பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 10 January 2025

சதி வலையில் சிக்கியுள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதிர்ச்சி தரும் செய்திகள்

  வெற்றிசெல்வன்       Friday, 10 January 2025

 தமிழர் ஐக்கியவிடுதலை முன்னணி ஈழத் தமிழர்களின் மத்தியில் ஒற்றுமையும் கொள்கை உறுதியையும் உறுதிபாட்டையும் ஏற்படுத்திய ஒரு அமைப்பாகும். ஈழ விடுதலை என்ற எண்ணத்தை தமிழர் மத்தியில் ஆழ விதைத்தது இந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் பல தலைவர்களும் பல  முக்கிய செயல்பாட்டாளர்களும் கொல்லப்பட்டார்கள். யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் அறிந்ததே. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை தான்.

பல தலைவர்களையும் பல தொண்டர்களையும் இழந்த இந்த கட்சி தற்பொழுது ஆனந்த சங்கரி ஐயாவிடம் தங்கியுள்ளது. இந்தக் கட்சியை கைப்பற்ற கடந்த அரசாங்க காலத்தில் இருந்து இன்று வரை மஹிந்த சகோதரர்களில் ஒருவர் பல வழிகளில் முயற்சி செய்து வருவது  அதிர்ச்சி தரும் செய்தியாக இன்றுவெளிவந்து கொண்டிருக்கிறது 

இந்தக் கட்சியை (TULF) ஆனந்த சங்கரி ஐயாவிடமிருந்து தட்டிப் பறிக்க திருடி செல்ல இப்போது விலை கொடுத்து வாங்குவதற்கு என்று பல குழுக்களை சிங்களத் தலைவர்கள் உருவாக்கி முயற்சி செய்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் கடந்த 10 வருடங்களாக அவரிடமிருந்து எவராலும் இதுவரை தட்டி பறிக்க முடியவில்லை. 

பல குழுக்களாலும் முயற்சித்து முடியாத காரியம் ஒன்றினை தாரணிகளில் ஒன்றானபெண் பிரமுகர் சாதித்து விட்டார், என நினைக்க தோன்றுகிறது. இந்தப் பெண் பிரமுகர் தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணிக்கு கச்சிதமாக நுழைந்துள்ளளார். அத்துடன் தனக்கு விசுவாசமான சில நபர்களையும் ஆனந்த சங்கரி ஐயாவுடன் இணைத்து நகமும் சதையும் போல ஒட்டவும் வைத்து விட்டார். 

இந்தப் தாரணிபெண் பிரமுகர் ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பினை பேணி வருகின்றவர். இவர் இலங்கை ராணுவத்துக்கு யூனிபார்ம் சீருடை தைக்கும் ஒப்பந்தம் ஒன்றினை பெற்று பல மில்லியன் ரூபாய்களை சம்பாதித்துக் கொண்டது மட்டுமல்லாமல், வெற்றிலை ,மொட்டு கட்சியினரின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார் எனவும் அங்கு இருந்து கட்சியை கைப்பற்றி கோட்டாவின் காலடியில் வீழ்த்த முயற்சிகள் தொடர்கிறார் எனவும்  அறியப்படுகிறது. 

           இந்தப் பெண்ணின் வலதுகரமாக செயல்பட்டு வரும் நபர் ஒருவர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்குள் ஆழமாக உச்சென்று ஆனந்த சங்கரி ஐயாவுக்கு பதிலாக குரல் கொடுப்பவர்களாகவும் மாறியுள்ளார்றாம். இந்த நபர் கோட்டாவின் சம்மந்தி நடத்தும் இலங்கை சேவை சங்கம் ஒன்றின் வவுனியா பிரதிநிதியாக செயல்பட்டு வருவதுடன், முன்னாள் முஸ்லிம் பிரதிநிதித்துவ முன்னாள் மந்திரி ஒருவருடைய தம்பியாருடன் இணைந்து கேரளா கஞ்சா மற்றும் மஞ்சள் பொருட்கள் கடத்தப்படும் செயற்பாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பெருந்தொகையான பணத்தினை பொருளாதாரத்துவம் என்கிற தொனி பொருளுடன் கோட்டாவின் குடும்ப நபருக்கு பெற்றுக் கொடுப்பதில் பெரும் பங்களிப்பை செய்து வந்திருக்கிறார்.

உண்மையில் பழைய அரசாங்கத்தின் ஒரு ரகசிய தூதுவாராகத்தான் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் இவர் புகுந்துள்ளார்.


ஆனந்த சங்கரி அய்யாவை விட்டு பலரும் விலகிச் சென்றதால் இந்தப் பெண்ணும் இந்த நபரும் ஏனைய நபர்களும் சுலபமாக நுழைந்து விட்டார்கள் கட்சியில் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்கள் பல இடங்களிலும் இது பற்றி பல இடங்களில்புலம்பி திரிகின்றார்களாம், இந்த திருட்டு கூட்டத்திடம் இருந்து கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயாவையும் மீட்பது எப்படி என்று ஆலோசித்தும் வருகிறார்களாம். இதற்காக கனடா போன்ற நாடுகளில் இருந்து மதிப்பு மிக்கவர்களும் வந்து ஆலோசனைகள் வழங்கி உள்ளார்களாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. 

கேரளா கஞ்சா மற்றும் கடத்தல் மஞ்சள் பொருட்கள் விற்பனை மூலம் மற்றும் கடத்தல் வருமானம் மூலம் தரப்பட்ட வருமானத்தில் சில பகுதிகளை ஆனந்த சங்கரி அய்யாவை தங்கள் கையில் போடுவதற்காக செலவு செய்து வருவதாகவும் செய்திகள் உள்ளன.

வெளி தோற்றத்திற்கு இவர் ஒரு இலங்கை சேவை நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதி  என்பதே எல்லோருக்கும் தெரியும். சேவை நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதியாக செயல்படும் இவர் ஆழ்கடல் தொழிலையும் செய்து பணம் சம்பாதித்துள்ளார். இவர் தனக்கு இருக்கும் கோட்டா குடும்ப சம்மந்தியின் நட்புடன் பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்துள்ளார் அது மட்டுமல்லாமல் தனக்கு சாதகமான மற்றும் ராஜபக்சே குடும்பங்களுக்கு விசுவாசமான அந்தப் தாரணிபெண்ணின் ஆதரவுடன் ஏனைய சில நபர்களையும் மற்றும் சட்டம் படித்தவர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு வாழ்க்கையின் இறுதிக்கட்ட நிலையில் இருக்கின்ற ஆனந்த சங்கரி அய்யாவிடம் கபட நாடகம் நடத்தி கட்சியின் ஏக பிரதிநிதித்துவத்தை பெற்று விட வேண்டும் என்று சில நாட்களாக ஓடி திரிகிறார்களாம்.

        இவர்கள் கோட்டா குடும்பத்துடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் தமிழர்களின் இறையாண்மை பாரம்பரியம் போராட்ட வரலாறு ஒருமைப்பாடு போன்றவற்றுக்கு உறுதுணையான சாட்சியமான ஒரு கட்சியை பெற்று அதனை இல்லாத ஒழிப்பதற்கு திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. 

அதே வேளையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழர்களின் வாழ்வில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள கடந்த அரசாங்க முக்கியஸ்தர்கள், பணம் கோடிகளில் கொடுத்தாவது தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சிகள் செய்து வருகிறார்களாம். அதன் மூலம் தமிழ் பகுதிகளில் தங்கள் ஆதரவாளர்களை போட்டியிட வைத்து பின்பு வெற்றி பெற்ற பின் அவர்கள் மூலம் தமிழர்களின் உரிமைகளை நசுக்கி விடுவதற்கும் திசை திருப்புவதற்கும் முயற்சியாகும்.அதற்காக தமிழ் தேசியம் தமிழ் தேசிய தலைவர் என்று பேசி தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று பலரை தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ அனுப்பப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே செய்திகள் வந்தன.

2009 க்கு பின்பு தமிழ் தலைவர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளால் கோபமும் கவலையும் பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு புதிதாக ஊழல் தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழர் மத்தியில் ஊடுருவிய சிங்கள தலைவர்களின் தமிழ் பிரதிநிதிகளை தங்களைக் காப்பாற்ற வந்த தமிழ் தலைவர்கள் என்று தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். 

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் சுயரூபம் வெளியில் வருகிறது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை கோடிகளில் வாங்குவதற்கு விலை பேசுகிறார்கள். இவர்களின் உண்மை முகம் தெரியாமல்  பணம் படைத்த பலரும் பண பலத்தால் இந்த கட்சியை கைப்பற்ற உதவி செய்யலாம் என்று கூட்டங்கள் போட்டு பேசி வருவதாகவும் தகவல். 

இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திர உணர்வையும் தமிழர் பகுதி பாதுகாப்பையும் பற்றி விழிப்புணர்வு செய்த கட்சியை இன்று பண பலத்தாலும், சதி வேலைகள் செய்தும் கைப்பற்றி சிங்கள தலைவர்களிடம் ஒப்படைக்கும் வேலைகளை நாங்கள் எப்படி தடுக்க போகிறோம். 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சாதாரண ஒரு கட்சி அல்ல தமிழர்களின் அடையாளம்.





logoblog

Thanks for reading சதி வலையில் சிக்கியுள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதிர்ச்சி தரும் செய்திகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment