எங்கள் ஈழ விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தும் அதற்கு முன்னரும் தமிழர் என்பதற்காக கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், விடுதலைப் போராட்டத்தில் சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள மக்களால், கொல்லப்பட்ட அனைத்து மலையக வடகிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கும், சொந்த தமிழின விடுதலை இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் போராளி இளைஞர்களுக்கும் எல்லோரையும் மாவீரர்களாக கருதி வீர வணக்கம் செலுத்துவதோடு, அவர்கள் என்ன காரணத்துக்காக தங்கள் இன்னுயிரை கொடுத்தார்களோ, அதை நினைவில் கொண்டு, அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய அஞ்சலி, எந்த தமிழ் ஈழ இடத்துக்காக போராடினார்களோ, அந்த நிலத்தில் இன்றும் உயிர் வாழ்ந்து, இதுதான் எங்கள் தமிழர் பூமி என்று, உலகுக்கு பறை சாற்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு உதவி செய்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று கை கால் இழந்து இன்று வறுமையில் வாழ்ந்து வரும் போராளிகளுக்கு உதவி செய்வதே மறைந்த மாவீரர்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.
இன்று விடுதலைப் போராட்டத்தில் போராடிய போராளிகளின் நிலையைப் பார்த்து, இனி வரும் காலங்களில் சொந்த இடங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தமிழர் உரிமைக்கான போராட்டத்தைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்.
அதனால் தான் இன்று தமிழர் உரிமைக்காக போராட வேண்டிய தலைவர்கள் பணத்துக்கும் பதவிக்கும் விலை போய், தாங்கள் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை மறந்து விட்டார்கள்
இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மிகவும் கவலை தருகிறது. மாவீரர்களை நினைவு கூறும் நாளை எல்லோரும் மாவீரர் தின கொண்டாட்டங்கள் என்று நினைக்கிறார்கள். அதன்படி மாவீரர்கள் ஏன் மாவீரர்கள் ஆனார்கள் என்று நினைத்து செயல்படுவதை விட, அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்கிறார்கள், அரசியல் ஆதாயம் பெற இப்போது எல்லோருக்கும் முயற்சி செய்கிறார்கள்
No comments:
Post a Comment