பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 17 October 2023

  வெற்றிசெல்வன்       Tuesday, 17 October 2023
இலங்கையிலும் இந்தியாவிலும் இலங்கை அரசுக்கு சிங்கள மக்களுக்கு ஆதரவான ஒரு கூட்டம் கடுமையாக வேலை செய்வதாக தெரிகிறது. எமது முட்டாள்தனமான கடந்த கால வரலாற்று தவறுகளால் தமிழ் இன முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் தமிழின எதிரியாக காட்டி மதத்தால் வேறுபட்டவர்கள் ( தமிழ் மொழியால் அல்ல) அவர்களைப் பிரித்து முதலில் தமிழ் இன மக்களை பிரித்தார்கள். அதன் விளைவு கிழக்கு மாகாணத்தில் தெரிகிறது.
இப்போது மலையக மக்களை வடக்கு மக்களின் எதிரியாக உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் தேசத்தில் வசதியாக வாழும் தமிழர்களை முரளிதரன் என்ற மலையகத் தமிழரை அவரின் பெயரையும் அவரின் சினிமா படத்தையும் வைத்து பிரச்சனையாகி வடக்குத் தமிழரை அன்னியப்படுத்தும் வேலை நடக்கிறது. எல்லா விடுதலை இயக்கங்களிலும் மலையகத் தமிழர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவில் மறைக்கப்பட்டு போராடி பலியாகி இருக்கிறார் கள்.
இனிமேலும் தமிழர்களை வடக்கு கிழக்கு மலையக தமிழர்கள் என பிரிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது.இந்தியாவில் இருக்கும் முரளிதரனுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுக்கும்இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் எல்லோரும் மறைமுகமாக சிங்கள அரசின் கைக்கூலிகள்.தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன இவர்கள் தமிழ்நாட்டில் நடக்கும் எந்த சாதி பிரச்சினைக்காக குரல் கொடுத்து இருக்கிறார்களா? நீட் பிரச்சினைக்காக, தமிழ்நாட்டில் தினசரி நடக்கும் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறார்களோ இல்லை. ஆனால் பணம் கொழிக்கும் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஆக்ரோசமாக குரல் கொடுப்பார்கள்.
இன்று வடக்கு கிழக்கு மக்களே தங்கள் உயிருக்குயிரான தமிழ் மக்களை கொலை செய்த சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தொடங்கியுள்ளார்கள். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக முதலில் வருவதற்கு யாரு பணம் பெற்றுக் கொண்டு உதவி செய்தது என்று தெரியாதவர்கள். முரளிதரன் ராஜபக்ஷே குடும்பத்தோடு நட்பு என்று ராஜபக்சேவுடன் இருக்கும் படத்தை போடுகிறார்கள் . எங்கள் புதிய தமிழின போராளி விக்னேஸ்வரன் ஐயா ராஜபக்சே குடும்பத்துடன் இருக்கும் படத்தைப் போட்டு துரோகி என கூறமாட்டார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை போய் விக்னேஸ்வரனுடன் தாங்களும் சேர்ந்து படத்தை எடுத்து,படத்தை மட்டும் எடுத்து போட்டுக் கொள்வார்கள். இலங்கைத் தமிழர்கள் தங்களை வைத்து தன் கையே தன் கண்ணைக் குத்துவது போல் தமிழர்களை பிரித்தாளும் வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசு சக்திகள் செயல்படுவதை ஒரு தரம் எண்ணிப்பாருங்கள்.
இன்று இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக ஈழ ஆதரவாளர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன் நன்றி. ஆனால் நீங்கள் உங்களுடன் கூட இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக எந்த அளவில் குரல் கொடுத்து இருக்கிறீர்கள் குரல் கொடுத்து வருகிறீர்கள் என்பதை முதலில் இலங்கை தமிழருக்கு தெரியப்படுத்துங்கள். தமிழ்நாட்டில் தமிழருக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களில் உங்கள் பெயர்களை நாங்கள் பார்த்ததில்லை
logoblog

Thanks for reading

Previous
« Prev Post

No comments:

Post a Comment