பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 5 February 2022

பகுதி 2

  வெற்றிசெல்வன்       Saturday, 5 February 2022
புளொட் இயக்கத்தின் பின் தள மாநாடு நடைபெற்ற 24/07/86 தொடக்கம் 1/08/86 வரையும் அதற்கு முன்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தமான நடந்த அனைத்து உண்மைகளையும் அறிக்கையாக தயாரித்த பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தொடர்ச்சி பகுதி 2 மாநாடு நடத்த இடம் முதலியவற்றுக்கு தோழர்கள் சுபாஷ் ,காலித் ஆகியோருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டன பேராளர்கள் தேர்வுக்கு முகாம்களில் அறிவித்து அந்தந்த முகாம்களில் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் சிலராவது கலந்துகொண்டு பிரதிநிதிகளை தெரிவு செய்தல் வேண்டும்.(அந்தந்த இடத்தில் உள்ளவர்களே தெரிவுகளை சுயமாக மேற்கொள்வார்கள்) அறிக்கைகளை தோழர் மாதவனுக்கு அனுப்பும் படியும் மாநாடு தொடர்பான கடிதங்கள், அறிக்கைகள் முதலியவற்றை அவரேஅனுப்பி வைப்பார் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் 2/4/86 செயல் அதிபரினால் 15/4/86 நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாகவும் மாநாடு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் பின் தள ஆலோசனைக் குழு மாநாடும், பேராளர் தேர்வும் என்ற தலைப்பில் அனைத்துப் பிரிப்பு பொறுப்பாளர்களுக்கும் ஒரு சுற்றுமடல் அனுப்பி வைக்கப்பட்டது.(இணைப்பு 2 இணைக்கப்பட்டுள்ளது) இந்த நிலைகள் இவ்வாறு இருக்க இக்காலப்பகுதியில்தோழர் ஆதவன், செந்தில், பாஊசி ஆகியோர் மத்திய சபையில் இருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக எம்மால் அறிய முடிந்தது மார்ச் 25 ,26 ,27 ஆம் திகதிய மத்திய சபைக் கூட்டத்தை தள மாநாட்டில் கலந்து கொண்டும் புறக்கணித்த காரணத்தால் மேற்படி தோழர்களின் மீது மத்திய சபை நடவடிக்கை எடுத்திருப்பதால் அவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது ஆகவே 25/3/86 இக்கு முன்னர் அவர்கள் கழகத்தின் மத்திய சபையிலுள்ள நிலையைக் காட்டி அவர்கள் 15/4/86 திகதிய மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என 5/4/86 பின்தள மாநாட்டு பொறுப்பாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. (இணைப்பு 3) மாநாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் தளத்திலிருந்து வருகை தர இருந்த தோழர்கள் பின் தளம் வராமையால்15/4/86 நடைபெறவிருந்த மாநாடு மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என12/4/86இல் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இணைப்பு 4 6/4/86 அன்று செயலதிபர் தள ஆலோசனை மாநாடு தொடர்பாக அறிக்கை என்ன அறிக்கையொன்றினை வெளிநாட்டு கிளைகளுக்குஅறிவித்தார். பின் தள மாநாட்டை ஒத்தி வைக்கும்படி தோழர் ஈஸ்வரன் ஆல் செய்தி வந்ததும், அழியாத கோலம், கோம்ஸ் ஆகியோர் பின் தளத்தில் உளவு படையினால் கொலை செய்யப்பட்டனர் என்றும் வதந்தி தளத்தில் பரப்பப்பட்டு நல்ல ஒத்துழைப்பு குழுவின் வருகை இதனால் தடைப்பட்டது இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாகவும் பின் தலை மாநாடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளையும் தளகுழுவிடம் விளங்க படுத்துவதற்காக, ஏற்பாட்டு குழுஉறுப்பினர்பொன்னுத்துரையும், பாதுகாப்பு பொறுப்பாளர் தோழர் பாபுவும் தளம் அனுப்ப பட்டனர், இக்காலத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மத்திய குழு உறுப்பினர்களான ஆதவன் , பாஊசி ஆகியோர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் ராஜனும் நிர்வாகத்துக்கு தெரியாமலேயே தளம் சென்றுள்ளனர் அவர்கள் அன்றையtelo தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களிடம் இருந்து உதவியும் அவரிடமிருந்து ஆயுதமும் பெற்றுக்கொண்டு அவர்கள் இது துணையுடனே தளம் சென்றதாகவும் அறியப்பட்டன. இந்நிலையில் 16/4/86 நாளிட்டு மாநாடு தொடர்பாக தளத்திலிருந்து சில கோரிக்கைகள் செயலதிபர் இருக்கு வைக்கப்பட்டன. இணைப்பு 6 அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டதானது பின் தளத்திலிருந்து ஆதவன், பாஉசிஆகியோர் தளம்வந்துள்ளனர். பொன்னுத்துரை பாபு ஆகியோரும் வந்துள்ளனர். கடந்தகாலங்களில் தனிநபர் ஆதிக்கம் பற்றி தாம் குறிப்பிட்டு வந்து இருந்தும் கூட பெரும்பான்மையோர் கலந்துகொள்ளாத மத்திய குழு கூடி பல முரணான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது ஆதவன் பவுசி செந்தில் ஆகியோர் மத்திய குழுவில் நீக்கப்பட்டது உட்பட. உளவுப்படை தொடர்ந்து இயங்க அனுமதித்தது இவற்றுக்கான பதில்களை செயலதிபர் அனுப்பியிருந்த்தார். 29/4/86 அன்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழு கூடி பின்வரும் விடயங்கள் பற்றி ஆராய்ந்தது 1. தளத்தில் இருந்து வந்த தொலைத்தொடர்பு செய்தி 2. மஹா நாட்டு தேதி 3. பேராளர்கள் தேர்வு முறை முடிவு பின்வருமாறு எடுக்கப்பட்டது மகாநாடு நடத்தும் இடம் பாதுகாப்பு பிரிவின் தெரிவின்அடிப்படையில் மாநாட்டுக்கு ஏற்ற கூடிய வகையில் பின்தள ஆலோசனை மாநாட்டு குழுவே மாநாடு நடத்த இடம் பற்றி தீர்மானிக்கும். தளத்தில் தெரிவுசெய்யப்பட்ட பின்தள மாநாட்டுக்கு வருபவர்கள் தொடர்பாக தளகுழுவில் தெரிவு செய்யப்பட்ட மேற்படி தோழர்கள் பின்தள மாநாடு தொடர்பாக ஆலோசனைகள் மட்டும் வழங்கலாம். பாதுகாப்பு பேராளர்கள் காண பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பற்றி மாநாட்டு ஏற்பாட்டுக் குழு முடிவு செய்யும். பாதுகாப்புக்குழு ,மாநாட்டுப் குழு ஒரு பாதுகாப்பு குழுவை தெரிவுசெய்யும் கழக கட்டுப்பாட்டுக் குழுவே தாபனத்தின்உயர் அங்கமாகும். கட்டுப்பாட்டு குழு வே அனைத்தையும் பொறுப்பில் வைத்துள்ளது. ஆகவே மாநாட்டின்போது படகுகள் தொலைத்தொடர்புகள் ஆகியவை பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்க தேவையில்லை என தோழர் முகுந்தன் விளக்கினார். முரன் பட்டவர்கள், பயம் காரணமாக வெளியேறியவர்கள் பற்றி மீளாய்வு குழுவே இவர்கள் பற்றி தீர்மானிக்கும் தொடரும் பகுதி 3
logoblog

Thanks for reading பகுதி 2

Previous
« Prev Post

No comments:

Post a Comment