நேற்று தற்செயலாக லண்டனில் இருந்து வெளிவரும் தேசம் மூவிyoutube சேனல் ஒன்றை பார்க்க கிடைத்தது. அதில் எனது முகநூல் படத்தையும் போட்டு இவர் முன்பு இந்திய அரசின் உளவுத்துறையான ரா அமைப்பின் முன்னாள் முகவர் அதாவது ஏஜென்ட் என்று போட்டு இவர் வெற்றிச்செல்வன் முகநூலில் தான் இந்திய உளவுத்துறையின் முகவர் என்பதை பெருமையுடன் எழுதி பெருமைப்படுகிறார் என போட்டிருந்தார்கள்.
இப்படி தவறான தகவலை போட்டிருந்தவர் எனது முகநூலை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். முன்பும் அவர் தனது இன்டர்நெட் புத்தகத்தில் அப்படித்தான் எழுதினார். அவரைப் பற்றிய முழு விபரங்களும் பின்னர் தருகிறேன்.
இந்தியாவில் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்பு இந்திய மத்தியஉளவுத்துறைகளோடு, தொடர்புகளை இயக்கத் தலைமைகள் தொடர்பு கொள்ள ஒருவரையோ அல்லது இருவரையோ இயக்கத் தலைவர்கள் நியமித்திருப்பார்கள். அதுபோல் மாநில உளவுத்துறையை சந்திக்க வேறு சிலரை இயக்க தலைவர்கள் நியமித்திருப்பார்கள். எல்லாரும் அதாவது இயக்கத்தில் உள்ள அனைத்து தோழர்களும் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க இயக்க தலைமையும் விரும்பாது. உளவுத்துறை அதிகாரிகளும் விரும்ப மாட்டார்கள். இதுதான் எல்லா விடுதலை இயக்கங்களும் கொண்ட நடைமுறை.
PLO பயிற்சிக்கு இயக்க தோழர்களை அனுப்புவதற்காக டெல்லியில் புளொட் இயக்க சார்பாக. நான் இருந்தபோது, தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் இந்திய மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்கும்படி இயக்கத்தின் தலைவரால் பணிக்கப்பட்டேன். அதோடு வெளிநாட்டு தூதுவர் ஆலயங்களை சந்திக்கவும் ஒரு சிறு அலுவலகம் அமைத்துக் கொண்டோம். எங்கள் இயக்க செயல் அதிபர், மற்றும் முக்கிய இயக்கத் தலைவர்கள் டெல்லி வரும்போது எமது தொடர்பில் உள்ள எல்லோரையும் சந்திக்க அழைத்துச் செல்வேன்.
ஆனால் செயல் அதிபர் உமா மகேஸ்வரன், மற்றும் சித்தார்த்தன் இந்திய மத்திய உளவுத்துறைகளான ரா,IB அதிகாரிகளை சந்திக்கும் போது என்னையும் அழைத்துப் போவார்கள். இதுபோல் சென்னையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க ஒருவரையும், மாநில உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க வேறொருவரையும் இயக்கங்கள் நியமித்திருக்கும். மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க வேறு வேறு தோழர்களே நியமிப்பதன் காரணம், ஒரு தோழரே ரெண்டு உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்கும் போது வாய் தவறி அவர்களுடன் பேசிய பேச்சுக்களை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே தான். அதோடு சென்னையில் மத்திய உளவுத்துறைகளின் அதிகாரிகள் நடவடிக்கை எமக்கு எதிராக இருந்தால், டெல்லியில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு செயல் அதிபர் நடந்த உண்மைகளை கூறும் படி என்னிடம் கூறுவார். இதுதான் எனது செயல்பாடு.
இதில் எங்கிருந்து வந்தது எனது வேலை ரா முகவர் என்று. அப்படி இருந்தால் எல்லா இயக்கங்களில் இருந்தும் ரா உளவுத்துறையை சந்தித்தவர்கள் எல்லாம் முகவர்களா. விடுதலைப் புலிகளை சேர்ந்த கிட்டு சாகும் முன்பு லண்டனில் இருந்தவரை இந்திய உளவு அதிகாரிகளின் தொடர்பில் இருந்திருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை இந்திய அதிகாரிகள் கிட்டு விடம் தான் முதலில் இதை பற்றி பேசி இருக்கிறார்கள்.
இந்தியாவில் இயக்கங்கள் இருந்தபோது அவற்றுக்கு பலவித பிரிவுகள் உள்ள வேலை திட்டங்கள் இருந்தன. அந்த பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் தங்கள் சந்திக்கும் அமைச்சர் வேறு அதிகாரிகளே மற்ற பிரிவினரோ பேரு தோழர்களோ சந்திப்பதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாணவர் அமைப்பு சேர்ந்தவர்கள் இங்கு கல்லூரி பாடசாலைகளில் அகதி மாணவர்களின் கல்வி சம்பந்தமாக அமைச்சர்கள் அதிகாரிகளை சந்திக்கும் போது அவர்கள் மட்டும்தான் சந்திப்பார்கள். அதற்காக அவர்களை அமைச்சரின் முகவர் என்று கூற முடியுமா.
இந்தியாவில் எல்லா தமிழ் விடுதலை இயக்கங்களும் இந்தியாவில் இருந்தபோது என்ன நடந்தது என்று இதுவரை விரிவாக எழுதவில்லை. விடுதலை இயக்கங்களுக்கு கிடைத்த தொடர்புகள் பற்றி கூட யாரும் எழுதவில்லை எழுத விரும்பவில்லை. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை இயக்கங்கள் எழுதாமல் விட்டதால் இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி பலவித கற்பனை கதைகள், அதுவும் இயக்கங்கள் இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவில் இருக்காதவர்கள், அதில் சிலர் அப்போது பிறக்காதவர்கள் கூட தங்கள் கற்பனை வளத்தை பயன்படுத்தி பல கட்டுரைகள் எழுதினார்கள்.
நான் நேரடியாக சம்பவங்களை பார்த்தவன் சம்பந்தப்பட்டவன் என்ற அளவில் எனது இயக்கம் இந்தியாவில் இருந்தபோதுஎன்ன நடந்தது என்று பதிவுகள் போட வேண்டிய அவசியம் பற்றி பல நண்பர்கள் புத்தகமாக போடும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். எனக்கு புத்தகமாக போட்டு பணம் சம்பாதிப்பதை விட, அதைவிட பணவசதியும் இருக்கவில்லை. முகநூலில் பதிவுகளாக போட்டால் இங்கு நடந்த உண்மைகளை சம்பவங்களை பலர் ஓரளவு சரி அறிந்து கொள்ள முடியும். கடந்த காலங்களில் நாங்கள் விட்ட தவறுகளை இனிமேல் சரி யாரும் விடக்கூடாது என்ற எண்ணத்திலும், நான் பதிவு போடும்போது மற்ற இயக்கங்களில் இருந்து கூட யாரும் தங்கள் இயக்கங்களுக்கும் இந்தியாவுக்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் தமிழ்நாட்டு தொடர்புகள் பற்றியும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் எழுதவில்லை என்னையும் எழுத வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் தொடர்ந்து எழுத மறைமுகமாக மிரட்டல்களும் விட்டார்கள். அதோடு நான் இந்திய உளவுத்துறை ரா சொல்லி எழுதுவதாக கதை பரப்பி விட்டார்கள். பின்பு நான் இந்திய உளவுத்துறை ரா ஏஜென்ட் என்று சொல்லி மகிழ்ந்தார்கள். இயக்கங்கள் இந்தியாவில் உளவுத்துறை ரா மற்றும் சந்திக்கவில்லை. இந்தியாவின் உள்நாட்டு சக்தி வாய்ந்த lB உளவுத்துறை ராணுவ உளவுத்துறை தமிழ்நாட்டு உளவுத்துறை பிரான்ச், lS அரசியல் உளவுத்துறை மற்றும் பல பிரிவுகளை சந்தித்து இருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் உடனுக்குடன் தலைமைக்கு மட்டும் நேரடியாக ரிப்போர்ட் அனுப்புவோம் இதுதான் மற்ற இயக்கங்களிலும் நடந்தது. வெளிநாடுகளில் இருந்து பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு நல்ல காலம் மற்ற உளவுத்துறைகளைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தெரிந்து இருந்தால் அவற்றின் முகவர் என்றும் எழுதியிருப்பார் கள்.
மேலும் முக்கிய விடயம் என்னை இந்திய ரா முகவர் என்று எழுதி மகிழும் நண்பர் லண்டனில் தான் ஒரு பெரிய அறிவுஜீவி என்றும் தனது எழுத்துக்கு பெரு மதிப்பு இருக்கிறது என்றும் பெண்களின் கண்ணியத்தை காப்போம் என்றும் கூறிக் கொள்பவர். ஆனால் அவர் தனது கட்டுரைகள் மூலம் பலரை பயமுறுத்தி அதாவது பிளாக் மெயில் செய்து பணம் சம்பாதிப்பவர் என்று அறிய முடிந்தது.
அவர் லண்டனில் தனது புகழை பரப்ப இவரை ப் பற்றிய இவரின் குடும்பத்தை பற்றிய முழு விபரமும் எங்களுக்கு அத்துபடி. இவரை சென்னையில் வைத்து எங்களுடன் தங்க வைத்து ஒரு கஷ்டமான காலத்தில் ஒரு வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியை பயமுறுத்தி குறைந்த காசில் அவரே லண்டனுக்கு அனுப்பி வைத்தவன் நான்.
இவரும் காண எவ்வளவு பெரிய ஆளாக வெளியில்காட்டிக் கொண்டாலும், எங்கள் முன்பு இவர் தலை குனிந்து தான் நிற்க வேண்டும் அது அவருக்கு மிகப்பெரிய சங்கடமாக பல நேரங்களில் இருந்ததை நான் அறிவேன். எனக்கு மட்டுமல்ல அந்த காலத்தில் என்னோட இருந்த பல நண்பர்களுக்கும் இவரைப் பற்றி தெரியும். பலமுறை தான் எப்படி லண்டன் வந்தேன் விபரங்களை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தொலைபேசி மூலம் கெஞ்சி கேட்டுக் கொண்டவர். அது பற்றி முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன் திரும்பவும் தனது youtube மூலம் பிரபல்யமாக கூடுதல் ஆதரவு பெற்று பணம் சம்பாதிக்க என்னைப் பற்றி போட்டு இதுவும் ஒரு பிளாக் மெயில் தான் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்.
இவரின் சகோதரர் இந்தியாவில் இருந்தபோது 1987 தொடக்கம் 1989 வரை தமிழ்நாட்டில் புளொட் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் செய்த கொலைகள் கொள்ளைகள் திருட்டுக்கள், சில பாலியல் சம்பவங்கள் அதிகம். கொள்ளையடித்த பொருட்களை விற்று அதில் வரும் பணத்தை தங்கமாகவும் போதைப் பொருளாகவும் இலங்கைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்திய தமிழ்மக்களிடமும் போதைப் பொருளை விற்பனை செய்து பணம் சம்பாதித்தார். நானும் அப்போது சித்தார்த்தன் அவர்களும் தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பதை குறித்து கடும் கண்டனம் தெரிவித்தோம். ஏற்றுக்கொண்டார். இயக்கத்தில் இருந்த சக நண்பரையே, நண்பர் இவர்களுக்கு சாப்பிட கொடுக்க தேங்காய் வாயால் உரித்து கொண்டு இருக்கும்போது முகத்தில் சுட்டு கொலை செய்ய முயன்றவர். ஆனால் நண்பர் கடும் காயத்துடன் தப்பிவிட்டார்.
இயக்கத்தின் முக்கிய ஆவணங்கள் புகைப்படங்கள் வீடியோ டேப்புகள் மற்றும் நான் டெல்லியில் சேகரித்த இலங்கை சம்பந்தமான மற்ற இயக்கங்கள் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் இலங்கைக்கு கொண்டு போக இயக்கத் தலைவரின் கட்டளைப்படி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவற்றைக் கொண்டு போய் கரூரில் இருந்த தனது நண்பனானஇலங்கை தமிழரின் வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டார் இலங்கைக்கு அனுப்பவில்லை. அந்த ஆவணங்களை பார்க்க போகும் சாட்டில் அந்த நண்பரின் மனைவியை பண ஆசை காட்டியும் பயமுறுத்தியம் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதை அறிந்த கணவர் நண்பர் ஒன்றும் செய்ய முடியாமல் பயத்தில் இருந்துள்ளார். ஆனால் ரகசியமாக போலீசாருக்கு தனது வீட்டில் இருக்கும் ஆவணங்கள் பற்றி தகவல் கொடுத்து அந்த ஆவணங்கள் போலீசாரால் 1989 ஆண்டு கைப்பற்றப்பட்டது. அந்த ஆவணங்கள் இருந்திருந்தால் எமது விடுதலைப் போராட்டம் சம்பந்தமான எல்லா தகவல்களும் தேதி வாரியாக இருந்திருக்கும்.
எனது பதிவுகளை வாசித்த லண்டன் அறிவு ஜீவி என்னை அடிக்கடி தொலைபேசி மூலம் பாராட்டியவர் அவரது சகோதரனை பற்றி எழுதும் போதும் அதை அதை பற்றி எழுத வேண்டாம் தனதும் தனது மறைந்த சகோதரனுக்கும் இமேஜ்கெட்டு விடும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் நான் எழுத வேண்டிய கட்டாயத்தால் அவர் சம்பந்தப் பகுதிகளை எழுதினேன் ஆனால் அவர் சகோதரர் சம்பந்தப்பட்ட பாலியல் சம்பவங்களை எழுதவில்லை. என்னோடு நல்ல விதமாக லண்டனில் இருந்து பேசிக் கொண்டிருந்தவர் அவரு சகோதரரை பற்றிய பதிவுகள் வந்தவுடன் மிரட்டல் போல பேசினார். எங்களோடு இயக்கத்தில் இருந்த அவரின் சகோதரர் கடைசியில் மனம் திருந்தி இயக்க தலைவர் தங்களை கொள்ளைக்காரராக திருடனாக போதை மருந்து கடத்துவானாக மாற்றிவிட்டார் என்று எல்லா தோழர்களிடமும் பல உண்மைகளை கூறி நாங்கள் விடுதலை இயக்கமா இல்லை கொள்ளை கோஷ்டியா என்று துணிந்து குரல் கொடுத்தார். இதன் பிறகு தான் இயக்கத் தோழர்கள் தலைமையின் செயல்பாடுகளை அறிந்து தலைமையை வெறுக்க தொடங்கினார்கள்.
இயக்க தலைவர் அவரை காவலில் முள்ளிக்குளம் முகாமில் வைத்திருந்தபோது விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போது கொலை செய்யப்பட்டார்.
பின்பு உமா மகேஸ்வரன் மரண தண்டனைக்கு இயக்க சார்பாக உரிமை கூறியவர்களில் ஒருவரான ஆட்சி ராஜன் வறுமையில் கஷ்டப்பட்ட அந்த குடும்பத்துக்கு பண உதவி செய்ததோடு முள்ளி குளத்தில் இறந்த தோழரின் சகோதரி திருமணத்துக்கு எங்களிடம் கூறிவிட்டு பண உதவியும் செய்தார். அவரின் தம்பியான லண்டனில் இருக்கும் அறிவு ஜீவியையும் வெளிநாட்டுக்கு அனுப்ப சென்னை கூட்டி வந்தார். சென்னையில் எனது பொறுப்பில் தான் பாதுகாப்பாக எல்லோரும் இருந்தார்கள். எங்களை கொலை செய்ய மாணிக்கம் தாசன் மற்றும் தோழர்கள் சென்னையில் வலைவீசி தேடிக் கொண்டிருந்த நேரம் அது. எங்களோடு இருந்த தோழர்களே பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி கொண்டிருந்த நேரம் இந்த லண்டன் அறிவு ஜீவி என்னிடம் தன்னை முதலில் அனுப்பும்படி கெஞ்சிய காட்சிகள் இப்பொழுது என் கண் முன் வந்து நிற்கிறது.
வரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு இங்கு நாங்கள் பல கஷ்டங்களின் மத்தியில் இருந்தோம். ஐந்தாண்டு வருடங்களின் பின் இந்தியா வந்தபோது இவரின் நடவடிக்கைகள் பெரிய கோடீஸ்வரர் போலவே இருந்தது எங்களை மதிப்பது கூடி இல்லை. அவர் ஊரில் இருக்கும்போது காதலித்த பெண்ணை அவரின் அம்மா சென்னை கூட்டி வர , அறிவு ஜீவி கேட்டுக்கொண்டதன் படிநான் தான் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் பின்பும் நடந்த பல சம்பவங்கள் அவரின் அம்மாவும் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டதில் அவர்களால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் அவரின் அம்மாவை செருப்பால் அடித்திருக்கிறார். பின்பு நான் தான் அவரின் அம்மா இலங்கை போக உதவி செய்தேன்.
மற்றவர்களின் தனிப்பட்ட குறை நிறைகளை பற்றி நான் இதுவரை எழுதவில்லை எழுதவும் விரும்பவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது ஆனால் எங்களிடமே உதவி பெற்று வெளிநாட்டுக்கு போய் சுகமாக இருந்து கொண்டு எனது எழுத்தை கட்டுப்படுத்தி என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒருவரைப் பற்றிய உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்த பதிவை எழுதுகிறேன்.
பெண்களைப் பற்றி உயர்வாகவும் பெண் சுதந்திரத்தைப் பற்றி வரிக்கு வரி எழுதும் அந்த அறிவு ஜீவி தனது காதல் மனைவியுடன் நடந்து கொண்ட முறை பற்றி பல நண்பர்கள் கதை கதையாக கூறினார்கள். நீங்கள் பாம்புக்குப் பால் பார்த்தீர்கள். அது கொத்தத்தான் செய்யும். அவர் கஷ்டத்தில் இருந்தபோது லண்டனில் பல நண்பர்கள் அவருக்கு உதவி செய்துள்ளார்கள். உதவியை பெற்றுக் கொண்ட பின் பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் தனது மனைவியின் அழகை பார்த்து தான் கொடுத்தார்கள் என்று கீழ்த்தரமாக மற்றவர்களிடம் பேசியுள்ளார். ரெண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டிலும் படுக்கையறையிலும் சிசி டிவி கேமரா வைத்து மனைவியை கண்காணித்து இருந்திருக்கிறார். அதைத் தெரிந்து கொண்ட அவரின் மனைவி அவரை வீட்டை விட்டு அடித்து துரத்தி விட்டதாக அறிந்தேன்.
இப்படிக்கு தரமானவர்கள் எல்லாம் சமூகத்தில் தங்களை அறிவு ஜீவிகள் போன்றும் சமூகத்தை திருத்த வந்தவர்கள் போலவும் காட்டிக் கொள்வது எவ்வளவு வெக்க கூடாது இவர்களைச் சுற்றியும் ஒரு கூட்டம் இவர்களை ஆஹா என்று புகழ்வது வெட்கக்கேடானது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடக்கும் வரை இவரும் இவரின் சில நண்பர்களும் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக தகவல்கள் கொடுத்து வந்தது பற்றி இவர் எங்களுக்கு கூறியுள்ளார். அதற்காக இலங்கை அரசு பெருமளவு பணம் இவருக்கு எல்லாம் கொடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் முடிவின் பின் இலங்கைக்குச் சென்று ஆட்சியாளர்களை சந்தித்து தாங்கள் லண்டனில் இலங்கை அரசுக்கு செய்த உதவிகள் எல்லாம் பட்டியல் இட்டுள்ளார். பெருமளவும் பணமும் வாங்கி அங்கும் சில அமைப்புகளை தொடங்கி தாங்கள் சமூக சேவகர்கள் போல் காட்டிக்கொண்டு இன்றும் பணம் வாங்கும் பறிக்கும் வேலைகள் செய்வதாக நண்பர்கள் கூறினார்கள்.
இந்தப் பதிவை போட்டதற்காக வெட்கப்படுகிறேன்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035jBQj3QbVGfzGpuecpUkNL1MTmYuMkyMv6GMoELcASMHBNzf71DypACrFb56x5Xwl&id=100030353898119&mibextid=Nif5oz
No comments:
Post a Comment