• #தமிழ்நாட்டில் வாழும் இந்திய தேசிய தமிழர்களின் புலிகள் மீதான குயுக்தியான வாதங்கள் ( மீள்பதிவு 2023)
தமிழ்நாட்டில் வாழும் இந்திய தேசிய தமிழர்களும், 2009 இற்கு பிந்தைய திராவிட உபிகளும் புலிகள் மீது குயுக்தியான குற்றச்சாட்டை வைப்பார்கள்.
“இலங்கை இராணுவம் கொன்ற பொது மக்களை விட புலிகள் கொன்ற பொதுமக்கள் அதிகம்” என “குயுக்தியான” குற்றச்சாட்டை வைத்து, அதற்கு ஆதாரமாக புலிகள் நடத்திய சில தாக்குதல் தரவுகளை அள்ளி போடுவார்கள்.
வரலாற்றை ஆழமாக அணுகதெரியாத “பல கூமுட்டை தமிழர்களும்” உடனேயே “அட ஆமால்ல. ஆக இரண்டு தரப்பும் தப்பு செஞ்சுருக்கப்பா” என தலையை ஆட்டும்.
இந்த narrative ஐ உருவாக்குவதுதான் இந்திய தேசிய தமிழர்களின், திராவிட உபிகளின் திட்டமே.
• #இந்த குயுக்தியான குற்றச்சாட்டு எவ்வளவு தூரம் உண்மை?
இதை முழுமையான ஆய்விற்கே உட்படுத்திவிடுவோம்.
இந்த கேள்விக்கான பதிலை எண்கள் மூலமாகவே அறியலாம்.
இந்த எண்கள் சிக்கலான சர்வதேச சட்டங்கள், வரலாறு, சித்தாந்தங்கள் என்பவற்றை விட எளிமையாக போர் களத்தின் உண்மையை விளக்குகின்றன.
இந்த கணக்கை யாராலும் மறுக்கமுடியாது.
ஏனெனில் இந்த கணக்கில் உள்ள எண்ணிக்கையை பெறுவதற்கு பயன்படுத்திய ஆவணங்கள் வலுவானவை.
இந்த ஆவணங்களை தாண்டி, வேறு ஒரு ஆவணத்தை யாராலும் தரமுடியாது. ஏனெனில் அப்படி ஒரு ஆவணங்கள் எதிர்தரப்பிடம் இல்லை.
அத்துடன் நான் பயன்படுத்திய ஆவணங்களின் நம்பகத்தன்மையையும் யாராலும் கேள்விக்கு உட்படுத்தமுடியாது.
• #அந்த ஆவணங்களின் பட்டியலை தருகிறேன்.
• TCHR (Tamil Centre for Human Rights - TCHR ) அமைப்பின் அறிக்கை (1956-2004 தமிழ் மக்கள் படுகொலைகள்)
• NorthEast Secretariat on Human Rights (NESoHR) அமைப்பின் அறிக்கை.
தமிழின படுகொலைகள் பாகம்-1 (1956-2001)
தமிழின படுகொலைகள் பாகம்-2 (2002-2008)
• GENOCIDE CHRONICLES (1956-2009)
•TCHR அமைப்பு ஏப்ரல் 2009 இல் தயாரித்த DURBAN REVIEW CONFERENCE
• INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT ( ITJP ) இனால் வெளியிடப்பட்ட “DEATH TOLL IN SRILANKA 2009 WAR” அறிக்கை - (United Nations நிபுணர் குழுவில் இருந்த அதே Yasmin Sooka தான் இப்பொழுது ( ITJP ) அமைப்பில் Executive Director)
• International Crisis Group அமைப்பு, 27 Feb 2012 இல் வெளியிட்ட ‘Sri Lanka’s dead and missing: the need for an accounting’ என்ற அறிக்கை
• ஐக்கிய நாடுகள் சபை தன்னை தானே சுய விசாரணைக்கு உட்படுத்தி சமர்ப்பித்த அறிக்கையான “REPORT OF THE SECRETARY-GENERAL’S INTERNAL REVIEW PANEL ON UNITED NATIONS ACTION IN SRILANKA”.
• People’s Tribunal On Sri Lanka எனும் அமைப்பினது “Genocide against the Tamil People - MASSACRES, POGROMS, DESTRUCTION OF PROPERTY, SEXUAL VIOLENCE AND ASSASINATIONS OF CIVIL SOCIETY LEADERS” எனும் அறிக்கை
• United Nations நிபுணர்கள் குழுவால், 31-03-2011 இல் வெளியிடப்பட்ட “Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka” அறிக்கை
• இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் ஜூலை 2011 ஆம் ஆண்டு , “Humanitarian Operation Factual Analysis July 2006 - May 2009” எனும் விரிவான அறிக்கை
சரி. இனி ஆய்விற்கே வருகிறேன்.
இந்த ஆய்விற்கு சில எண்கள் தேவை.
• #எது அந்த எண்கள்?
இதற்கு 4 வகையான எண்கள் தேவைப்படுகின்றன.
1983-2009 வரையான 26 வருட போரில், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களையும், புலிகளால் கொல்லப்பட்டவர்களையும் எடுக்கவேண்டும்.
26 வருட போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை இரண்டு உப பிரிவுகளாக பிரிக்கவேண்டும்.
a. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை
b. இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை
அடுத்ததாக இந்த போரில் புலிகளினால் கொல்லப்பட்டவர்களை எடுக்கவேண்டும். அதையும் இரண்டு உப பிரிவுகளாக பிரிக்கவேண்டும்.
c. புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை
d. விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள, முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை
பிறகு இந்த எண்களை வைத்துக்கொண்டு, புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், சிங்கள, முஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்க்கவேண்டும்.
பிறகு இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம் என பார்க்கவேண்டும்.
இதில் கிடைக்கும் விடை ஏன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களையும், புலிகளினால் கொல்லப்பட்ட சிங்கள,முஸ்லீம் மக்களையும் ஒரே தராசில் வைத்து சமப்படுத்த முடியாது என்பதை உங்களுக்கு தெளிவாக காட்டும்.
• #இந்த 4 வகையான எண்களை பெறுவதற்காகத்தான், 4 பகுதிகளாக கட்டுரை எழுதியிருக்கிறேன்.
பகுதி-1
https://www.facebook.com/100088344520382/posts/238268439127972/?app=fbl
பகுதி-1 (A)
https://www.facebook.com/100088344520382/posts/238280289126787/?app=fbl
பகுதி- 2
https://www.facebook.com/100088344520382/posts/239931472295002/?app=fbl
பகுதி-3
https://www.facebook.com/100088344520382/posts/241130605508422/?app=fbl
பகுதி-4
https://www.facebook.com/100088344520382/posts/241644615457021/?app=fbl
ஒவ்வொரு வகையான எண்களையும் எப்படி கணித்தேன் என்பதை வரலாற்று தரவுகள், ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் விலாவரியாக விவரித்திருக்கிறேன்.
இதில் நான் தந்திருக்கும் ஆவணங்களை புறந்தள்ளிவிட்டு, வேறு ஒரு ஆவணங்களை உலகின் வேறு எவராலும் தரமுடியாது. ஏனெனில் அப்படி ஒரு ஆவணங்களே எதிர்தரப்பிடம் இல்லை.
அதன்படி பகுதி-1 இல், 1983-2009 வரையான 26 வருட போரில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 239385 என்பது முடிவு செய்யப்பட்டது.
பகுதி-2 இல், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலை புலிகளின் எண்ணிக்கை 27000 என முடிவு செய்யப்பட்டது.
பகுதி-3 இல், விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 44390 என முடிவு செய்யப்பட்டது.
பகுதி-4 இல் 26 வருட போரில், புலிகளால் கொல்லப்பட்ட மொத்த பொதுமக்களின் எண்ணிக்கை 11750. (இது இலங்கை அரசாங்கத்தால் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதை தரவுகளுடன் காட்டியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது)
• #இனி இந்த எண்களை வைத்து அது சொல்ல வரும் செய்தியை பார்ப்போம்.
1983-2009 வரையான 26 வருட போரில், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்கள் 239385, விடுதலை புலிகள் 27000.
ஆக இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 239385 +27000= 266385
அப்படியாயின் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?
(239385/266385 ) * 100 = 89.86%
இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், விடுதலை புலிகளின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?
(27000/266385) * 100 = 10.14%
1983-2009 வரையான 26 வருட போரில், விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை இராணுவம் 44390, சிங்கள,முஸ்லீம் பொதுமக்கள் 11750.
ஆக விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
44390+11750 = 56140
அப்படியாயின் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், இலங்கை இராணுவத்தின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?
(44390/56140) * 100 = 79%
அப்படியாயின் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், சிங்கள,முஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு எத்தனை சதவீதம்?
(11750/56140) * 100 = 21%
• #மேலே குறிப்பிடும் இந்த எண்கள் சொல்லும் செய்தி என்ன?
மீண்டும் கூர்ந்து கவனியுங்கள்.
1983-2009 வரையான 26 வருட போரில், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், தமிழ் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு 90%.
இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், விடுதலை புலிகளின் சதவீதம் 100 இற்கு வெறும் 10% மட்டுமே.
ஆனால் மறுவலமாக விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், சிங்கள,முஸ்லீம் பொதுமக்களின் சதவீதம் 100 இற்கு 21%.
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில், இலங்கை இராணுவத்தின் சதவீதம் 100 இற்கு 79%.
மேலேயிருக்கும் எண்கள் சொல்லும் செய்தியினை, எந்தவொரு மந்த புத்தியுள்ள மனிதனும் புரிந்து கொள்ளமுடியும்.
‘இலங்கையின் நிலப்பரப்பில் வாழும் சகலரும் இலங்கை குடிமகன்கள்’ என கூறும் இறையாண்மை அரசான ( Sovereign State) இலங்கை, போரில் நூற்றிற்கு 90% தமிழ் பொதுமக்களை (civilians) ஐ மட்டும் கொலை செய்திருக்கிறது.
ஆனால் உலக ஒழுங்கால் ‘பயங்கரவாதிகள்’ என அழைக்கப்பட்ட புலிகள் போரில், நூற்றிற்கு 79% போர்களத்தில் எதிரியாக இருந்த இலங்கை இராணுவத்தை மட்டும் கொன்றிருக்கிறார்கள்.
• #இந்த கேள்விக்கான பதில் என்ன?
ஒரே வகையில் சமப்படுத்த முடியாது.
புலிகள் இலங்கை இராணுவத்தை இலக்காக வைத்தே இந்த 26 வருட போரினையும் நடத்தியிருக்கிறார்கள் என்பதை எண்கள் தெளிவாக காட்டுகின்றன.
ஆனால் இதனையும் மீறி தவிர்க்க முடியாத அழுத்தங்களை இலங்கை இராணுவம் ஏற்படுத்தியதால் (ஜிகாத் படை, சிங்கள குடியேற்றம்,சிங்கள ஊர்காவல் படை) பொது மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் மறுபுறம் இலங்கை இராணுவம் போரினை நடத்திக்கொண்டே, தமிழ் மக்கள் மீது மறைமுகமாக இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது.
• #இது இனப்படுகொலையா?
நிச்சயம் இனப்படுகொலைதான்.
இதை எப்படி இனப்படுகொலை என நிறுவுவது என்பதற்கும் ஒரு கட்டுரை தனியாக எழுதியிருக்கிறேன்.
இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையா?
https://www.facebook.com/100088344520382/posts/413160218305459/?app=fbl
மேலே கூறிய சகலதையும் narrative இனை உருவாக்க முயலும் தமிழ்நாட்டின் இந்திய தேசிய தமிழர்களும், திராவிட உபிகளும் அறிவார்கள்.
அறிந்துகொண்டேதான் “இலங்கை இராணுவம் கொன்ற பொது மக்களை விட புலிகள் கொன்ற பொதுமக்கள் அதிகம்” என்ற narrative இனை உருவாக்க முயல்கிறார்கள்.
காரணம் அவர்களது அரசியல் சித்தாந்தத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
இதில் கேப்பை மாடுகள் யார்?
யார் எதை சொன்னாலும் பெப்பே பெப்பே என தலையை ஆட்டும், மெத்த படித்ததாக பீத்திக்கொள்ளும் கூமுட்டை தமிழினம்.
க.ஜெயகாந்த்
No comments:
Post a Comment