ராஜபக்சே குடும்ப சிங்கள அரசுக்கு, துணை போன எங்கள் தீவிர தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்நாட்டின் தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்களும் தெரிந்தோ தெரியாமலோ (தெரியாமல் இருக்காது) இலங்கைதமிழினத்துக்கு எதிராக சிங்கள அரசு அடுத்து வரும் நடவடிக்கைகள் மறைப்பதற்கு வேறு ஒரு உப்பு சப்பில்லாத ஒரு விடயத்தை மிகப் பெரிதாகி, தமிழர், தமிழ் பிரதேசங்களுக்கு எதிராக சிங்கள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மூடி மறைக்கப்பட்டு விட்டன.
மலையகமக்களாலும் வடக்கு கிழக்கு பிரதேச தமிழ் மக்களாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது இருந்த முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரரை வைத்து தமிழருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மூடி மறைக்கப்பட்டு விட்டன. சொல்லப்போனால் முரளிதரனை இலங்கை தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உட்பட தமிழர் என்று பார்ப்பதைவிட, ஒரு சிங்கள கிரிக்கெட் வீரர் என்ற அளவில் தான் பார்த்தார்கள் என்பது தான் உண்மை.
. ஆனால் இலங்கை அரசு தனது கைக்கூலிகளை வைத்து தமிழருக்கு எதிரான 20 ஆவது சட்ட திருத்தத்தை மக்களிடமிருந்து மறைப்பதற்கு முரளிதரன் தமிழனா தமிழ் இன எதிரியா என்று விவாதத்தைக் கிளப்பி விட்டு, தனது வேலையை கச்சிதமாக முடித்துக் கொண்டது தமிழின ஆதரவாளர்கள் போல் காட்டிக் கொண்ட சிங்கள அரசின் கைக்கூலிகள்முரளிதரன் விஷயந்தான் இலங்கை தமிழருக்கு முக்கிய விஷயம் போல் காட்டிக் கொண்டது அல்லாமல், முரளிதரன் சார்ந்த இந்திய மலையகத் தமிழர்களையும் தரக்குறைவாக பேசி, மலையக ,வடக்குத் தமிழர்களையும் இப்ப எதிரி ஆக்கிவிட்டார்கள். ரொம்ப சிறப்பு. இனி வடக்கிலுள்ள பிரதேசங்களையும் மக்களையும் ஒவ்வொருத்தரா எதிரியாக்கி இலங்கையில் தமிழனே இல்லாது செய்து விடுங்கள்.
அடிப்படை இன்று இலங்கைதமிழருக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகளை உங்களால் புரிந்து கொள்ளாவிட்டாலும் சரி தமிழனை பிரிக்க பார்க்காதீர்கள்.இன்று பிரிந்து கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம். உண்மையான தமிழர்கள் இலங்கையில் பிரிந்து கிடக்க, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் ஈழ ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிங்கள அரசின் கைக்கூலிகள் தங்கள் வேலையை திறமையாக செய்கிறார்கள். அதோடு சிலர் தமிழக கைக்கூலிகளை எதிர்ப்பது போல் தமிழ்நாட்டு மக்களையும் சேர்த்து எதிரி போல் எதிர்க்கிறார்கள். இது இலங்கை தமிழர்களின் நிலைப்பாடு அல்ல.சிங்கள அரசின் ஏற்பாடு என்பதை தமிழ்நாட்டு நல்ல உள்ளம் கொண்ட தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment