அதுபோல் ஒரு நாட்டின் சிறந்த தலைவர் அந்த நாட்டின் மக்களையும் பல இன மத மொழி பேசும் மக்களையும் சமமாக நடத்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்வார். இதற்கு உலகில் எப்பவும் உதாரணமாக இருப்பவர் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைந்த லீக்வான்யூ.
இதுபோல் ஒரு இன விடுதலைக்கு மொழி விடுதலைக்கு ஒரு நாட்டின் விடுதலைக்கு போராடும் சக்திகளை இணைத்து போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர் எவ்வளவுக்கு சிறந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். இப்படியான போராட்டங்களுக்கு தலைமை தாங்குவர் சுயநலவாதியாக, பதவி பணம் வசதி வாய்ப்புகளுக்கு அடி பணியாதவராக இருக்க வேண்டும். தான் மட்டுமே அந்த விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும், அதே நேரம் வேறு சில இயக்கங்களும் வேறு வேறு தலைமைகளின் கீழ் செயல்பட்டால் அவர்களையும் அரவணைத்து செல்ல கூடியவர்தான் உண்மையான தலைவர். அதை விட்டு மற்ற விடுதலை இயக்கங்களை அழித்துவிட்டு தான் மட்டும் தான் தலைமை தாங்க வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் துரோகிகள் என்று மக்களிடம் அடையாளப்படுத்தி கொலைகள் செய்பவர் தலைவர் அல்ல.
எங்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 70 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் தமிழ் மாணவர்கள் உரிமைகள் வேண்டும் என்றும் தங்கள் கட்சியில் இல்லாமல் தமிழ் மக்களுக்கு நல்ல சேவைகள் செய்த தலைவர்களை துரோகிகளில் என்று அடையாளப்படுத்தி, தமிழரசு கட்சி பின்பு பெயர் மாறிய தமிழர் விடுதலை கூட்டணி தாங்கள் பதவி பெறஏமாற்றிய மக்கள் இளைஞர்களைக் கொண்டு தங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்க போட்டியாக இருந்த மாற்று இயக்கத்தவர்களை கொலை செய்தார்கள். பின்பு இவர்களை நம்பி உணர்ச்சி வசப்பட்ட தமிழ் மக்கள் போட்ட வாக்குகளால் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் தங்கள் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தவுடன் தங்கள் பேசிய உரிமைகளே எல்லாம் விட்டுவிட்டு இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றுக்கும் உதவாத மாவட்ட அபிவிருத்தி சபையை பெற்றுக்கொண்டு இதுதான் தமிழருக்கு நல்லது என்றார்கள். இவரது இவர்களது துரோகத்தை அறிந்த இளைஞர்கள் தமிழர் உரிமைகள் பெற ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த பல இயக்கங்களின் தலைவர்கள் தங்கள் இயக்கங்களில் இருந்த தங்களை விட சிறந்தவர்களை முதலில் கொலை செய்தார்கள். பின்பு சந்தேகப்பட்டு தங்கள் சொந்த இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களையே கொலை செய்தார்கள். இந்த இயக்கத் தலைவர்களை அவர்கள் மறைந்த பிறகும் போற்றி புகழ்ந்து பாட இன்றும் நடந்த உண்மைகளை ஆராய்ந்து பார்த்து கொள்ளாமல் தலைவர்களின் கேடுகெட்ட தலைமை பண்புகள பாராட்ட ஒரு கூட்டம். இயக்கங்கள் மறைந்த பின்பும் அதற்குப் பின்பு பிறந்த இளைஞர்கள் கூட ஒன்றுமே போராட்டம் பற்றி தெரியாமல் தாங்கள் விரும்பும் இயக்கத்துக்கு எதிரான மற்ற இயக்கங்களை துரோகிகள் என்று வசை பாடுகிறார்கள்.
இந்த தமிழீழ விடுதலை இயக்கங்களில் எந்த தலைவர் தலைவராக நடந்து கொண்டார். இதில் தோழர் பத்மநாபா மட்டும் மற்ற இயக்க தலைவர்களையோ மற்ற ஏக்கப் போராளிகளையோ கொலை செய்து தனது இயக்கத்தை வளர்க்கும் எண்ணம் அவரிடம் இல்லை. ஆனால் அவர் தலைமை தாங்கிய இயக்கத்தின் மற்ற தலைவர்கள் கொலை கொள்ளைகள் நடத்தியதை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய அமைதிப்படை காலத்தில் விடுதலைப் புலிகளை அழிக்கிறேன் என்ற போர்வையில் பல இளைஞர்களையும் பொது மக்களையும் விடுதலைப்புலி ஆதரவு பொதுமக்களையும் கடத்தி கொலை செய்ததை அதற்கு ஒரு பெயரும் உண்டு மண்டையன்குழு அதை பத்மநாபா கட்டுப்படுத்த முடியவில்லை இல்லை கண்டும் காணாமல் இருந்தாரா என்பது தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் பத்மநாபநல்ல தலைவர் என்ற நம்பகத்தன்மையை இழந்து விட்டார். தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் .
பிற்காலத்தில் யார் எதிர் என்று நினைத்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அவர்களிடம் விடுதலைப்புலிகளுட்பட எல்லா இயக்கங்களும் ரகசியமாக சரணடைந்து ஆயுதமும் பணமும் பெற்றுக் கொண்டு சொந்த தமிழ் இனத்தையே கொலை செய்து அழித்தது நம் கண் முன்னே நடந்த நிகழ்ச்சிகள். இதயும் இன்று ஆதரிக்கும் பலர் முட்டாள்தனமாக இது எல்லாம் ராஜதந்திரம் என்று கூறி எழுதி வருகிறார்கள். எதிரியிடம் சரணடைந்து ஆயுதம் பணம் பெற்று சொந்த இனத்தையே கொன்றது ராஜதந்திரம் என்பார்கள்.
இன்று வரை விடுதலை புலிகளை ஆதரித்து எழுதுபவர்கள் சாதாரண மக்களில் இருந்து படித்தவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் அறிவு ஜீவிகள் ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் படித்த அரசியல்வாதிகள் கூட விடுதலை புலிகளை 40 நாடுகள் , இந்தியா போதாக்குறைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி போன்றவர்கள் சேர்த்து அழித்து விட்டார்கள் இன்று புலம்பித் தள்ளுகிறார்கள்.
ஒரு நல்ல தலைவருக்கு அன்றைய நாட்டுச் சூழல் உலக நாட்டு சூழல்கள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். உலகச் சூழல் பற்றி புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் பலமுறை தலைவருக்கு அறிவுரை கூறி வந்திருக்கிறார். பாலசிங்கம் வெளிப்படையாகவே பல பத்திரிகையாளர்களிடம் இதைக் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார் கடைசியில் அவர் பகிரங்கமான கூறிய வார்த்தை தம்பியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
ஒரு ராணுவ தளபதி தன் படையை நம்பி இருப்பதில் தவறில்லை. ஆனால் ஒரு தலைவர் தன்னை நம்பி இருக்கும் மக்களையும் தன்னை நம்பி வந்த இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். தலைவர் இதுவரை யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவும் இல்லை சரணடையவும் இல்லை கொள்கையை உறுதியாக இருக்கிறார் என்று இன்று போராட்டத்தில் ஈடுபடாமல் அவர்களை ஆதரித்து எழுதும் உயிருடன் இருப்பவர்கள் கை கால் இழக்காதவர்கள் பெருமைப்பட்டு எழுதுகிறார்கள். உண்மை இதில் தன்னை நம்பி வந்த மக்களையும் இளைஞர்களையும் தன் குடும்பத்தையும் இழந்து தமிழீழ மக்களுக்கு என்ன கிடைத்தது. வெளிநாட்டில் வசதி வாய்ப்புகளோடு இந்த போராட்டத்தைச் சொல்லி அகதி வாழ்க்கை பின்பு அந்த நாட்டின் குடி மக்கள் ஆகியது போன்றவையே. பெருமளவு பணமும் அவர்களுக்கு சேர்க்கக் கூடியதாக இருக்கும் அதே நேரம் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் போற்றி புகழ்வதால் சமூகத்தில் தாங்களும் வீர உணர்ச்சிமிக்க தமிழு உணர்ச்சிமிக்க தமிழ் தேசியம் பேசுபவர்கள் என்று மற்றவர்கள் நம்புவார்கள் என நினைக்கிறார்கள்.
தயவுசெய்து நல்ல தலைவர் எப்படி இருக்க வேண்டும் அதுவும் ஒரு இன விடுதலையின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். கடந்த தலைமுறை நாங்கள் எல்லாம் தவறு செய்து விட்டோம். இந்த சமுதாயம் சரி நாங்கள் விட்ட தவறுகளை ராஜதந்திரம் என்றும் துரோகத்தை அழித்து விட்டோம் என்றும் கூறாமல் உண்மையில் நடந்த சம்பவங்களை அலசி ஆராய்ந்து கடந்த கால தலைவர்களும் இயக்கங்களும் விட்ட எண்ணிப் பாருங்கள். இந்தப் பதிவு யாரையும் குற்றம் குறை சொல்லவில்லை. ஆனால் தமிழில் உள்ள பழமொழி சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல் கடந்த காலத்தில் நாங்கள் நடந்து கொண்டோம்.
இது விட்ட குறை தொட்ட குறை போல் இவ்வளவு அனுபவங்களுக்கும் பின்னும் இன்றி இருக்கும் எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள் கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் தாங்கள் ஒரு மக்களுக்கு பிரதிநிதி என்ற அறிவு கூட இல்லாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் இவர்களை பாராட்ட இவர்களின் செய்கைகளை புகழ்ந்து கொண்டு ஒரு கூட்டம் பின்னால் அலைகிறது.
அவர்களுக்கு இன்றும் பதவியும் பணமும் தான் முக்கியம். இதே மாதிரி பல பதிவுகள் போட்டாலும் உன்ன என்ன பெரிய ஆளா என்று என்னைத் தான் திட்டுகிறார்கள்.
1987 தொடக்கம் 2010 வரை காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கல்யாணங்கள் கோயில்கள் வெளிநாடுகளில் கல்யாணங்களுக்கு பட்டுப் புடவைகள் வாங்க வரும் ஈழநாட்டு மக்கள்
விடுதலைப் புலிகள் பற்றியும் அங்கு நடக்கும் தமிழில் அரசு பற்றியும் இங்கு தமிழ் நாட்டில் இந்தியாவில் வந்து கூறிய.கதைகளை எழுதுகிறேன்
இனிமேல் நமது இலங்கை தமிழ் இன மக்களுக்கு ஒரு நல்ல தலைவரை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது.
No comments:
Post a Comment