தமிழீழ விடுதலையில் ஆர்வம் உள்ளவர்களும்முன்னாள் போராளிகளும் வெளிநாட்டில் தமிழீழ விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கும் வடக்கு கிழக்கு தமிழர் களுக்கும்
.... இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிமை மறுப்பு கல்வி மறுப்பு இரண்டாந்தரக் குடிமக்கள் போன்ற நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம். எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பு.பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சண்டை வந்தபோது சிங்களவருக்கு ஆதரவாக கப்பலில் இங்கிலாந்து போய் போராடிய தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் 1948 ஆண்டு இலங்கை சுதந்திரத்திற்கு பின்பு தமிழருக்கு ஏற்பட்ட நிலமைக்கு பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பு ஆனால் எந்த தமிழ் தலைவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராடவில்லை. என்ன காரணம்
இப்போதுகூட காலம் தாழ்ந்து விடவில்லை. இங்கிலாந்தில் வசிக்கும் போர்க்குணமிக்க உள்ள ஈழ தமிழர்கள் முகநூலில் தங்கள் வீரத்தை காட்டுவதைவிட இங்கிலாந்து அரசாங்கத்துக்கு எதிராக அங்கு போராடினால் எமது பிரச்சனை தெளிவாக உலகுக்கு தெரியவரும் ருத்ரகுமாரன் போன்ற மிகச் சிறந்தவழக்கறிஞர்களை கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குப் கூட போட முடியுமாயின் வழக்குக்கு ஆதாரமாக பிரிட்டிஷ்காரர்வர முன்பு இருந்த தமிழ் அரசர் ஆட்சி பற்றிய விபரங்கள் வெளியுலகத்துக்கு தெரிய வரும். எமது பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் போது அவர்கள் அகதி அந்தஸ்தை பறித்து தாய்நாட்டுக்கு கூட அனுப்பலாம். கவலைப்படக் கூடாது முக்கியம் தமிழீழம்
No comments:
Post a Comment