இன்று காலை விடிந்ததும் வாட்ஸ் அப்பில் வந்த செய்தி மிக மிக கவலை கொள்ள வைத்தது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஆரம்பகால தமிழ் இடதுசாரி சிந்தனை உள்ள போராளியும், பல சிறந்த போராளி தலைவர்களை உருவாக்கியவருமான ஆன்டன் பயஸ் மாஸ்டர் தென் ஆப்பிரிக்காவில் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவர் உருவாக்கிய சிறந்த போராளிகள் குறிப்பாகபுளொட் இயக்கத்தைச் சேர்ந்த மறைந்த தோழர் பார்த்த னும், விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஆண்டனி ஆசீர்சீலனும் குறிப்பிடத்தக்கர்கள்.
1978 கிழக்கில் நடந்த சில சம்பவங்களை அடுத்து இவர் காவல்துறையின் கண்காணிப்பில் வந்ததால், மூதூர் ஆசிரியராக இருந்தவர், உடனடியாக வெளிநாட்டுக்கு ஆசிரியராக போய்விட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் நடுவில் ஒரு சிறு நாடு இருந்தது.லெசோதோ(lesatho) என்று பெயர். அந்த நாட்டில் ஆசிரியராக வேலை செய்தார். அவருடன் கூட மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எனக்குA/L கெமிஸ்ட்ரி படிப்பித்த தம்பிநாயகம் ஆசிரியரும் தன்னோடு வேலை பார்த்ததாக பயஸ் மாஸ்டர் என்னிடம் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த நேரம், பாடசாலை நீண்ட லீவு வரும் போது, விடுமுறையைக் கழிக்க காரில் ஜிம்பாவே நாட்டுக்கு போவாராம். ஆப்பிரிக்க நாட்டை கடந்து சிம்பாவே நாட்டுக்கு போகும் எல்லையில் வைத்து சிம்பாவையில் தலைமை இடத்தை கொண்டு இயங்கும் தென்னாப்பிரிக்கா சுதந்திர இயக்கம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைமறைவு தலைவர்கள் ஆப்பிரிக்காவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இவர் மூலம் அறிந்து கொண்டு, இவருடன் நல்ல நட்பை பாராட்ட தொடங்கி உள்ளார்கள். இவர் சிம்பாவே போகும்போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அலுவலகத்திலேயே தங்கி, பல முக்கிய தென்னாப்பிரிக்க விடுதலை தலைவர்களையும்,வீரர்களையும் நண்பர்கள் ஆக்கிக் கொண்டார். அதோடு தென்னாப்பிரிக்க விடுதலைக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்யத் தொடங்கினார். சிம்பாவே நாட்டில் இருந்து தனது லெசோதோ நாட்டுக்கு போகும் போது, காரில் மறைத்து வைத்து ரகசிய துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு போய், போகும் வழியில் தலை மறைவு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களிடம் கொண்டு போகும் ஆவணங்களை கொடுத்து விடுவார். இப்படி பல காலம் ஆப்பிரிக்க விடுதலைக்கு ஆப்பிரிக்க விடுதலை இயக்கத்துக்கு உதவி செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்க போலீசார் பயஸ் மாஸ்டர் இலங்கை நாட்டு பாஸ்போர்ட் என்பதால், கடுமையான எந்தவித
சோதனைகளும் இல்லாமல் போய் வந்து கொண்டிருக்கிறார். இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்போது விசா தேவையில்லை. ஒருமுறை ஆப்பிரிக்க போலீசார் சோதனை செய்யும் போது, ரகசிய ஆவணங்கள் பிடிப்பட்டு, இவர் கைது செய்யப்பட்டு மிகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். முன்பற்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. இது நடந்தது 1986 ஆண்டு என நினைக்கிறேன். இந்த வேலையும் இழந்து சிம்பாவே நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு இருந்தார். அங்கு அவர் முழு நேர ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் போராளியாக வாழ்ந்திருக்கிறார்.
இவர் வேலையில் இருக்கும் போது சந்ததியர், ஜான் மாஸ்டர் அவர்களை சந்திக்க 1984 ஆண்டு ஆரம்பத்தில் சென்னை வந்தார். சென்னையில் புளொட் இயக்கதலைவர்களை சந்தித்து, பல நல்ல ஆலோசனைகளையும் கூறி, அவர்களுக்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பற்றியும் அதன் போராட்டம் பற்றியும் விளங்கப்படுத்தி இருக்கிறார்.
பின்பு மார்ச் மாதம் 1984 ஆண்டு டெல்லி வந்து என்னோடு, மதிப்புக்குரிய எல். கணேசன் எம்பி அவர்களின் டெல்லி எம்பி குவாட்டர்ஸில் தங்கி இருந்தார். இருவரும் டெல்லியில் பல அதிகாரிகளையும், வெளிநாட்டு தூதுவர்களையும் சந்தித்து உரையாடினோம். குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய அலுவலகத்தில் அதன் பிரதிநிதி மிஸ்டர் முல்லா அவர்கள் சந்தித்து மிக நீண்ட நேரம் பேசினோம். பயஸ் மாஸ்டரின் முயற்சியால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், சுவாபோ விடுதலை இயக்கம் மக்கள் மிக நெருக்கமாக தொடர்பில் இருந்தார்கள்.
எமது இயக்கத்தோடு திரும்ப தனது நாட்டுக்கு போய் விட்ட பின்பும், எமது இயக்கத்தோடு நல்ல தொடர்பில் இருந்தவர். சந்ததியாரை, செயல் அதிபர் உமா மகேஸ்வரன் கொலை செய்த பின்பு, பயஸ் மாஸ்டர் வெறுத்துப் போய்விட்டார். தனது புளொட் தொடர்புகளை எல்லாம் விட்டுவிட்டார். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னோடு நல்ல தொடர்பில் இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்காக ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் பிரதிநிதி முல்லா அவர்களிடம் 300க்கும் மேற்பட்ட இலங்கை கடவுச்சீட்டுகளை ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் உபயோகிப்பதற்காக ஏற்பாடு செய்து கொடுத்தேன். வேறு சில உதவிகளும் செய்தேன்.
1988 வரை நல்ல தொடர்பு இருந்தது. பின்பு பல வருடங்கள் தொடர்பு இருவருக்கும் இல்லை. பின்பு தொடர்பு கிடைத்து அனேகமாக மாதத்தில் பல நாட்கள் உலக அரசியலில் இலங்கை அரசியலில் இந்திய அரசியல் பற்றி விரிவாக பேசுவார். கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். இலங்கையில் போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து தினசரி தொலைபேசி வாயிலாகவும், செய்திக் குறிப்புகள் வாயிலாகும் எனக்கு அனுப்பி கொண்டிருந்தார். தனக்கு மூச்சு விட கஷ்டமாக இருப்பதாக கூறினாலும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஜூலை 25ஆம் தேதி வரை என்னோடு பேசினார் பேசும்போது உடம்பு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு பேசவில்லை இன்று தான் அவரின் மறைவு செய்தி கிடைத்தது.
இவரைப் போன்ற மிக தெளிவான சிந்தனை உள்ளவர்களை நமது விடுதலை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.
தென்னாப்பிரிக்கா அரசு இலங்கை விடுதலை இயக்கங்களோடு தொடர்பு கொள்வதற்கு இவர் தான் மூல காரணம்.
தென் ஆப்பிரிக்கா அரசில் நல்ல செல்வாக்கோடும் இருந்தாலும் இங்கு இந்திய ஆப்பிரிக்க இன மோதல்களால் வெறு த்துப் போய் ஒதுங்கி விட்டார். கடைசியில் லைக்கா கம்யூனிகேஷன் ஆப்பிரிக்கா நாட்டு அதிகாரியாக வேலை செய்தார் என நினைக்கிறேன். எனது ஒரு இந்திய நண்பர் வியாபார விஷயமாக தென் ஆப்பிரிக்கா போனபோது, ஏர்போர்ட்டில் வரவேற்று கூட்டிக்கொண்டு போய் சகல வசதிகளும் செய்து கொடுத்து, திரும்ப கொண்டு வந்து யா போட்டில் ஏற்றி விடும் வரை எல்லா இதுகளையும் எனக்காக செய்து கொடுத்ததே என்னால் மறக்க முடியாது. இந்திய நண்பரிடம் அப்போதுஎனது மகளின் திருமணத்திற்கு பல பரிசு பொருட்களையும் வாங்கி அனுப்பினார். நல்ல அரசியல் தெளிவுள்ள நல்ல நண்பரைஇழந்தது மிகப்பெரும் கவலையாய் உள்ளது.. தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது..
முன்புவர் டெல்லியில் சந்தித்த சந்திப்புகள் பற்றிய பதிவை திரும்பவும் போடுகிறேன்.
பயஸ் மாஸ்டர் (சுமதி) டெல்லி வருகை சந்திப்புகள் பற்றிய குறிப்பு
2) தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இணைந்து போராடியவர். திருகோணமலையில் இருபெரும் போராட்ட வீரர்களை உருவாக்கியவர் புளொட் சேர்ந்த பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருங்கிய நண்பனாக விளங்கிய சார்லஸ் ஆண்டனி. இவரின் பெயர் பயஸ் மாஸ்டர். சந்ததியார் இன் நண்பர். கழகப் பெயராக சுமதி என்று அழைக்கப்பட்டவர். டெல்லி வந்து நடந்த சந்திப்புகள் பற்றி எழுதிய குறிப்பு.
புதுடெல்லியில் 30/03/84 தொடக்கம் 11/04/84 வரை நடைபெற்ற சந்திப்புகள் பற்றிய அறிக்கை.
திருமதி சங்கர் (மீரா சங்கர் இந்திய வெளியுறவுத்துறை) 30/03/84
என்னுடன் நண்பர் வெற்றியும் சமூகமளித்திருந்தார். தொடக்கத்தில் இந்தியா டுடேயில் வெளியிடப்பட்ட கட்டுரை குறித்து, அரசின் அபிப்பிராயத்தை திருமதி சங்கர் தெரிவித்தார் குறிப்பாக பத்திரிகை நிருபர்களுக்கு அளிக்கப்பட்டபேட்டிகளினால் தகவல்கள் வெளியானவை குறித்தும் இந்தியாவை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கியது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட பேட்டி களிள் நாம் (PLOT) இந்தியாவை குறிக்கவில்லை நான் கருத்து தெரிவித்தேன் பேச்சுவார்த்தைகளை பொறுத்தமட்டில் நிலைமை குறித்து நான் வினவிய பொழுது ஒன்றும் திட்டவட்டமாக கூற முடியாது என தெரிவித்தார் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார் அத்துடன் ஒரு திட்டத்தில் கிழ் நாம் எல்லோரும் செயல்பட வேண்டும் என்றும் அவசரப்படக் கூடாது என்றும் கூறினார் ராணுவ நிலைமை, அரசுக்கு சாதகமாக இருப்பதால் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறினேன். ராணுவ நிலைமையை மாற்றி அமைப்பதன் மூலமே பேச்சுவார்த்தை என்னால் யோஜனா உண்டு என நான் கருத்து தெரிவித்தேன்.
(மீரா சங்கர் பல வருடங்களின் பின் அமெரிக்காவின் இந்திய தூதுவராக பணியாற்றியவர்)
.2). திரு சின்னசாமி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர
பொதுவான தமிழர் பிரச்சினை சரித்திர கண்ணோட்டம் குறித்தும் இன்றைய சூழ்நிலை குறித்தும் பேசினோம். கூடுதலாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். JNU வில் உள்ள தமிழ் மாணவர்களை சந்தித்து ஒழுங்கு செய்வதாக கூறினார்.
3) South Yemen embassy
தெற்கு யேமன் சோசலிஸ்ட் கட்சிக்கான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான பதிலை அனுப்பி வைப்பதாக கூறினார்.
4) CPI
தொடர்புகள்குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
அதற்கான அறிக்கை மத்திய குழுவுக்கு தரப்பட்டது.
5) world peace council
இங்கு முகுந்தனும் நானும் சமூகமளித்து இருந்தோம். இதுதொடர்பான அறிக்கையும் மத்திய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
6) திரு ராமதாஸ் IB
இந்தியா டுடே ரிப்போர்ட் பற்றியம் பேச்சுவார்த்தை குறித்தும் பேசினோம்.
No comments:
Post a Comment