பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 22 May 2023

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்

  வெற்றிசெல்வன்       Monday, 22 May 2023

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 14 வருடங்களாக நடந்து வரும் இது கொஞ்சம் கொஞ்சமாக பலரின் விளம்பரத்துக்காக வியாபாரத்துக்காக இந்த தினங்கள் இப்பொழுது கொண்டாடப்படுகின்றன. மன்னிக்கவும் இந்த நாளை  இப்போது துக்க நிகழ்ச்சியாக கவலை தரும் நிகழ்ச்சியாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடத்துவதே விட கொண்டாட்டமாக தான் இப்போதுபார்க்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் அடைப்பட்டு கை, கால் இழந்து உயிர் தப்பிய மக்களும் கடைசி நேரத்தில் சண்டையில் ஈடுபட்டு உயிர்த்தப்பிய கை கால் இழந்த போராளிகளும் என்றொரு மாற்றமும் இல்லாமல் எதிர்பார்த்தும் எந்த உதவிகளும் கிடைக்காமல், ஆனால் இவர்களை காட்டி வெளிநாட்டில் கடந்த 14 வருடங்களாக பலர் பணம் சேர்த்து மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக இலங்கை தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த தமிழருக்கு  எதிராக போர் செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலோ பல குடும்பங்களுக்கு வீடு கட்டுவதில் இருந்து அன்றாட உதவிகள் பல செய்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதே நேரம் வாழ்க்கை வசதியில் வசதி உடன் எந்த வித குடும்ப கஷ்டங்களும் இல்லாமல் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இருந்து தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருப்பவர்கள், ராணுவத்தின் உதவியை பெற்றுக் கொள்ளும் முள்ளிவாய்க்காலில் கடைசி வரை இருந்த மக்களை மிகவும் கேவலமாக எழுதுவதோடு துரோகிகள் என்றும் முகநூல்களில் எழுதி வருவதை பார்த்திருக்கிறேன்.

கடைசி வரை போராட்டத்தில் இருந்து உயிர்த்தப்பிய இந்த கை கால் அந்த பொதுமக்களும் போராளிகளும் உயிர் வாழக்கூடாதா. இவர்களின் வறுமையை காட்டி வெளிநாடுகளில் வாழும் பணம் சம்பாதிக்கும் தமிழர்கள் மட்டும் தாங்கள் தான் உண்மையான தேசியவாதிகள் என்று உலகத்துக்கு காட்டிக் கொள்வார்கள்.

வெளிநாடுகளில் இருந்து இந்திய அரசையும் திமுக கட்சியையும் தமிழ்நாட்டின் மக்களையும் 2009இல் இன அழிவுக்கு துணை போனவர்கள் என்று திட்டி தீர்க்கும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கள் வியாபாரத்தை மட்டும் பெருக்கிக் கொள்வார்கள். இலங்கைத் தமிழர்கள் சிலர் சினிமாவில் 100 கோடி 150 கோடி என்று முதலீடு செய்கிறார்கள். அதைவிட துணிக்கடைகளுக்கு கோயில்களுக்கு புத்தகக் கண்காட்சிகளுக்கு இங்கிருக்கும்  அரசியல்வாதிகளை சந்திப்பதற்கு சினிமா உலக பிரமுகர்களை சந்தித்து போட்டோக்கள் செல்பிக்கள் எடுப்பதற்கு லட்சக்கணக்கான பணத்தை செலவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் கூட இப்படி செலவழிப்பதில்லை. தங்கள் தங்கள் தேவைக்காக மட்டும் இலங்கை தமிழ் தேசியம் இலங்கை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு பற்றி பேசும் இவர்கள், இலங்கைக்கு உல்லாச பயணம் போகும்போது சிங்கள தலைவர்களை சந்தித்து படம் எடுப்பதையும் சிங்கள பகுதிகளில் உள்ள இடங்களே சுற்றிப் பார்ப்பதிலும் காட்டும் ஆர்வத்தை தமிழ் பகுதியில் போரால் சீரழிந்த இடங்களையும் மறுமையில் வாடும் மக்களையும் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் வெளிநாட்டுக்கு வந்தவுடன் இவர்களுக்கு தனித் தமிழ் ஈழம்ஆர்வம் மீண்டும் வந்துவிடும். மேலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி கூட்டம் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் மேல் இன்றும் அதே போல் அன்பாக இருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழ் மக்களின் அதாவது அங்கு வாழும் மீதி இருக்கும் தமிழ் மக்களின் மனநிலை அறியாமல் பேசி வருகிறார்கள். தமிழீழம் கட்டாயம் கிடைக்கும். வெளிநாடுகளில் இருக்கும் உலகத் தமிழர்களிடம் தமிழ் தனி தமிழீழ நாட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை சிறையில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள். ஆனால் தமிழ்நாட்டில் சிறையில் இருக்கும் அப்பாவி தமிழர்களை பற்றி இவர்கள் பேச மாட்டார்கள் சாதி சண்டை பற்றி பேச மாட்டார்கள். இவர்கள் தமிழீழம் பற்றி பேசுவதெல்லாம் வெளிநாடுகளில் பண வசதியோடு இருக்கும் தமிழர்களை பற்றி மட்டும் தான். மற்றபடி இலங்கையில் இருக்கும் மலையகத் தமிழர்கள் கிழக்குத் தமிழர்கள் வடக்குத் தமிழர்கள் வன்னி தமிழர்கள் பற்றி அங்கு நடக்கும் சாதி சண்டைகள் சமயசண்டைகள் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் இருக்கும் வரை கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள் புனிதவர் புலிகள் என்ன தவறு செய்தாலும் சோதனை சண்டைகள் கொலைகள் எல்லாவற்றையும் ஒரே வரியில் துரோகிகளை அழிக்கிறார்கள் என்று கூறி கொள்வார்கள். அன்று தமிழ்நாட்டு தலைமைகள் விடுதலைப் புலிகளுக்கு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி சொந்த இன தமிழ் மக்களே கொலை செய்யும் நிகழ்வுகளை கண்டித்து இருந்தால் அன்று முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்திருக்காது.

கடைசி நேரத்தில் விடுதலை புலிகளுக்கு இந்தியாவில் நடந்த ரகசிய பேச்சு வார்த்தையை தடுத்து சண்டையை தொடரும் படி கூறிய அதாவது ஜெயலலிதா வருகிறார் டெல்லியில் பிஜேபி வருகிறது இனி நாங்கள் சொன்னதைத்தான் நடக்கும் என்று விடுதலை புலிகளுக்கு அழிவுக்கு காரணமானவர்கள் எல்லாம் என்று தாங்களும் இந்த அழிவுக்கு ஒரு காரணம் என்று தெரியாமலே அஞ்சலி செலுத்துகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தவுடன் கலைஞரையும் திமுக கட்சியையும் காங்கிரஸ் அரசையும் மிக மிக மோசமாக திட்டி தீர்த்த தலைவர்கள் எல்லாம் இன்று அவர்கள் மூலம் தான் பதவி பெற்றுள்ளார்கள். இன்று யாரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு திமுக காங்கிரஸ்தான் காரணம் என்று தமிழ்நாட்டில் பகிரங்கமாக கூற மாட்டார்கள். தங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தான் அவர்கள் கூறுவார்கள் போல.

தயவு செய்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வெளிநாடுகளில் வசதி வாய்ப்போடு அந்தந்த நாட்டு குடியுரிமை பெற்று வசதியாக வாழ்ந்து கொண்டு வாயிலவில் மட்டும் தமிழ் ஈழம் பற்றி பேசும் இலங்கை தமிழர்கள் ஒரு காலமும் இலங்கையில் போய் வாழப்போவதில்லை. என்பதே தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் என் நம்பி தமிழீழம் என்று இனியும் மேடைப்பேச்சுகள் வேண்டாம். முதலில் இலங்கையில் இன்றைக்கும் தமிழ் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்று அடிப்படை பிரச்சனைகள் என்ன விளங்கிக் கொள்ள முயற்சி பண்ணுங்கள். 1980 ஆம் ஆண்டு உணர்ச்சி வசப்பட்ட போராடிய இளைஞர்கள் இன்று இல்லை. 2024 இன்று இருக்கும் இளைஞர்கள் போரின் கொடுமைகள் பற்றி அறிந்தவர்கள் குடும்ப வறுமையை பார்த்தவர்கள் அவர்கள் இனி ஆயுதம் ஏந்தி போராடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கும் தமிழ் சுயநலம் மிக்க பதவிக்கும் பணத்துக்கு ஆசைப்பட்ட தலைவர்கள் இந்த தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். தமிழர்கள் தலைவர்கள் இந்தியாவை வரும்போது தாங்கள் சந்திக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் தங்களை இன்னும் தமிழர் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராகவும் போராடி வருவதாகவும் விரலுக்கு கதை சொல்ல தமிழ்நாட்டுத் தலைவர்களும் நம்பி விடுகிறார்கள். ஆனா இலங்கையில் இந்த தமிழ் தலைவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது சிங்கள போலீசார் மட்டுமே.

இனியும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வு நலம் பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கும் தமிழ்நாட்டு தலைவர்களும் நல்ல உள்ளங்களும் இன்று இலங்கையில் உள்ள நிலைமைகளை பற்றி ஆராய்ந்து பார்த்து பொது வழியில் கருத்துக்களை சொல்லுங்கள்.

logoblog

Thanks for reading முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment