பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 10 May 2026

இது ஒரு பழைய பதிவு. நன்றி வளன் பிச்சை வளன்

  வெற்றிசெல்வன்       Sunday, 10 May 2026
#ஈழவிடுதலைநாயகன்என
#கலைஞரைவரலாறுசொல்லும் 

#ஈழவிடுதலைக்குசமாதிகட்ட
#முதல்செங்கல்வைத்ததுஎம்ஜிஆர்எனவரலாறுதூற்றும் 

                  தமிழீழ விடுதலை வரலாற்றில் அறவழிப் போர் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் தனித்தனியே இயங்கி வந்தனர். காலம் அவர்களை ஒன்றிணைய வைத்தது. அவர்கள் இணைந்து ஈழத் தமிழர்கள் விடியலுக்கு விடுதலையே ஒரே தீர்வு என முடிவெடுத்தனர். அறவழியில் ஜனநாயக ரீதியாக ஈழ தமிழ் மக்கள் உணர்வு களை உலகறியச் செய்ய தமிழீழ ஐய்க்கிய விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் விடுதலையே தீர்வு என்ற முழக்கம் வைத்து இதை ஆதரித்து  வாக்க ளிக்க தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். மக்கள் இக் கோரி க்கையை ஏற்று வாக்களி த்தனர். ஈழத் தமிழ் பகுதிகளில் விடுதலை க் கூட்டணி வென்றது. ஈழத் தமிழ் மக்கள் விடுதலை தான் தீர்வு என்பதை உறுதி செய்தனர். உலகறியச் செய்தனர். அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவர் ஆனார்.
               1983  ல் டெல்லியில் நடை பெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள இலங்கை எதிர் கட்சி தலைவர், TULF ன் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது ஒரு நாட்டின் அதிபருக்கு இணையான வரவேற்பு அளிக்கப் பட்டது.
           யாசீர் அரபாத்தும் அழைக்கப் பட்டார். விடுதலை இயக்கம் நடத்தும் போதே பாலஸ்தீன நாடு இந்தியாவால் அங்கீகரிக்கப் பட்டது 
            அறவழிப் போராளிகள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை உலகறியச் செய்த னர். அவர்களின் தலைவரான அமிர்தலிங்கம் டெல்லி வரவ ழைக்கப் பட்டு கௌரவப் படுத் தப் பட்டாலும், தமிழீழத்தை இந்தியா அங்கரிக்க வில்லை. 
           1983 யூலைக் கலவரம். இனரீதியாக தமிழர்கள் கொல்லப் படுகிறார்கள். தமிழ் மக்கள் தனி நாடு கேட்பதை பௌத்த சிங்கள பேரின வாதிகள் எதிர்த்து, தமிழ் மக்களை இனப் படுகொலை செய்கின் றனர் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ற போது, அறவழிப் போராளிகள் #ஒருங்கிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைத்து வென்றது என்ற வரலாற்று நிகழ்வு எளிதாக்கியது. அதுவே உலக நாடுகள் இலங்கையில் இனப் படுகொலை நடைபெறு வதற்கான காரணத்தை அறிய வகை செய்தது  
            அறவழிப் போராளிகளின் இந்த #ஒருங்கிணைந்த சாதனை யால் ஈழத் தமிழ் மக்கள் உலகெங்கும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தனர். இதற்கு அன்று அற வழிப் போராளிகள் ஒன்று பட்டு நின்றதே முதன் மைக் காரணம். 
             ஈழவரலாற்றில் ஆயுதக் குழுக்கள் தலையெடுப்பு. இவர்களில் ஒருவரான புலிகள் இயக்கம் அறவழிப் போராளி களின் ஒன்றிணைந்த போராட்ட வடிவத்தை சிதைத்த னர் 1989க்குள் அனைத்து அறவழி, ஆயுதவழி போராளி தலைவர் கள் அழித்தொழிக்க ப் பட்டனர். ஆயுத குழு உறுப்பினர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். தாங்களே ஏகப் பிரதிநிதி என வலம் வந்த புலிகள் அறவழிப் போராளிகளின் மூலம் அடைந்த அரசியல் தஞ்சம் புகுந்த நாடு களில் புலிகளின் அலுவலகம் திறந்தனர் புலிகள் பரந்த அளவில் அங்கு நிதி திரட்டினர் இதற்கெல்லாம் அடிப்படை அற வழிப் போராளிகளின் ஒற்று மையின் பால் வந்ததே என்ப தை உணர மறுத்தனர். உலக நாடுகள் இவர்கள் விடுதலை வேண்டி போராடுவதற்கு நிதி திரட்டியதை தடுக்க வில்லை. இது அறவழிப் போராளிகள் ஈழ விடுதலைக்கு ஆற்றிய மாபெரும் சாதனை. இப பலனை புலிகள் அனுபவித்த னர். 
             புலிகள், உலகின் கவனத்தை ஈர்த்து #தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க எந்த உறுதியான முயற்சி யையும் முன்னெடுக்க வில்லை. 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகம் திறந்து இருந்தும் அந்த நாடுகளில் தங்கள் விடுதலைப் போராடத்தை அங்கீகரிக்க முயற்சிகள் எதுவும் செய்யாது, மாறாக அங்கீகாரம் பெறுவத ற்கு ப் பதிலாக, பணம் வசூல் செய்யும் மையங்களாக  அலுவலகங்களை கருதி செயல் பட்டனர் அங்கும் கொலைகள் மற்றும் கடத்தல் என தங்கள் கைவரிசை காட்டினர்.
       1989 - 2009 ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஈழத்தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என சொல்லிய புலிகள் உலகின் ஒரே ஒரு நாட்டின் அங்கீகாரம் பெற முடியாமல் போனது ஏன்?
             உலக நாடுகள் அங்கீகரி ப்பதற்கு மாறாக புலிகளை பயங் கரவாத இயக்கம் தனிநபர் கொலைகள் பிற நாட்டு அரசி யல் தலைவர்கள் கொலை செய்யும் இயக்கம் எனக் காரணம் காட்டி தடை செய்தது தானே நடந்தது.
              இது தான் புலிகள் விடுதலைப் போராட்ட த்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த் திய ராஜதந்திர செயல்பாடா?
              ஒரு நாட்டின் விடுதலை க்கு உலக நாடுகளின் அங்கீகாரம் முக்கியமல்லவா? அதற்கான வாய்ப்புகளை 150 நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு அலுவலகம் வைத்தது வரை அறப்போரா ளிகளின் பங்களிப்பு. அதைத் தாண்டி புலிகள் உலக அரங்கில் சாதித்தது என்ன?
           பயங்கரவாதிகள் பிற நாட்டு தலைவர்களை கொல் பவர்கள் கடத்தல் காரர்கள் என்று மட்டும் தானே பெயரெடு த்தார்கள் 
           அதை விடக் கொடுமை ராஜீவ் கொலை இக் கொலை யை ஒரு பழிவாங்கல் நிகழ்வு எனவும் அதை புனிதச் செயலாக கட்டமைத்து இன்ற ளவும் பேசுவது ஆகக் கொடுமை இது தானே இன்று புலிகளை பயங்கரவாதிகள் என அறிவிக்க காரணமானது.
                      1958 ல் இருந்து கலவரங்களில் உயிர் நீத்த பல்லாயிரம் தமிழ் மக்களின் குருதியில் உருவானதே #விடுதலை முழக்கம்
                இப்படி உயிர் தியாகம் செய்தவர்களை மதித்து ஒருங்கிணைந்து போராடி வெற்றி நோக்கி நடை போட்ட வர்கள் அறப் போராளிகள் அவர்களின் இட்ட அடித்தளம் மட்டும் இன்றளவும் மீதமாய் உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து ஈழ தமிழ் மக்கள் வாழ முடிகிறது
            ஒற்றுமை யின் வலிமை இன்றும் ஈழ விடுதலை வரலாற் றில் சாட்சி சொல்கிறதே.
            இந்த வலிமையை உணர்ந்த கலைஞர் அனைத்து போராளி குழுக்களையும் ஒன்றிணைக்க முற்பட்டார் ஒற்றுமையே மாபெரும் வலிமை என்று ஈழ விடுதலை அடைய இது அவசியம் என இதய சுத்தியோடு செயல் பட்டார் ஏனெனில் உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட மாமனிதனின் அர்த்த முள்ள செயல்பாடு.
             ஈழ விடுதலைக்கு சமாதி கட்டும் நோக்கோடு முதல் செங்கல் எடுத்து வைத்தது எம் ஜி ஆர் ஈழக் குழுக்கள் ஒன்றிணைய க் கூடாது எனும் நோக்கில் புலிகளிடம் பணத்தைக் காட்டி ஈழக் குழுக்கள் ஒன்றிணைய கூடாது என செயல்பட்டவர் எம் ஜி ஆர். புலிகள் எம் ஜி ஆர் காட்டிய பணத் தாசையில் மயங்கினர் இதன் மூலம் ஒன்று பட்ட தமிழக தமிழர் களின் ஆதரவை சிதைத்து தமிழக அரசியலில் "ஈழ விடுதலை" என்ற மாபெரும் பிழை யைச் செய்தவர்கள் புலிகள். புலிகள் தமிழக அரசியலில் கால் பதித்த நிகழ்வு 2009 இறுதி யுத்தம் மற்றும இன்றளவும் சிலர் தமிழக த்தில் அரசியல் பிழை நடத்த உதவுகி றதே தவிர ஈழ விடுதலைக்கு தமிழக தமிழர் களின் ஏகோ பித்த ஆதரவை என்றோ சிதைத்து விட்டது அது 2009 இறுதி யுத்தத்திலும் எதிரொ லித்தது சில அமைப்புகள் சார்ந்த எதிர்ப்பு என்ற அளவில் சுருங்கிப் போனதற்கான விதை விதைத்தது எம் ஜி ஆரும், புலிகளுமே காரணம்.
           ஈழ விடுதலைக்கு சமாதி கட்ட முதல் செங்கல் வைத்த எம் ஜி ஆரை தொழுது நின்ற செயலே தமிழக மக்களின் ஆதரவை கூறு போட்ட செயல்பாடு. 
           ஈழ விடுதலையை அழிக்க முதல் செங்கல் எடுத்து வைத்த எம் ஜி ஆரை வள்ளல் ஈழ விடுதலை ஆதரவாளர் எனப் போற்றுவதும்
           எம் ஜி ஆரின் நய வஞ்சக அப்பட்டமான அரசியல் சூழ்ச்சியை உணராமல் எம் ஜி ஆரை ஈழ காவல் தெய்வமாக சித்தரிக்கும் போக்கில் பல பெரியாரிய இயக்கங்கள் உள்ளது ம் ஆக கொடுமை அதனினும் கொடுமை புலிகளின் மாற்று இயக்கங்களை அழித்த நடவடிக்கைக்கு புனித சாயம் பூசுவது.
            பாசிச புலிகள் தங்கள் பாசிச செயல் பாட்டை நியாயப் படுத்த மனித நேய ஜனநாயகவாதி பெரியாரின் பெயரை சொல்லும் சில விசித்திர மனிதர்களை பரப்புரை செய்ய வைத்தும் இரு முரண்பட்ட கொள்கை காரர்கள் ஒன்றாக பாசிச செயலை நியாயப் படுத்திய, படுத்தும் விசித்திரமும் அரங்கேற்றுவது ம் ஆபத்தானது எதிர் கால சந்ததிக்கு தவறான வழிகாட் டுதல் வரலாற்று முரண் 
              ஈழ விடுதலை வரலாறு சொல்லும் உண்மை ஒன்று பட்ட அறவழிப் போராளிகளின் ஒற்றுமை, இன்றளவும் ஈழ இன அழிப்பை உலகிற்கு உணர்த்தி வருகிறது. அது பலரை புலம் பெயர்ந்து வாழ, இன்றளவும் காரணமாய் இருக்கிறது. 
               ஒற்றுமையை சிதைத்து அனைவரையும் அழித்து தன்னை மட்டும் அல்ல ஈழ மக்கள் விடுதலையையும் சேர்த்து அழிவுக்கு அழைத்து சென்ற புலிகளுக்கு, அழிவுக்கு அச்சாரமாய் ஈழ விடுதலைக்கு சமாதி கட்ட முதல் செங்கல் வைத்த எம் ஜி ஆரும்,  புலிகளின் ஏனைய இயக்கங்களின் அழித்தொழிப்பு நடவடிக்கையை கைதட்டி ஆதரித்த அனைவருமே ஈழ விடுதலை பின்னடைவிற்கு பொறுப்பானவர்களே 
            ஈழ விடுதலைக்கு ஆக்க பூர்வமாக வழி காட்டியது கலைஞரே.
             வரலாற்றின் பக்கங்கள் என்றும் கலைஞரை கொண்டாடும்.
     #வரலாற்றுநாயகன்கலைஞர்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. நன்றி வளன் பிச்சை வளன்

Previous
« Prev Post

No comments:

Post a Comment