நேற்று நான் போட்ட பதிவு முகநூலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு எனக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆண்டு நடந்த கடைசி யுத்தத்தில் போராளிகள் மாவீரர்களாக மரணமடைந்தார்கள். 14 ஆண்டுகள் கடந்து 2023 ம் ஆண்டு மாவீரர்கள் எல்லாம் மாவீரர் தினத்தில் பணத்துக்காக போலி மாவீரர் தினத்தைபோலி துவாரகா பிரபாகரனை கொண்டு நடத்தி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி மிகவும் வருத்தத்துக்குரியது.
இதன் பின்னணி என்ன? வெறும் பணம் சேகரிப்பதற்காகவா? இல்லை இன்று மக்கள் செல்வாக்கு இழந்து இலங்கையில் இருக்கும் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை திரும்பவும் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு பெற நடந்த நிகழ்ச்சிகளா? இதற்காக 2009 யுத்தத்தில் ராஜபக்சே குடும்பத்தால் கொள்ளையிடப்பட்ட புலிகளின் கோடிக்கணக்கான பணமும் தங்கமும் திரும்பவும் இலங்கைத் தமிழர்களிடம் விநியோகிக்கப்பட்டதாக வந்த தகவல்கள் உண்மையா?
மாற்றுக் கருத்துக்களை அவ்வளவு இருந்தாலும் இப்படியான செய்கைகள் மூலம் பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் மாவீரர்களையும் அவமானப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.
No comments:
Post a Comment