புளொட் இயக்கத்தின் பின் தள மாநாடு நடைபெற்ற 24/07/86 தொடக்கம் 1/08/86 வரையும் அதற்கு முன்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தமான நடந்த அனைத்து உண்மைகளையும் பாஅறிக்கையாக தயாரித்த பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு
அறிக்கை தொடர்கிறது
இக்காலப்பகுதியில் தள செயல் குழு மாநாட்டு ஒத்துழைப்பு குழு தோழர்கள் பின் தளம் வந்தார்கள்.
பின்னர் தள செயல் குழுவும் தளத்தில் இருந்து வந்திருந்த கழக மத்திய சபை உறுப்பினர்கள், பின் தளத்தில் மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் சென்னையில் கூடிப் பேசினர். ஆதவன் செந்தில் பௌசி இடைநிறுத்தம்தொடர்பாக ஆராயப்பட்டு அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் மகாநாட்டில் அவர்களும் கலந்து சமூகமாக நடைபெற வேண்டும் என்ற காரணத்தால் அனுமதிக்கப்பட்டார்கள். இது கழகத்தின் மத்திய சபைக் கூட்டமாகவே 6.6.86 வரை நடைபெற்றது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. தளமாநாட்டின் முடிவுப்படி காலாவதியான மூன்று உறுப்பினர்கள் உட்பட்டு மகாநாடு தொடர்பாகவும் ஏற்பாட்டுக் குழு தொடர்பாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய செயற்குழு தொடர்பாக மத்திய செயற்குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் பெறப்பட வேண்டும் (மத்திய குழுவில் இருந்து)
கவனிக்க: தள குழு மொத்தம் தான் வந்தது. இதுவரை காலப்பகுதியில் செயல்பாடுகள் என்ன? எழுதப் படவேண்டும்.
ஆகவே தளசெயல்குழு, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு சந்தித்து பேச விரும்பியது. இந்த அடிப்படையில் 7. 6. 86இல் தள செயல்குழு மாநாட்டு ஏற்பாட்டுக் குழு சந்திப்பு சென்னையில் நடந்தது.
இணைப்பு 7
7.6.86 சந்திப்பின்போது தள குழு சந்திப்பில்;
தோழர்கள்: சுந்தரலிங்கம், ஈஸ்வரன் ,ரகு ,விசாகன் ,குமரன் ,கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன்போது மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் கூட்டபெற்று, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.30.3.86, 29.4.86 ஆகிய தினங்களில் நடைபெற்ற கூட்ட குறிப்புகள்வாசித்துக் காட்டப்பட்டது.
அண்மையில் புதிய செயற்குழு தீர்மானங்கள் என (தள குழுவும்,
தள மத்திய சபை, பின் தள மத்திய) தோழர் வாசு வால் பின்வரும் விடயங்கள் ஏற்பாட்டுக் குழுவின் கவனத்துக்கு தரப்பட்டது.
அ. மாநாடு நடைபெறும் இடம்
கழக பாதுகாப்பு குழுவும் ,தளத்தில் இருந்து வந்த ஒத்துழைப்பு குழுவும், இணைந்து பின்தள மாநாட்டுக்கான முழுப் பாதுகாப்பையும் மாநாடு நடைபெறும் இடம் ஆகியவற்றை பற்றி தீர்மானிக்கும்.
ஆ. மகாநாட்டு வெயிட் பாட்டு குழுவினரிடம் தளத்திலிருந்து வந்த ஒத்துழைப்பு குழுவினரும் இணைந்து மாநாடு தொடர்பான வேலைகளை கவனிப்பர். மொத்த ஏற்பாட்டுக் குழுவினர் ¼,(3பேர்)
ஒத்துழைப்பு குழுவில் இருந்து ஏற்பாட்டு குழுவினருடன் இணைக்க படுவர்..
தள மாநாடு தொடர்பாக தளத்திலிருந்து வந்த பின்தளமகாநாட்டு ஒத்துழைப்பு குழுவும், பின்தள மாநாடு தொடர்பாக இந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மட்டுமே முகாம்களில் தோழர்கள் மத்தியில் கூட்டம் வைத்து விளக்கம் கொடுக்கலாம் எனவும், தளசெயற்குழு தோழர்கள் சாதாரண முறையில் முகாம்களுக்கு சென்று தோழர்களுடன் உரையாடுவதன் மூலம் கூறப்பட்டது. அவர்களின் பெயர்களை தல செயற்குழு ஏற்பாட்டுக்குழு விக்கு அறிவிக்கும்.
இ. கழக பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட அனைத்து பொருட்கள் கருவிகள் ஏனையவை யாவும் பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டுக் உள்ளேயே இருக்கும்.
ஈ. கழகத்தில் முரண்பட்ட வர்கள் பிரிந்து சென்றோர், பயம் காரணமாக வெளியே நிற்போர் போன்றவர்கள்
மகாநாட்டு ஏற்பாட்டு குழுவிற்கு அவர்கள் அறிக்கைகள் சமர்ப்பிப்பின் அவை தொடர்பாகவும் அறிக்கையில் சமர்ப்பிப்பபோர் தொடர்பாகவும், ஆராய்ந்து அவர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டுமாயின் அதுபற்றி மாநாட்டு ஏற்பாட்டுக் குழு மத்திய சபைக்கு அறிக்கை வழி சிபார்சுசெய்யும். அவர்களது அறிக்கைகள் விண்ணப்பிப்பவர்கள் நிராகரிக்கப்பட்டால் அவை தொடர்பாக அறிக்கையொன்று மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
உ.
வெளிநாட்டு கிளைகள் கலந்து கொள்வது தொடர்பாக
மகாநாடு நடைபெறும் வேளையில் வெளிநாடு கிளைகளைசேர்ந்தவர்கள் இங்கு இருப்பின் பின் தளம் அவர்கள் பார்வையாளராக மாநாட்டில் கலந்து கொள்ளலாம் ஆனால் போட்டி வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. கருத்துக்களை தெரிவிக்கலாம்.
பின் தள மாநாட்டிற்கு பொறுப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட பின் வெளியோரியோர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதெனவும் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது என தோழர் வாசு கூறினார். இதை தளகுழு உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அத்துடன்தள செயல் குழுவால் மாநாடு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட ஒத்துழைப்பு குழுவின் பெயர்கள் தெரிவிக்கப்பட்டது.
குமரன்
செல்வராசா
ஜெயந்தி
முத்து
ஆனந்தன்
எல்லாளன்
சுதர்சன்
ஏற்பாட்டு குழுவுடன் இணைந்து செயலாற்ற பின்வரும் பெயர்கள் தள அரசியல் செயலர் ஈஸ்வரன் ஆல் தரப்பட்டன.
1. செல்வராசா
2. ஆனந்தன்
3. எல்லாளன்
ஆகவே மிள்அமைக்கப்பட்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பின்தள மாநாடு தொடர்பாக நடவடிக்கைகளையும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பேராளர்களின் தெளிவு முறை பற்றி சிக்கல்கள் இருந்தால் அவை பற்றியும் மேற்கொண்டு பின்தள மாநாடு தொடர்பான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைககளையும் தள செயல் குழு பின்தள மாநாடு ஏற்பாடு குழுவுடன் இணைக்கப்பட்டஒத்துழைப்பு குழு தோழர்களுக்கு ஊடாக பின்தளமாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிக்கு முன்வைப்பது எனவும் தெரிவித்து சந்திப்பு முடிவடைந்தது.
ஆகவே தற்போது அதாவது 7.6.86 முதல் புதிய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்
வாசுதேவன்
முகுந்தன்
சீசர்
திவாகரன்
மாதவன்
ராதா
சுபாஷ்
காலித்
பொன்னுத்துரை
ஆனந்தி
ஆனந்தன்
செல்வராசா
எல்லாளன் ஆகியோர்
மீள அமைக்கப்பட்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழு கூட்ட 13.6.86 அன்று நடைபெற்றது.11 ம் தேதி தோழர் காலித் வெளியேறிவிட்டார்.
அந்தகூட்டத்தில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன
அ. கடந்த கூட்டறிக்கை தொடர்பான விவாதம்
ஆ. தோழர்கள் வெளியேற்றம் பற்றி
இ. மகாநாட்டு அறிக்கைகள் நிகழ்ச்சி நிரல்கள்
பற்றியவை
ஈ. இடம், பாதுகாப்பு சம்பந்தமான ஒழுங்குகள்
உ. மாநாட்டு தேதி குறித்தல்
பகுதி-5 தொடரும்
No comments:
Post a Comment