பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 16 May 2023

கனடாவில் இருந்து குணா பாலன் என்பவர் நான் முன்னாள் இயக்கத் தலைவர்கள் பற்றி பதிவுகள் போட கருத்து சொல்ல தகுதியற்றவன் என்று கூறுகிறார்

  வெற்றிசெல்வன்       Tuesday, 16 May 2023

நண்பர் புதியவன் ராசையா அவர்கள் போட்ட தமிழீழ விடுதலைப் பேய் ஆட்டம் என்ற பதிவுக்கு நான் போட்ட கருத்துக்கு கனடாவைச் சேர்ந்த குணா பாலன் என்பவர் நான் முகநூலில் கருத்துக்கள் பதிவுகள் போட தகுதியற்றவன் என்று கூறியுள்ளார். முதலில் குணபாலன் 1990 முன்பு புளொட் இயக்கத்தில் என்ன பொறுப்பில் இருந்தார். எங்கு பயிற்சிகள் எடுத்தார் 

என்பதை தெரிவிக்க வேண்டும்.

மேலும் குணா பாலன் அயல் நாட்டு உளவுத்துறைடன் சேர்ந்து தலைவரை கொலை செய்ததாக கூறுகிறார். அயல் நாட்டின் பெயரையும் உளவுத்துறையின் பெயரையும் நேரடியாக கூறலாம் தானே. இவ்வளவு காலமும் நானும் பலரும் எங்கள் நேரடி அனுபவத்தில் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் தலைமையில் உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக, இப்பொழுது குணபாலன் கூறியது உண்மையானால் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் இருவரும்இந்திய உளவுப் படையின் உதவியோடு என்னையும் மற்ற தோழர்களையும் ஏமாற்றி உமா மகேஸ்வரன் துரோகி என்று எங்களை நம்ப வைத்து மரண தண்டனை கொடுக்க வைத்து கொலை செய்துள்ளார்கள் போல தெரிகிறது. நன்றி குணாபாலன் உங்களுக்குத் தெரிந்த உண்மையை கூறியபடியாள். இப்போதுதான் எங்களுக்கு உண்மை தெரிகிறது. அதனால் தான் இதுவரை புளொட் இயக்கம் உமா மகேஸ்வரன் கொலை பற்றி யார் செய்தது அதன் பின்னணி என்ன என்று இதுவரை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. நான் நடந்த உண்மைகளை எழுதும் போதும் கூட அவர்கள் நான் எழுதுவது தவறு என்று இயக்கம் சார்பாக எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை. இதைப் பார்த்துவிட்டு எனி விட்டாலும் அது பிரயோஜனப்படாது.

உமா மகேஸ்வரனுக்கு கொடுத்த மரண தண்டனை பற்றியும் உமா மகேஸ்வரன் செய்த தவறுகள் பற்றியும் மத்திய குழுவுக்கு பொதுக்குழுவுக்கு அறிவிப்பதாக கூறிய சித்தார்த்தம் மாணிக்கம் தாசனம் அது பற்றி வாயே திறக்காததால் அது அது பற்றி அன்று இயக்கத்தின் இந்திய பொறுப்பாளராக இருந்த நான் மத்திய குழுவுக்கு எழுதிய கடிதங்கள் பற்றி குணபாலனுக்கு தெரியுமா அந்த கடிதங்கள் ரகசியமாக கிழித்தெறியப்பட்டது சித்தார்த்தன் மாணிக்கம் தாசினால். உமா மகேஸ்வரன் மரணம் தண்டனை பற்றி யாரிடமும் பேசக்கூடாது நடந்த உண்மைகளை கூறினால் உனக்கும் மரண தண்டனை தானே என்று மாணிக்கம் தாசினால் மிரட்டப்பட்டது தெரியுமா அதன் பிறகும் நான் விடாப்பிடியாக கடிதங்கள் எழுதியதால் இந்தியாவில் வைத்து என்னைகொலை செய்ய முயன்று சில வருடங்கள் தலைமறைவாக இருந்தேன்.

அது சரி இயக்கத்தின் தோழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாணிக்கம் தாசனை யார் கொலை செய்தது. நூற்றுக்கணக்கான இயக்கத் தோழர்களை கொலை செய்த விடுதலைப்புலிகளுடன் ரகசியமாக கூட்டு வைத்து தானே மாணிக்கம் தாசனை புளொட் இயக்கம் கொலை செய்தது.

உமா மகேஸ்வரனை வைத்து எனக்கு அடையாளம் தேடவில்லை. எனக்கு அடையாளம் தமிழீழ மக்கள் விடுதலை கழகம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உமாமகேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. சுந்தரம் சந்ததியர் பரந்தன் ராஜன் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளால் ஒதுக்கப்பட்டு வட சென்னையின் தலைமறைவாக இருந்த உமா மகேஸ்வரனை சந்ததியரின் ஆலோசனையின் பெயரில் பறந்தன் ராஜன் சென்னை வந்து செலவுக்கு பணமும் கொடுத்து இலங்கை அழைத்துச் சென்றார். விடுதலை புலிகள் இயக்கத்தின் பிரபாகரனால் தலைவராக தெரிவு செய்யப்பட்ட உமா மகேஸ்வரன் அதே பாணியில் தமிழ்ல மக்கள் விடுதலைக் கழகத் தலைவராக ஆனார். இந்த செய்தி எல்லாம் உங்களுக்கு தெரியுமா எத்தனை பேருக்கு தெரியும்.

உங்களைப் போன்றவர்களால் தான் தலைவரை மட்டும் தூக்கிப்பிடித்து தனிப்பட்ட முறையில் உங்களை வளர்த்துக் கொள்ள முடிகிறது. பின் தள மாநாட்டின் போது அவருக்கு மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னவென்று தெரியுமா.

இவரை தலைவராக வளர்த்து விட்ட தமிழ்ல மக்கள் விடுதலைக் கழக அரசியல் செயலர் சந்ததியாரை கொடுமையாக சித்திரவதை செய்து கொலை செய்து எரித்துவிட்டு, பத்திரிகையாளர்களிடம் சந்ததியர் போதை பொருள் கடத்தும் ஒரு பெண்ணுடன் கூடாத உறவு வைத்திருந்தார் என்றும் தற்போது அவர் சிங்கப்பூர் அந்தப் பெண்ணுடன் போய்விட்டார் என்றும் கூறினார். இதுதான் உமா மகேஸ்வரன். தில்லி வந்து இந்திய அதிகாரிகளிடம் சந்ததியாரை கொலை செய்ய காரணம் வங்கம் தந்த பாடம் என்னும் மொழிபெயர்ப்பு புத்தகத்தை கழகத் தோழர்களிடம் விநியோகித்து இந்திய எதிர்ப்புணர்ச்சியை வளர்க்கிறார் அதனால் தான் அவரை கொலை செய்தோம் என்று கூறி இந்திய அதிகாரிகளுடன் மிகவும் மோசமாக திட்டு வாங்கியது உங்களுக்கு தெரியுமா நான் அப்போது பக்கத்தில் தான் இருந்தேன்.

ஒன்றாக இருந்த விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரன் உமா மகேஸ்வரன் மற்றும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த உடுவில் சிவனேசுவரன் குடும்பம் இவர்களுக்காக எத்தனை உயிரை பலி கொடுத்தன. அதில் சிவனேஸ்வரனை உமா மகேஸ்வரனின் நேரடி உத்தரவின் பேரில் ஒரு வாரம் கட்டி வைத்து உடம்பை கத்தியால் கிழித்து கிழித்து மிளகாய் தூள் உப்பு தூள் போட்டு சித்திரவதை செய்த பின்பு கொலை செய்தார்கள். ஏன் சிவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டார் தெரியுமா, இதுவரை பலருக்கு தெரிந்த கதை அதை நான் இதுவரை பகிரங்கமாக நேரடியாக எழுதவில்லை. இப்போது கூறுகிறேன்.

கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை எமது இயக்கத்துக்கு ஆதரவளித்த ஒரு குடும்பத்தின் கணவரிடம் கொடுத்து சென்னையில் விற்றுத்தர சொல்லி உள்ளார். அந்தக் கணவர் குறைந்த விலைக்கு விற்றதாக கணக்கு காட்டி ஏமாற்றிய படியால் அவரை விசாரிக்க சென்ற செயல் அதிபர் உமா மகேஸ்வரன்  அந்தக் கணவர் ஏமாற்றிய பணத்த திரும்ப வாங்கும் முயற்சியில் ஈடுபடாமல், அந்தக் கணவரை துரத்தி விட்டு அவரின் மனைவியை தன் வசப்படுத்தி தொடர்பு வைத்துக்கொண்டார். பெண்ணின் தம்பி இயக்கத்துக்கு பல உதவிகள் செய்தவர் பல பழைய தோழர்களுடன் நல்ல நட்பில் இருந்தவர். ஒரு நாள் சிவனே சரணம் என்கிற நிரஞ்சன் அந்த தோழரை பார்க்க அவரின் வீட்டுக்குப் போன போது அங்கு அந்த வீட்டில் செயல் அதிபர் உமா மகேஸ்வரன் அங்கிருந்த கோலத்தைப் பார்த்து காரி துப்பி விட்டு வந்துள்ளார்

திருவல்லிக்கேணியில் இருந்த எமது அலுவலகத்தில் வைத்து மாறன் கந்தசாமி நான் நிரஞ்சன் ஆகியோர் இருந்தபோது அங்கு வந்த உமா மகேஸ்வரனை பார்த்து சிவனேஸ்வரன் கோபப்பட்டு கடுமையான வார்த்தைகளால் ஏசினார். இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கந்தசாமி நான் மாறன் மூவரும் திகைத்து போனோம். கடைசியாக நிரஞ்சன் என்கிற சிவனேஸ்வரன் அவரைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் புலிகளில் இருந்த போது உங்களை இதே பொம்பளை விஷயமாகத்தான் துரத்தி விட்டார்கள். இங்கு வந்தும் திரும்பவும் அதையே தான் செய்கிறீர்கள் வெட்கமாக இல்லையா என்று கேட்டார். சிவனேஸ்வரன் சிறு வயதிலிருந்து பிரபாகரன் உமா மகேஸ்வரம் மற்றும் பல பல பழைய போராளியுடன் பழகி வருவதால் அவர் பயப்படவில்லை. பின்பு சிவனேஸ்வரனின் அக்கா கணவர் என நினைக்கிறேன் சென்னை வந்து சிவனேஸ்வரனை பற்றி விசாரிக்க உமா அவர் சிங்கப்பூர் போய்விட்டதாக கூறியுள்ளார். அதை உண்மை என நம்பின சிவனேஸ்வரனின் உறவினர் எமது இயக்க படகில் ஊர் திரும்பிய போது கடலில் வைத்து உமாவின் உத்தரவை அடுத்து கொலை செய்து கடலில் போடப் பட்டர். இந்தக் கதை எல்லாம் நாம் புதிதாக சொல்லவில்லை எமது பழைய பல உறுப்பினர்களுக்கு தெரிந்த கதை தான். அதனால் தான் நான் பகிரங்கமாக மாமேஸ்வரன் தொடர்பு வைத்த பெண்ணின் தம்பி பேரையும் அவர்கள் இருந்த சென்னை இடத்தையும் குறிப்பிடவில்லை.

இன்று எல்லோரும் போற்றி புகழும் காந்தியம் டேவிட் ஐயா அவர்களே அடிக்க கை தூக்கி விட்டு, பின்பு டேவிட் ஐயாவை பார்த்து உனக்கும் சவுக்கு காட்டில் இடம் இருக்கு என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தவர் தான்  புளொட் தலைவர்.

84 கடைசியில் உமா மகேஸ்வரன் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுல முதலியின் கைப்பிடிக்குள் சிக்கி நமது இயக்கத்தை நாசமாக்கியது மட்டுமல்லாமல் இந்திய அரசு இயக்கங்களுக்கு செய்த ஆயுதப் பயிற்சி பற்றிய பல விபரங்களை இலங்கை அரசுக்கு கொடுத்த கதை தெரியுமா. சென்னையில் இருந்த இலங்கை திணை தூதுவர் திஸ்ஸா ஜெயகோடி சென்னை தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருந்தார் அங்கு இரவு நேரத்தில் உமா மகேஸ்வரனும் சந்ததியாரால் இலங்கை உளவாளி என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்ட ஷெர்லி கந்தப்பாவும் அங்கு போய் தங்கி வருவதே வழமையாகக் கொண்டுள்ளனர். அங்கு தான் உமா மகேஸ்வரன் இலங்கை அதிகாரிகளால் பெண் விஷயத்தை வைத்து மடக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. இதன் பிறகு தான் பல கொலைகள் இயக்கத்தில் நடந்துள்ளன.

சிவனேஸ்வரன் , அவர் உறவினர் கொலை பற்றி லெபனானில் பயிற்சி முடித்து வந்த பரந்தன் ராஜன் தட்டி கேட்டதால் தான் அவர் இயக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார். பரந்தன் ராஜனையும் கொலை செய்ய சில முயற்சிகள் எடுத்துள்ளார் அவை சரி வரவில்லை. இது பல முன்னணி தோழர்களுக்கு எல்லாம் தெரிந்த விடயம் உங்களை மாதிரி உமா மகேஸ்வரனை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு சொல்வதுதான்.

மலையகத்தில் மக்கள் முன்னணி ஏன் கட்டினார் 89 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காமினி திசநாயக்காவுக்கு போட்டியாக வாக்குகளை பிரிப்பதற்கு இதற்கு காரணம் லலித் அதுல முதலி.

கொலை கொள்ளைகள் செய்ய ஒரு தனி படையே வைத்திருந்தார். இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதிரத் முதலி, மற்றும் போலீசாரின் உதவியோடு விடுதலைப்புலி உறுப்பினர்கள் முன்னாள் உறுப்பினர்கள் தேடி தேடி கொலை செய்து கொழும்பில் தெருக்களில் போட்டீர்களே அதை மறந்து விடலாமா. யாழ்ப்பாணம் போகும் பஸ்களில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து பொருட்களோடு பணத்தோடு வரும் ஆட்களை யாழ்ப்பாணம் பஸ்ஸில் பின் தொடர்ந்து புத்தளம் அனுராதபுரம் காடுகளில் வைத்து பஸ்ஸை மறித்து கொள்ளையடித்து அவர்கள் கெஞ்ச கெஞ்ச பல பேரை கொலை செய்து காட்டில் போட்டது தெரியுமா.

லலித் அதுல முதலி,உமா மகேஸ்வரன், மாலத்தீவு லுதுபி ஆகியோர் சிங்கள பெண்களை கூட்டிக்கொண்டு திரிந்து கூத்தடித்தது தெரியுமா. இந்த விஷயங்களை கூறியது அவர்களோடு கூட திரிந்த மறைந்த சாம் முருகேஷ்.

இப்படியான அதுலியின் மிக நெருங்கிய நண்பர் உமா மகேஸ்வரன் ஜேவிபி  தலைவர்களுடன் சந்தித்து ஒரு நாடு இரு தேசம் என்ற வாக்குறுதியை பெற்றுக் கொண்டாரா. அப்போது அவருடன் நீங்களும் கூட இருந்தீர்களா. கொழும்பில் இயக்கத்தின் சார்பில் சிங்கள அரசியல் கட்சிகள் தீவிர சிங்கள அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் இப்போது கனடாவில் தான் இருக்கிறார். அவர் கூறும் கதைகளை கேட்டால் எமது தலைவரைப் பற்றி வெட்கமாக இருக்கும். அந்த நண்பரோடு போய் தான் உமா மகேஸ்வரன் கல்கிசை ஹோட்டலில் வைத்து லண்டன் கிருஷ்ணனோடு அசிங்கமாக பண விஷயமாக சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் கொள்வதாக சபதம் போட்டு உள்ளார்கள். இந்த விஷயம் குணா பாலனுக்கு தெரியுமா.

நூற்றுக்கணக்கான தோழர்கள் செத்தும் மாலத்தீவில் பிடிப்பட்டும் இருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தோழர்களிடம் நீங்கள் எல்லாம் இயக்கத்தை விட்டு போகலாம் என்னால் மலையகத் தமிழரை வைத்திரு புதிய இயக்கம் கட்ட முடியும் என்று சவால் விட்ட நேரம் அந்தக் கூட்டத்தில் நீங்கள் இருந்தீர்களா. அந்தக் கூட்டத்தில் யாராவது உணர்ச்சி வசப்பட்டு பிரச்சனை பண்ணினாள் அவர்களை சுட்டுக் கொள்ள காரில் துப்பாக்கியோடு ராபினை வைத்திருந்த தான் தலைவர்.

இப்படித்தான் உமா மகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைகளை தெரியாமல் பொது வெளியில் எல்லாம் தெரிந்தது போல் அயல் நாட்டு உளவுத்துறை செய்தது முன்பு என்றால் CIA செய்தது என்று கூறியிருப்பார்கள்.

இது போல் தான் பத்மநாபாவின் கொலையும் கூட.. கோடிக்கணக்கான பணம் சென்னை அலுவலகத்தில் மறைக்கப்பட்டது தெரிந்து அதை விசாரிக்க  ரகசியமாக வந்த நேரம் உள்ளிருந்து விடுதலைப் புலிகளுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு பத்மநாபாவும் அவருடன் இருந்த பல தோழர்களும் கொலை செய்யப்பட்டார்கள். பத்மநாபா தோழர்களை காட்டி கொடுத்தவர்கள் இன்று இலங்கையில் உத்தம அரசியல்வாதிகளாகவும், கனடா போன்ற நாடுகளில் அரசியல் விற்பனர்கள் போலவும் இருக்கிறார்கள். புரிந்தவர்களுக்கு புரியும். ஈ பி ஆர் எல் தோழர்களே என்னிடம் பலமுறை இதைக் கூறியுள்ளார்கள்.

குணபாலனுக்கு தேவை என்றால் உமா மகேஸ்வரன்பற்றிய நான் எழுத மறந்த இல்லை எழுத விரும்பாத செய்திகளை போடுகிறேன். உமா மகேஸ்வரன் மரண தண்டனைக்கு தலைமை தாங்கிய சித்தார்த்தன் இப்போது புளொட் இயக்க தலைவர். மாணிக்கம் தாசன் தளபதியாக இருந்து சித்தார்த்தர் மூலம் கொலை செய்யப்பட்டார்.




இதுதான் புதியவன் ராசையா பதிவுக்கு நாம் போட்ட கருத்து


எந்த இயக்கத்துக்கு கொள்கை இருந்தது. இருந்தது பதவி வெறி பணம் தன்னை நம்பி வந்த இளைஞர்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதே.. வெட்கம் கெட்ட செயல் இன்றும் பலர் அவர்கள் புகழ் பாடி கொண்டிருக்கிறார்கள்


இது கனடா குணா பாலன் எனக்கு கூறிய கருத்து


Vetri Chelvan நீங்கள் விமர்சனம் செய்வதற்கு உகந்தவர்களா? அயல்நாட்டு புலனாய்வு துறையோடு சேர்ந்து ஒரு தலைவனை கொலை செய்து விட்டு , எதுவித செயல்பாடும் இல்லாது சமூக ஊடகளில் நேரத்தை விரையம் செய்பவர்கள். சமூகத்தின் மத்தியில் கருத்து கூறுவதற்கு உங்களுக்கு அருகதை கிடையாது.இன்றும் உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதற்கு அவரின் படம் தேவைப்படுகிறது. அவரினால் தான்  நீங்கள் எங்கள் சமூகத்தின் மத்தியில் அடையாளம் காணப்பட்டீர்கள். அவர் கொலை செய்யப்படும் வரையில் மக்களின் விடுதலைக்கான நகர்வினை மெற்கொண்டவாறே இருந்தார். மலையத்தில் மலையக மக்கள் முன்னணியில் உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்தார். றோகன விஜயவீரவுடன் அவரின் ஒளிவிடம் சென்று அவரின் முன்னணி தலைவர்களோடு 8 மணித்தியாலங்கள் பேச்சுக்கள் நிகழ்த்தி  ஒரு நாடு இரு தேசம் என்பதில் இணக்கத்தை ஏற்படுத்தினார். விரும்பம் இல்லாதவர்கள் செல்லுங்கள் நான் இயக்கத்தை மீண்டும் கட்டியமைப்பேன் என்றே கூறியிருந்தார். உங்களை பொறுத்தவரையில் அவரை கொலை செய்ததோடு விடுதலைக்கான உங்கள் பங்கு முடிந்துவிட்டது என்றே கருதியிருக்கின்றீர்கள். ஆத்திரம் கொள்ளாது நிதானமாக சித்தித்து பாருங்கள். எமது மக்களின் உரிமை போராட்டத்தில் அவரின் கொலையில் தொடர்புடையங்களின் தற்போதைய வகியாகம் என்ன? சிலர் விமர்சகர்களாக மட்டும் உள்ளனர். பலர் எதுவித பங்களிப்பு இல்லாது ஓய்வுற்றுள்ளனர்.




logoblog

Thanks for reading கனடாவில் இருந்து குணா பாலன் என்பவர் நான் முன்னாள் இயக்கத் தலைவர்கள் பற்றி பதிவுகள் போட கருத்து சொல்ல தகுதியற்றவன் என்று கூறுகிறார்

Previous
« Prev Post

No comments:

Post a Comment