கருணாநிதி ஒன்றும் சுப்பர் பவர் இல்லை!
”இலங்கை அரசு வெளிநாட்டு பார்வையாளர்களை போர்ப் பகுதிக்குள் வருவதை தடை செய்ததன் மூலம், போர்ப்பகுதியை மேலும் தனிமை படுத்தியது.
2008 செப்டம்பரில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபயா எல்லா மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐநாவைச் சேர்ந்தவர்களையும் அவர்களது பொருட்களையும், வண்டிகளையும் எடுத்துக் கொண்டு போர்ப் பகுதியை விட்டு உடனே வெளியேறுமாறு அதிகார பூர்வ அறிக்கையை நேரடியாகவே வெளியிட்டார்.
மேலும் இந்த அறிக்கையானது ஊடகவியலாளர்கள், எதிர்கட்சிகள், மற்ற மனித உரிமை அமைப்புகள் என எல்லா தரப்பினரையும் போர் பகுதியான வன்னியை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
வன்னியை விட்டு சர்வதேச உதவி நிறுவனங்கள் வெளியான போது மக்கள் அழியப் போவது உறுதியானது. ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள் எந்த மறுப்பும் இல்லாமல் வெளியேறின.
இதுவரை அந்த நாடுகளை எதிர்க்காதது மட்டுமல்ல அந்த நாடுகளில் அகதிகளாக வந்து குடியுரிமை அல்லது வதிவிட உரிமை பெற்ற எவருமே இதுவரை அந்த நாடுகளுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. துரோகிகள் எனக் கூட ஒரு துண்டு பிரசுரம் கூட அடிக்கவில்லை. ஏன்?
திருப்பி அனுப்பி விடுவார்கள் எனும் அச்சம்தானே?
ஐரோப்பா பீகோன் புரொஜெக்ட் என தீர்வு அல்லது புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் எனும் ஒரு திட்டத்தை இலங்கை அரசோடு செய்து கொண்டது. அதில் புலிகள் சமாதானத்துக்கு ஒத்துவராமல் போனால் அழிக்க வேண்டும் என்பதே திட்டம். அதனடிப்படையில் இலங்கை அரசு போர் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இதனடிப்படையில் அனைத்து நாடுகளும் சேர்ந்து சமாதான பேச்சு வார்த்தைகளை நோர்வேயூடாக புலிகளுடன் முன்னெடுத்தது. அத்தனை முயற்சிகளையும் புலிகள் தூக்கி எறிந்தனர். அடைந்தால் மகாதேவி அல்லாவிட்டால் மரண தேவி என்பது போல தனி ஈழத்தை தவிர வேறெந்த தீர்வுக்கும் வரப் போவதில்லை என கர்வமாக நடந்து கொண்டார்கள்.
புலிகள் ஒருபோதும் தாங்கள் பலவீனமான சக்தி என நினைக்கவே இல்லை. அவர்களது ஆலோசகர்கள் யதார்த்தமான விடயங்களை பங்கருக்குள்ளேயே வாழ்ந்த புலிகளின் தலைவரான பிரபாகரனிடம் சொல்லவும் இல்லை. அப்படி சொன்னாலும் பிரபாகரனால் புரிந்து கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமே?
செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதிகளை அழிக்கும் முடிவுக்கு வந்திருந்தது. அதில் புலிகளும் அடக்கம். எனவே அமெரிக்க சார்ந்த நாடுகளும் புலிகளை அழிப்பதற்கு அதனடிப்படையில் ஶ்ரீலங்காவுக்கு உதவின.
அமெரிக்காவே புலிகளை அழிக்க உதவ முற்பட்ட தருணத்தில் , அமெரிக்கா கப்பல் அனுப்பும். மக்கள் இறந்தால் ஐநா தமது படைகளை இறக்கும் என அறிவு கெட்ட புலி ஆலோசகர்கள் கொடுத்த தவறான ஆலோசனைகள் மக்களை கூண்டோடு அழிக்கவே வழி செய்தது.
ஐநாவின் ஆலோசகர் நம்பியார், கொழும்பில் நின்ற போதுதான் இறுதி தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. ஐநாவும் , உலக நாடுகளும் அத்தனை கொடுமைகளையும் சட்லைட் மூலம் பார்த்துக் கொண்டிருந்த போதும் ஶ்ரீலங்கா அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஶ்ரீலங்காவை தமது அரசியலுக்காக பாதுகாக்கவே செய்ததன. செய்கின்றன.
சர்வதேசமே, ஶ்ரீலங்காவோடு இணைந்து மௌனமாக போரை நடத்திய வேளையில் , கருணாநிதி ஒன்றும் சுப்பர் பவர் கிடையாது போரை நிறுத்துவதற்கு!
புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழருக்கும், எந்தெந்த நாடுகள் ஈழ இன அழிப்பில் இறங்கின என நன்கு தெரியும். முடிந்தால் அந்தந்த நாடுகளில் வாழ்வோர் , அந்தந்த நாடுகளுக்கு எதிராக வீதிக்கு வர துணிவு இருக்கிறதா? ஒருத்தன் வர மாட்டான்.
காத்து கூட விட மாட்டார்கள் 😜
No comments:
Post a Comment