்ட சபையை எடுத்தது துரோகம் என்று தெரியவில்லை.
அன்று அரசியல்வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை துரோகி என்று கூறி தங்கள் நம்பி அடியார்கள் போல் செயல்பட்ட இளைஞர்களை கொண்டு கொலை செய்தார்கள்.
இது படிப்படியாக வளர்ந்து ஆயுதம் தூக்கிய இளைஞர்கள் தலைவர்கள் ஆனார்கள். அவர்களும் தங்களுக்குப் போட்டியாக வளரக்கூடிய இளைஞர்களை மாற்று கருத்துள்ள இளைஞர்களை துரோகிகள் என்று பிரச்சாரம் செய்து கொலை செய்தார்கள். இதில் ஒரு அதிசயம் விடுதலைப்புலிகள் யாரை கொலை செய்திருந்தாலும் அவர் கட்டாயம் துரோகியாக தான் இருப்பார் என்று இன்று கூட எழுதுகிறார்கள்.இயக்கசண்டைகளில் அண்ணன் தம்பி வேறு வேறு இயக்கங்களில் இருந்தும் அண்ணன் தம்பியை அம்மாவின் முன்னாள் துரோகி என்று கூறி கொலை செய்த சம்பவங்களும் உண்டு.
இன்று பிரபாகரன் பற்றியோ இல்லை விடுதலைப் புலிகள் பற்றியோ நடந்த உண்மைகளைப் பற்றி எழுதினால் உடனடியாக அது என்னவென்று உண்மையாய் இல்லையா என்பது ஆராய்ந்து பார்க்காமல் அவன் துரோகி என்று எழுதி விடுவதோடு மிக மட்டமான தமிழால் எழுதுவார்கள். இவர்கள் எழுதும் தமிழை பார்த்தால் இவர்களா தமிழுக்கு போராடுகிறார்கள் என்று கவலையாக இருக்கிறது.
இன்று எங்கும் முதல் துரோகி பட்டம் டக்லஸ் தேவானந்தாவுக்கு கொடுக்கிறார்கள். ஆனாலும் மக்கள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த மக்கள் முட்டாளா?
வெளிநாடுகளில் இருந்தும் தக்கசை துரோகி என்று எழுதுபவர்கள் ஏன் இலங்கை போகும் போது ரகசியமாக தேவானந்தாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டு உதவிகளும் பெற்றுக் கொண்டு, வெளிநாடு திரும்பி தமிழினத் துரோகி என்று அவரைப் பற்றி எழுதுவார்கள். பல தமிழ் இளைஞர்கள் அமைச்சர் தேவானந்தாவின் பதவி மூலம் உதவிகள் வேலை வாய்ப்புகள் பெற்று இருக்கிறார்களா இல்லையா. இன்று அரசியல் செய்யும் பல முன்னாள் ஆயுத இயக்க தலைவர்கள் போல் தான் இவரும். ஆனால் மற்ற முன்னாள் ஆயுத இயக்க தலைவர்கள் ரகசியமாக இலங்கை அரசாங்கத்துடன் தங்களுக்கு தேவையான பணப்பெட்டிகளை பெற்றுக் கொண்டு தங்கள் குடும்பத்துக்கு பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திடம் ரகசியமாக உதவி பெறுகிறார்கள். ஆனால் வெளியில் இவர்கள் அரசாங்கத்துடன் தாங்கள் எதிரிகள் போல் காட்டிக்கொண்டு தாங்கள்தான் தமிழின காப்பாளர்கள் போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்துடன் பணமும் பதவிகளும் பெற்றுக் கொண்டு தேவானந்தாவை துரோகி என்று கூறுகிறார்கள். தேவானந்தா பகிரங்கமாக அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு அமைச்சர் பதவி மூலம் முடிந்தளவு மக்களுக்கு உதவி செய்கிறார். கடந்த காலங்களில் குமார சூரியார் அமைச்சர் பதவி மூலம் தமிழ் மக்களுக்கு தமிழ் இளைஞர்களுக்கும் உதவி செய்தார். அதை பொறுக்காத தமிழ் தேசிய தலைவர்கள் என்று கூறிக் கொள்வார்கள் குமாரசூரியரே துரோகி துரோகி என்று கூறினார்கள். அது போல் தான் இன்றும் இருக்கிறது.
இவர்களுக்கு எல்லாம் சிங்களவர்கள் முஸ்லிம்கள் எந்த பதவி பெற்று தங்கள் மக்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் ஒரு தமிழன் தனது பதவி மூலம் தமிழ் மக்களுக்கு உதவி செய்து பெயர் பெற்று விடக்கூடாது.
இந்தப் பதிவு போடுவதற்கே காரணம் கடந்த கால சரித்திரங்கள் தெரியாத இன்றைய இளைஞர்கள் யாரையும் எடுத்த உடனே துரோகிகள் என்று கூறுகிறார்கள் எழுதுகிறார்கள். பழைய சரித்திரங்கள் கொஞ்சம் சரி அவர்களுக்கு தெரிந்தால் நல்லது. விடுதலைப்புலிகள் இயக்கமும் மக்களுக்கு எந்த கொடுமை செய்திருந்தாலும் தங்களுக்கு சாதகமாக இருந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள் போல. இந்திய அமைதிப்படை காலத்தில் மண்டையன் குரூப் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எவ்வளவு சித்திரவதைகள் கொலைகள் செய்திருப்பார். பின்னாளில் அவரை ஏற்றுக் கொண்டார்கள். அது போல் டெலோ இயக்கமும் வவுனியாவில் செய்த கொலைகள் கொள்ளைகள் இவ்வளவு. அவரையும் ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் மட்டும் துரோகி இல்லையா. மற்றும் சிவராம்தராகி இவரை மாமனிதராக ஏற்றுக் கொண்டார்கள். காரணம் தங்களுக்கு சாதகமாக எழுதுகிறார் என்று. ஆனால் முன்பு வந்த செய்திகள் கருணா விடுதலை புலிகள் அமைப்பில் இருந்துபிரிய மூல காரணம் சிவராம் என்று தெரிய வருகிறது. சிவராம் புளொட் இயக்கத்தில் இருந்த போது தன்னிச்சையாக தனக்கு எதிரானவர்களை கொலைகள் செய்தார். அதுபோல் ரகசியமாக மட்டக்களப்பு கிராமங்களில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளார்.. மாமனிதர் பட்டம் கொடுக்கும்போது இது எல்லாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.
தயவுசெய்து யாரையும் துரோகி என்று கூற வேண்டாம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கொள்கை வேலை திட்டங்கள் இருக்கலாம். அப்படி பார்த்தால் நீங்கள் ஒருத்தரை துரோகி என்று கூறும் போது அவருக்கு நீங்களும் துரோகியாக தெரியலாம்.
தயவுசெய்து யாரும் இந்த பதிவை விரும்பினால் படியுங்கள். படித்துவிட்டு உங்கள் அதிமேதாவி தனத்தை கருத்து என்ற பெயரில் எழுத வேண்டாம் உங்கள் முகநூலில் உங்கள் கருத்துக்களை பதிவுகளாக போடுங்கள் நாலு பேர் பார்த்து பயன்பெறட்டும்.
No comments:
Post a Comment