நான் போடும் பதிவுகளில் தவறுகள் இருந்தால் கருத்துக்கள் கூறி தவற்றைச் சுட்டிக் காட்டுங்கள். கடைசியா நான் போட்ட புளொட் சம்பந்தப்பட்ட பதிவு தவறு என்றால் என்ன தவறு என்று நேரடியாக சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக்கொள்கிறேன் தவறு இருந்தால் பதிவையே எடுத்து விடுகிறேன். அதை விட்டுவிட்டு உள்பட்டியில் வந்து கடந்த காலத்தைப் போல் மிரட்டுவது எச்சரிப்பது போன்ற செயல்கள் தேவையில்லை.
இச்செய்தியை கொடுத்த கழகத் தோழர்கள் உண்மையை அறிந்து கொள்ள உங்கள் கருத்துக்கள் பயன்படலாம். அதை விட்டுவிட்டு மிரட்டுவது எச்சரிப்பது இப்பதிவு உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. புளொட் இயக்கம் என்னை பற்றி தயாரித்து இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக தயாரித்துள்ள ஆவணம்.
இதை கந்தையா சிவனேசன் என்பவர் போட்டு மிரட்டுகிறார். நான் இயக்கத்தில் இருந்த போது போதை மருந்து வெளிநாடுகளுக்கு கடத்தியதாக. நான் எனது பதிவுகளில் போட்ட தமிழ்நாடு அரசாங்கத்துக்கு கடந்த காலத்தில் கொடுத்த விபரங்களை எனது பதிவில் இருந்தே எடுத்து ஆவணங்கள் தயாரிக்கிறார்கள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் புளொட் இயக்கம் நேரடியாக என் மூலம் போதை மருந்து கடத்தல் செய்வதாக, அதோடு லெபனானக் ஆட்களை பயிற்சிக்கு அனுப்பியதாகவும் கூறுகிறார். இதற்கு அப்போது உதவியவர்கள் லண்டன் கிருஷ்ணன் மற்றும் சித்தார்த்தன். அப்படி என்றால் அப்படி என்றால் டெல்லியில் வெளிநாட்டு தொடர்புகளை தொடர்பு கொள்ள சித்தார்த்தன் உதவியாக இருந்தார். இருவரும் கூடுதலாக டெல்லியில் இருந்தோம் அப்படி என்றால் என்னோடு சேர்ந்து சித்தார்த்தனும் போதை மருந்து கடத்தினார் என்று சிவனேசன் கூறுகிறார்
No comments:
Post a Comment