பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 15 November 2023

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் விசித்திரமான மனநிலை

  வெற்றிசெல்வன்       Wednesday, 15 November 2023

இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்பு இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர் பயத்தினாலும் அதிகமானோர் பொருளாதார கஷ்டங்களினாலும் வெளிநாடுகளுக்கு போய் அந்தந்த நாடுகளில் அகதி வாழ்க்கை வாழ உரிமை கூறும்போது தங்களுக்கு இலங்கையில் இலங்கை அரசாங்கத்தினாலும் விடுதலை இயக்கங்களாலும் பெரும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அகதி உரிமையும் பின்பு சில வருடங்களின் பின் அந்த நாட்டு குடியுரிமையும் பெற்றுக் கொண்டு கிட்டத்தட்ட அந்த ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்க கனடா நாடுகளின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்ப இவர்களும் வாழ தொடங்கினார்கள்.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்பு வெளிநாடு சென்றவர்கள் இந்திய அமைதிப்படையை காரணம் காட்டி சென்றார்கள். 19 90 ஆம் ஆண்டுக்குப் பின்பு 2009 வரை வெளிநாட்டுக்கு போனவர்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் அகதி அந்தஸ்து கேப்பதாக கூறி அகதி வாழ்க்கையும், அந்தந்த நாட்டு குடியுரிமையும் பெற்றார்கள். இப்படி வெளிநாட்டுக்கு போனவர்கள் பெரும்பான்மையோர் தங்கள் இஷ்டப்படி அந்த காலத்துக்கு ஏற்றவாறு பொய்யான காரணங்களை கூறி அந்தந்த நாட்டு உரிமைகளை பெற்றார்கள்.

இவர்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறி வெளிநாட்டுக்கு போன காலத்தில் இலங்கையில் தமிழர் பகுதிகளிலும் சிங்களப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான தமிழர்கள் எல்லா போராட்டங்களிலும் ஈடு கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். அதோடு பெருந்தொகையான தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராகவும், அதேநேரம் பல தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் சிங்கள அரசோடு சேர்ந்து போராடினார்கள்.


2009க்கு  முன்பு பல வருடங்களாக ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க நாடுகளிலும் அகதியாக இடம் பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளால் தங்களுக்கு ஆபத்து என்று கூறியவர்கள் கூட பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ பெருமளவு பண உதவிகள் செய்தார்கள். உண்மையில் அவர்கள் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று அங்கு இருக்கும் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் யாரும் உதவி செய்யவில்லை. விடுதலைப்புலிகள் நடத்தும் ஆயுதம் போராட்டம் வெற்றி பெறப் போவதில்லை என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் போராட்டம் தொடர்ந்து நடந்தால் தாங்கள் இருக்கும் நாடுகளில் தொடர்ந்து தங்களுக்கு இருப்பதற்கு வசதிகள் ஏற்படும் என்று அதோடு முடிந்தால் இலங்கையில் இருக்கும் தங்கள் உறவினர்களை கூட போராட்டத்தை காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு அழைத்து வர முடியும் என்றும் நம்பிக்கையில் தான் விடுதலை புலிகளுக்கு பண உதவி செய்தார்கள்.

இன்றும் கூட வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போய் வருபவர்கள் கூடுதலாக இலங்கையின் சிங்களப் பகுதிகளில் இருக்கும் டூரிஸ்ட் பகுதிகளுக்கு போய் உல்லாசமாக சுத்தி பார்த்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கும் போய் அதாவது யாழ்ப்பாணத்துக்கு தங்கள் வசதி வாய்ப்புகளையும் பணப் வசதிகளையும் அங்கு கஷ்டப்படும் மக்களுக்கு பெருமை காட்டி அவர்களை கவலைப்பட வைப்பார்கள். இன்னும் ஒரு சிலர் முகநூலில் நான் பார்த்திருக்கிறேன் தங்கள் வீட்டு கல்யாணம் குழந்தைகள் காது குத்து மற்றும் சாமர்த்திய வீடுகளை மிகவும் ஆடம்பரமாக செய்து தங்கள் பணக்காரத்தனத்தை காட்டுவார்கள். அதைவிட வெக்கக்கெடு  வடபகுதிதமிழர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்திய தூதுவாராலய அதிகாரிகளை போய் சந்தித்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் வீட்டு விழாக்களுக்கு அழைத்து அதை பெருமையாக போட்டோ எடுத்து முகநூலிலும் போடுவார்கள்.

இந்திய தூதுவ ஆலய அதிகாரிகளும் தங்களுக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டதென்று அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுத்து விடுவார்கள். இவர்களும் வெளிநாடுகளுக்குப் போய் மிகவும் விசுவாசமாக அவர்கள் சொல்படி மிக தீவிர தமிழ் தேசியமும் விடுதலை புலிகளின் ஆதரவும் பேசி. தங்களுக்கு சம்பந்தமே இல்லாத தமிழ்நாட்டு அரசியலை அக்கு வேறு ஆணிவேராக பேசி. தமிழ்நாட்டு தமிழர்களே உசுப்பேத்தி விடுவதாக நினைத்து திராவிடம் தமிழ் தேசியம் தெலுங்கு என்று எல்லாம் பேசி இந்திய அரசுக்கு தாங்கள் கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்வார்கள்.

தமிழ்நாட்டை அசிங்கப் படுத்தி குழப்பம் விளைவிக்க நினைக்கும்தமிழ் தேசியம் பேசும் இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டில் இன்று நடக்கும் சாதி சமய பொருளாதார கஷ்டங்களைப் பற்றியோ இன்று தமிழரிடங்கள் முஸ்லிம் சிங்கள மக்களிடம் பறிபோவதை பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் மனதளவில் இல்லாமல் வாயில் மட்டும் விடுதலைப் புலிகளை பற்றியும் பிரபாகரனை பற்றியும் பெருமை பேசும் அவர்கள் விடுதலைப்புலிகள் பெற நினைத்த தமிழ் ஈழம் இன்று இல்லையே ஆண் பெண்கள் எல்லோரும் போதை மருந்துக்கும் அடிமையாகி இலங்கை தமிழினமே குறிப்பாக வடபகுதி தமிழ் மக்கள் அழிந்து போவதை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல், தமிழ்நாட்டு தமிழர்கள் திராவிடம் பேசும் திமுகவால் அழிந்து கொண்டு போவதாக முகநூலில் கருத்துக்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் 

                     தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் தங்களை யார் ஆள வேண்டும் என்பது பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் பாடம் எடுக்க தேவையில்லை. தங்களை ஆள வேண்டிய தலைவர்களை தேர்தல்களில் அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். பெரியாரையும் அவரின்கொள்கைகளையும் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். திராவிடத்தை ஏற்றுக் கொள்வதும் புறக்கணிப்பதும் தமிழ்நாட்டு மக்களின் வேலை. இலங்கைத் தமிழர்களின் வேலை இன்று இலங்கையில் நடக்கும் போதைப்பொருள் ,ஊழல், பல்கலைக்கழக தமிழ்பேராசிரியர்களின் பாலியல் லீலைகள் பற்றியெல்லாம் கவலைப்பட்டு எந்த அறிக்கையும் முகநூல் பதிவுகளும் போடாமல் ஏன் நீங்கள்  அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை பற்றிய தரம் குறைந்த பதிவுகளை போடுகிறீர்கள். நீங்கள் இப்போது யாருக்காக வேலை செய்கிறீர்கள். தமிழ்நாட்டிலும் நீங்கள் செய்வது போல் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல கடந்த 40 வருடங்களாக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் நல்லது செய்யும் திமுக அரசை அகற்றுவதற்கு பல பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

                           இன்று இலங்கையில் தமிழர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கு ரசிகர்களாகி பெரும் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வந்து போகிறார்கள். நல்ல விடயம் போரினால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உற்சாகப்படுத்துவதற்காக தான் என்று பலர் எழுதுகிறார்கள் சொல்கிறார்கள். உண்மை அது அல்ல. இனிமேல் இலங்கையில் தமிழர்கள் போதை மருந்து எப்படி தென் இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிமையாகி இனிமேல் தமிழினம் தமிழ் ஈழம் தமிழர் பாரம்பரிய இடமெல்லாம் பற்றி பேச மாட்டார்கள் அவர்கள் இனிமேல் இவற்றுக்குஅடிமையாகி முழு இலங்கையும் சிங்கள மக்களே வாழும் பிரதேசமாக செயல்பட போகிறது.

                   தமிழ்நாட்டைப் பற்றி திராவிடத்தைப் பற்றி தமிழ் தேசியத்தை பற்றி பேசும் இலங்கைத் தமிழர்கள் எங்கள் சொந்த நாட்டில் யார் ஆண்டால் என்ன தமிழ் இனம் அழிந்தால் என்ன நாங்கள் வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை வாழ்வோம். பெருமைக்காக பிரபாகரன் பற்றி விடுதலை புலிகள் பற்றியும் தமிழ் தேசியம் தமிழ் ஈழம் பற்றியும் பேசுவோம் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

அன்று தமிழ்நாட்டில் தடா பொடா சட்டங்களுக்கு பயப்படாமல் பல சிறைவாசங்கள் அனுபவித்து பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக பல ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டு பல சிறைவாசகங்களையும் காவல்துறை அடிகளையும்வாங்கிக் கொண்டு உதவி செய்த தமிழர்களை இன்று பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு எந்தவித பிரதிபலனும் பாராமல் உதவி செய்த கொளத்தூர் மணி போன்றவர்களை பெரியார் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு செயல்படும் தமிழ் ஈழத்துக்காக பிரபாகரனுக்கு உதவி செய்த அதாவது பணம் உதவியோ எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்தவர்களை அசிங்கமாக திட்டுவது மிகவும் கேவலமான விடயம். இவர்களிடம் உதவி வாங்கிய பிரபாகரனும் அப்படியானால் மிகவும் கேவலமான மனிதர் தான். ஏற்றுக்கொள்கிறீர்களா.

       வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் விசித்திரமான மனநிலை. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் அவர்களின் குடும்பத்தாரும், இலங்கையில் இருந்து மணப் பெண்ணும் அவர்களின் குடும்பத்தாரும் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருவார்கள். அப்போது அந்த குடும்பங்களை சந்தித்து பேசும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி பேசும்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் சரி இலங்கையில் இருந்து வருபவர்களும் சரி பிரபாகரனையும் விடுதலை புலிகள் அமைப்பையும் பற்றி எந்த ஒரு நல்ல விடயங்களையும் சொல்வதில்லை மக்களை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதாகவும் தாங்கள் கொழும்புபோவதாக சொல்லி இந்தியா வரும்போது ஆட்களை பிணை வைத்து அல்லது பெருந்தொகையான தங்கத்தை கொடுத்து வருவதாகவும் ஒரு கொள்ளை கூட்டத்துடன் இலங்கை தமிழ் மக்கள் சிக்கி இருப்பதாகவும் கூறுவார்கள். அதுபோல் வெளிநாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளைகள் வெளிநாட்டில் தங்களை பயமுறுத்தி பணம் சேகரிப்பதாகவும் கொடுக்காவிட்டால் தங்கள் உறவினர்களை ஊரில் கடத்தி பணம் கேட்டு தொல்லை படுத்துவதாகவும் கொடுக்காவிட்டால் ஈவு இரக்கமின்றி உறவினர்களை கொலை செய்வதாகவும் கூறி அனுதாபத்தை தேடி கொள்வார்கள்.


யாரும் தமிழ்நாட்டுக்கு வந்து திருமணம் செய்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் எமது தமிழீழப் போராட்டத்தைப் பற்றி எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. எல்லா இயக்கங்களும் இந்திய படையும் இலங்கை படையும் தமிழர்களை அழித்து விட்டதாகவும் மிஞ்சி இருக்கும் தமிழர்களை விடுதலைப் புலிகளும் அழித்து விடுவார்கள் என்றும் தான் கூறினார்கள்.

இப்படி போராட்டத்தையும் விடுதலை புலிகளையும் பற்றி குறை கூறியவர்கள் எல்லாம் இப்போது விடுதலைப் புலிகளைப் பற்றி பிரபாகரனை பற்றி பெருமையாக பேசி தமிழ் தேசியமும் பேசுகிறார்கள். அதைவிட ஒரு படி முன்னாள் போய் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.

ஆனால் உங்களுக்கு சொந்தமான நாட்டை யார் ஆள வேண்டும் என்று சொல்லவில்லை சொல்ல முடியாது காரணம் அப்படி சொல்லக்கூடிய நிலையில் இலங்கையில் தமிழ் இனம் இல்லை அங்கு கஞ்சா கடத்தியவனும் கொள்ளை அடிப்பவனம் ஊழல் செய்பவன் தான் தமிழ்தலைவர்களாக இருக்கிறார்கள்.


உங்களது பேச்சுக்களால் எழுத்துக்களால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் அமைதியாக இப்போது வாழுவதை கெடுத்து விடாதீர்கள். முடிந்தால் உங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு இலங்கையில் கடைசி போராட்டத்தில் கைகால் இழந்து கண் இழந்து வறுமையில் வாடும் உண்மையான போராளிகளுக்கு உதவி செய்யுங்கள்.



logoblog

Thanks for reading வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் விசித்திரமான மனநிலை

Previous
« Prev Post

No comments:

Post a Comment