பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 27 October 2023

புரியாத புதிர் இயக்கத் திடீர் கோடீஸ்வரர்கள்

  வெற்றிசெல்வன்       Friday, 27 October 2023

ஒரு புரியாத புதிர் ஒன்று உள்ளது. விபரம் தெரிந்தவர்கள் உண்மைகளை கூற முடியுமா?


1980 ஆண்டு காலப்பகுதிகளில் பல விடுதலை இயக்கங்கள் தோன்றி இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகள் வன்னிப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு சிங்கள அரசு ராணுவத்திடம் இருந்து பாதுகாப்பு கொடுத்து நிரந்தர பாதுகாப்புக்காக தனித்தமிழ் ஈழம் அமைத்து தமிழ் மக்களை பாதுகாப்போம் என்று ஒவ்வொரு இயக்கமும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை சேர்த்து, குறிப்பிட வேண்டிய விஷயம் இந்த போராட்டத்தில் சேர்ந்த அனைவரும் மிகப் பெரிய செல்வந்தர்கள் இல்லை. நடுத்தர வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தான் அனைவரும்.

இயக்கங்கள் வளர வரள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய இயக்கங்கள் தமிழ் மக்களிடமே கொள்ளையடித்து தமிழ் மக்களையே சித்திரவதை கொலைகளும் செய்து தங்கள் வளர்ச்சியை பதிவு செய்து கொண்டார்கள். இயக்கத்தின் கொள்கைக்காக வந்த இளைஞர்கள் அதன் தலைமையின் தவறால் பலர் உள் இயக்க முரண் பாட்டால், கொள்கை பேசியதால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள். இது அனைத்து இயக்கங்களிலும் நடந்த கதை.

இயக்கங்களின் அதன் தலைவர்களின் போக்குகள் பிடிக்காமல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்1986,1987 ஆண்டுகளில் இலங்கைக்கு போயும்,பலர் நண்பர்களின் உதவியோடு உறவினர் உதவியோடு வெளிநாடுகளுக்கு அகதிகளா போய், அங்கு கடுமையாக வேலைகள் செய்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதை வரவேற்க வேண்டும்.

இன்னும் சில பல தோழர்கள் இலங்கைக்கும், வெளிநாடுகளுக்கும் போக வழி இல்லாமல் உயிர் பாதுகாப்பும் இல்லாமல் தொடர்ந்து இயக்க தலைமைகள் தவறு என்றாலும் வேறு வழி இல்லாமல் அந்தந்த இயக்கங்களில் தொடர்ந்து இலங்கையில் போயிருந்தார்கள். அவர்களில் பல இளைஞர்கள் தொடர்ந்து வறுமையில் இருந்து இன்று கிழவர்களாக அதே வறுமையில் தொடர்ந்து தாங்கள் இருந்த இயக்கத்துக்காக கொள்கைக்காக இருந்து வருகிறார்கள். சில இயக்கங்கள் இருந்த இளைஞர்கள் இன்று வரை தமிழ்நாட்டு முகாம்களில் மிக வறுமையில் இருந்து கொண்டு தங்கள் இயக்கத்தையும் தலைவர்களையும் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தாங்கள் வறுமையிலும் அகதியாகவும் வாழ்வதற்கு இந்த தலைவர்கள் தான் காரணம் என்று அவர்களுக்கு இன்று வரை தெரியவில்லை.

அதே நேரம் இப்போது இருக்கும் தலைமைகளும் அவர்களைச் சுற்றி நெருங்கிய ஒரு கூட்டமும் வசதி வாய்ப்புகளோடு விலை கூடிய கார்களோடு சுத்தி வரவும், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பெரிய கடைகள் பிசினஸ்கள் செய்வதற்கு இவர்களுக்கு எங்கு பணம் வந்தது. கேட்டால் சொல்லுவார்கள் எங்களது உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் அவர்கள் பணம் அனுப்பினார்கள் என்று. இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரவும் பெரிய பெரிய ஹோட்டல்களில் வெளிநாடுகளில் தங்குவதற்கும் உறவினர்களா பணம் அனுப்புகிறார்கள்.

இப்போதுஇருக்கும் தலைவர்களை நெருங்கி இருந்த மற்றும் பலர் தங்கள் உறவினர்களை குடும்பத்தவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தாங்களும் வெளிநாடுகளில் போய் இருந்து கொண்டு குறுகிய காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள். அதோடு காலத்துக்கு காலம் பல உலக நாடுகளில் இவர்கள் போய் விடுமுறை கொண்டாடுகிறார்கள். இதற்கெல்லாம் வெளிநாடுகளில் குறைந்த காலத்தில் உழைத்து செலவழிக்க முடியாது. இவர்களோடு இயக்கத்துக்கு வந்த பல இளைஞர்கள் வயது போய் மிக வறுமையில் வாடுவது உண்மை.

அதோடு இந்தக் கோடீஸ்வர முன்னாள் போராளிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தங்கள் விசுவாசம் உள்ள தலைவரோடு அரசியலும் செய்கிறார்கள். வறுமையில் இன்னும் இயக்க விசுவாசத்தோடு இருக்கும் தோழர்கள் இவர்களை அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள்.

எனக்குத் தெரியக் கூடியதாக இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின் அரசியல் செய்த தமிழ் தலைவர்களும் அவர்களின் நெருங்கிய உள் வட்டத்தை சேர்ந்தவர்களும் பல கோடிகளை கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் பணம். இது ஒரு இயக்கத்தை மட்டும் சேர்ந்த அவர்கள் செய்தது அல்ல. எல்லா எல்லா இயக்கங்களிலும் தலைவரும் அவர்களை சுற்றி இருக்கும் நெருங்கிய ஒரு சிலரும் கொள்ளையடித்த பணத்தை அனுபவிக்கிறார்கள். அதை வைத்து அரசியல் செய்து பதவியே பிடிக்கிறார்கள் பிடித்த பதவியை கொண்டு திரும்ப பணம் சேகரிக்கிறார்கள். இவர்களை நம்பி வந்த உண்மையான போராளி வயதுப்போன இளைஞர்கள் எந்த ஒரு வசதி வாய்ப்பையும் பார்க்காமல் குடும்பத்தையும் பராமரிக்க வசதி இல்லாமல் மரணத்தை தழுவிய பல சம்பவங்கள் பற்றி பல தோழர்கள் கூறுகிறார்கள்.

இவர்களைப் பற்றி பல தோழர்கள் தங்கள் மனக்குமுறல்களை என்னிடம் கொட்டினபடியால் இந்த பதிவை போடுகிறேன். இந்திய நாட்டில் அம்பானி அதானி போல் ,அவர்கள்பிசினஸ் செய்கிறார்கள், பிசினஸ் செய்யாமலே இயக்கத் தலைவர்களும் அவர்களை சுற்றி ஒரு குழுவும் கோடி கோடியாக பணத்தை வைத்து சுற்றித் திரிகிறார்கள் அதைப் பற்றி தெரிந்தவர்கள் எழுத முடியுமா.


logoblog

Thanks for reading புரியாத புதிர் இயக்கத் திடீர் கோடீஸ்வரர்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment