1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வந்தவுடன், படிப்படியாக இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட முயற்சிகள் தொடங்கின. அதன் முதல் படியாக தமிழ் மாணவர்களின் உயர்கல்வி உரிமைகள் மீது கை வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ள புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி 22/05/1972 அன்று இலங்கை அரசு குடியரசு ஆக மாற்றிக் கொண்டது.
புதிய அரசியல் அமைப்பில், இலங்கை தமிழர்கள் உரிமைகள் இழந்து சுதந்திரம் இழந்து பாதிக்கப்படுவதை அறிந்த அன்றைய முக்கிய தமிழ் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அரசியல் கட்சியை ஒற்றுமையாக ஆரம்பித்து தமிழர்களை பாதுகாக்க முதல் முயற்சி எடுத்தார்கள். அதில் தமிழரசு கட்சி தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம், இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி ஜி பொன்னம்பலம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மூவரும் இலங்கை தமிழரின் பாதுகாப்புக்காக, இலங்கை அரசாங்கம் குடியரசாக அறிவிப்பதற்கு முன்பாக 04/05/1972 தமிழர்களின் ஒற்றுமை பாதுகாப்பு அரணாக தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்து அறிவித்தார்கள்.
ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவையும் பெற்று, இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான போக்குக்கு எதிராக தமிழர் ஐக்கிய முன்னணி போராட தொடங்கியது. தமிழ் மாணவர்கள் போராட்டம் மற்றும் தமிழ் இளைஞர்களின் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளை கையாண்டு தமிழர்களை நசுக்கத் தொடங்கியது. தமிழர்களை காப்பாற்றுவதற்கு மதச்சார்பற்ற சோசிலிச நாடு அதாவது தமிழ் ஈழம் என்று அறியப்படும் சுதந்திர நாடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழர் ஐக்கிய முன்னணி தனது பெயரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்தது. அப்போது மலையக மக்களின் பாதுகாப்பு கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்TULF கட்சியில் ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் பாதுகாப்பு உரிமைக்காக சேர்ந்து குரல் கொடுக்க மட்டும் தவறவில்லை. TULF கட்சியின் சின்னம் உதயசூரியன். உதயசூரியன் சின்னம் தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மனதில் சுதந்திர விடுதலை உணர்வை வளர்க்கத் தொடங்கியது. அதன் மூலம் போராட்ட உணர்வை மனதில் கொண்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிற்காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுதந்திர தமிழ் ஈழம்பெற பல பலஇயக்கங்களை உருவாக்கியது வரலாற்று உண்மை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் பாராளுமன்ற பதவி ஆசைக்காக பொய்யாக நடித்திருந்தாலும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிக பெரும் வெற்றியை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு தமிழ் மக்கள் கொடுத்திருந்தார்கள். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை த் TULF தலைவர் அமிர்தலிங்கம் அமர வைக்கப்பட்டார்
1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிங்கள பகுதிகளில் J.R ஜெயவர்த்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி UNP மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனா சர்வாதிகாரி போல் நடக்க தொடங்கினார். சுதந்திரக் கட்சியின் தலைவர் சிரிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்போது சிறிமாவோ பண்டாரநாயக்காவின் நண்பரான இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தியும் பதவி இழந்து, மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமர் ஆனது ஜே ஆர் க்கு வசதியாக போய்விட்டது. இந்திய பிரதமர் தேசாய் உடன் நல்ல நட்புறவை வளர்த்துக் கொண்டார்.
தமிழர்களின் சுதந்திர எழுச்சியும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வளர்ச்சியும் சிங்கள மக்களையும் சிங்கள தலைவர்களையும் பயமும் சினமும் கொள்ள வைத்தன. தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடக்கப் தொடங்கின. TULF பின்னணியில் ஆதரவோடு வளர்ந்த தமிழ் இளைஞர்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதங்கள் தூக்க தொடங்கினார்கள்.. தமிழர்களின் கெட்ட நேரம் பதவி ஆசையும் தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்ற ஆசையால் பல ஆயுதம் தூக்கிய தலைவர்களால் பல பல இயக்கங்கள் தோன்றி, கடைசியில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்களும் விடுதலை இயக்க போராளிகளும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளும் உரிமைகளும் அழிக்க பட்டது உலகறிந்த செய்தி.
முதன் முதலில் பகிரங்கமாக தமிழர்களுக்கு, தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை உணர்வையும் ஊட்டி வளர்த்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) கடந்த கால ஆயுதம் ஏந்திய இளைஞர்களால் மறக்கப்படும் முடியாத ஒரு கட்சியாகும். அதன் சின்னம் உதய சூரியன் மறக்க முடியாத ஒரு சின்ன மாகும். பிற்காலத்தில் ஆயிரமாயிரம் தங்கள் தோன்றினாலும் , முதன் முதலில்சிங்கள அரசாங்கத்துக்கும் சிங்கள தலைவர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒரு பயத்தை கொடுத்தது உதயசூரியன் சின்னமாகும்.
இன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலை என்ன? தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களின் நிறைந்த உதயசூரியன் சின்னத்தின் நிலை என்ன?
ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல் பல பல சிங்களத் தலைவர்கள் TULF கட்சியையும் உதயசூரியன் சின்னத்தையும் முடக்க இல்லை அழிக்க பல முயற்சிகள் செய்த வரலாறுகள் உள்ளது. மஹிந்த ராஜபக்சே காலத்தில் அதன் முக்கிய தலைவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை ஒழிப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்து வருவதாக அப்போது பல தகவல்கள் வந்தன.
ஆனாலும் அன்றைய ஆட்சியாளர்களின் புத்திசாலியான ஒரு தம்பி ஒரு நீண்ட கால திட்டம் போட்டார்.
TULF கட்சியை அழிப்பது விட, மறைமுகமாக கட்சியை தங்களுக்கு நம்பிக்கையான தமிழர்களை வைத்து, கட்சியை கைப்பற்றி அதன் மூலம் தேர்தல்களில் திரும்பவும் உதய சூரியன் சின்னத்தை கொண்டு வந்து, மற்ற தமிழர் கட்சிகளை ஓரங்கட்டி உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெறும் தங்கள் ஆதரவான தமிழர்களைக் கொண்டு தமிழர்களின் போராட்டங்களை திசை திருப்பலாம் என்று நினைத்து அந்த சிங்கள தலைவர் மெது மெதுவாக வேலைகளைதொடங்கினார். அதற்கு வசதியாக ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் TULF கட்சி அதன் சின்னம் உதயசூரியன் இவற்றின் வரலாற்று பெருமதியை தெரியாமல், ஏதோ தனது சொந்த கட்சி தன்னுடைய சொந்த கார் போன்று நடக்கத் தொடங்கினார். தமிழர் மனங்களில் சுதந்திரத்தையே எழுச்சி கொள்ள செய்த TULF கட்சி ஆனந்த சங்கரியிடம் குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆனது.
ஆனந்த சங்கரியிடம் இருந்து கட்சியை மறைமுகமாக பறிக்கும் வேலைகள் தொடங்கின. அதன் முதல் படியாக ராஜபக்சே குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் தாரணி தமிழ் பெண்மணி இவர் கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்துக்கு யூனிஃபார்ம் சீருடை தைக்கும் ஒப்பந்தம் ஒன்றினை பெற்று பல மில்லியன் ரூபாய்களை சம்பாதித்து சம்பாதித்த கொண்டது மட்டுமின்றி வெற்றிலை மொட்டு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர். தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார் என்றும் அறியப்படுகிறது. இந்த பெண்மணி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சிக்குள் நுழைந்து, தனக்கு விசுவாசம் ஆன சில நபர்களையும் ஆனந்த சங்கரி அய்யாவுடன் இணைத்து நகமும் சதையும் போல் ஒட்டவும் வைத்து விட்டார்.
இந்தப் பெண்ணின் வலதுகரமாக செயல்பட்டு வரும் நபர் ஒருவர் கட்சிக்குள் ஆழமாக உச்சென்று ஆனந்த சங்கரி அய்யாவுக்கு பதிலாக குரல் காட்டியாகவும் மாறியுள்ளார். இந்த நபர் கோத்தாவின் சம்பந்தி நடத்தும் சேவை சங்கம் ஒன்றின் வவுனியா பிரதிநிதியாக செயல்பட்டு வருவதுடன் மன்னார் முஸ்லிம் பிரதிநிதித்துவ முன்னாள் மந்திரி ஒருவருடைய தம்பியாருடன் இணைந்து கேரளா கஞ்சா மற்றும் மஞ்சள் பொருள் கடத்தப்படும் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பெருந்தொகையான பணத்தினை பொருளாதாரத்துவம் என்கிற போர்வையில், உடன் தொடர்புடைய கோட்டாவின் குடும்ப நபருக்கு பெற்றுக் கொடுப்பது பெரும் பங்களிப்பை செய்து வந்திருக்கிறார்.
உண்மையில் பழைய அரசாங்கத்தின் ஒரு ரகசிய தூதுவனாகத்தான் தமிழர் விடுதலை கூட்டணிக்குள் புகுந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்த சங்கரி அய்யாவை விட்டு பலரும் விலகிச் சென்றதால் இந்தப் பெண்ணும் இந்த நபரும் ஏனைய சில நபர்களும் , இவர்களுடன் கூட்டு சேர்ந்த ஒரு அட்வைக்கேட்டும்சுலபமாக நுழைந்து விட்டார்கள். உண்மையான விசுவாசிகள் பலர் பல இடங்களிலும் புலம்பி திரிகின்றனர் .இந்த திருட்டுக் கூட்டத்திடமிருந்து கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயாவையும் மீட்பது எப்படி என்று ஆலோசித்தும் வருகின்றன ராம். இதற்காக கனடா போன்ற நாட்டிலிருந்து மதிப்பு மிக்கவர்களும் வந்து ஆலோசனை வழங்கி உள்ளார்கள் என்று தகவல்கள் கிடைத்தன.
கேரளா கஞ்சா மஞ்சள் விற்பனை மூலம் மற்றும் கடத்தல்கள் மூலம் வரும் வருமானம் மூலம் பெறப்பட்ட வருமானத்தில் சில பகுதிகளை ஆனந்த சங்கரி ஐயாவை தங்கள் கையில் வைத்திருப்பதற்காக செலவு செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நபர் வெளி தோற்றத்துக்கு இலங்கை சேவை நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதிஎன்பதே மக்கள் மத்தியில் தெரியும். சேவை நிறுவனத்தின் மாவட்ட பிரதிநிதியாக செயல்படுகிறவர் வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தல் தொழிலையும் செய்து பணம் சம்பாதித்துள்ளார். தனக்கு இருக்கின்ற ஆழமான கோட்டா குடும்ப சம்மந்தியின் நட்புடன் பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்துள்ளாராம்.
அது மட்டுமல்லாமல் தனக்கு சாதகமாக மற்றும் ராஜபக்சே குடும்பங்களுக்கு விசுவாசமான அந்தப் பெண்ணின் ஆதரவுடன் ஏனைய சில நபர்களையும் மற்றும் சட்டம் படித்தவர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நிற்கின்ற ஆனந்த ஆனந்த சங்கரிஐயாவிடம் கபட நாடகம் நடத்தி கட்சியின் ஏக பிரதிநிதித்துவத்தை பெற்று விட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஓடிப் திரிகிறார்களாம்.
இவர்கள் எல்லாம் கோட்டா குடும்பத்துடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் தமிழர்களின் இறையாண்மை,பாரம்பரிய போராட்ட வரலாறு, ஒருமைப்பாடு போன்றவற்றுக்கு உறுதுணையான சாட்சியம் ஆன ஒரு கட்சியை பெற்று அதனை இல்லாத ஒழிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றனர்.
மற்றொரு வழியிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை கைப்பற்றுவதற்கு பண பலம் மூலவும் முயற்சிகள் செய்து வருகிறார்களாம். வயோதிபத்தால் சரியான நினைவுகள் இல்லாத ஆனந்த சங்கரி ஐயாவை தமிழ் தேசியம் தமிழ் பற்று மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு போன்ற பல நாடகங்களை நடத்தி அதோடு வெளிநாட்டு தமிழர்களின் பண ஆதரவுடன் கட்சியை கைப்பற்றி கடைசியில் எல்லோரையும் ஏமாற்றி, கடைசியில் தமிழர்களின் மனதில் சுதந்திரத் தீயை மூட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை சிங்கள தலைவர்களின் காலடியில் கொண்டு போய் சேர்ப்பதற்கு முகமூடி மூடி போட்ட புதிய தலைவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த கால சிங்கள தலைவர்களின் முயற்சி கட்சியை கைப்பற்றுவதன் மூலமா அல்லது கோடிகளில் விலை கொடுத்து தங்களால் முகமூடி அனுப்பப்பட்ட புதிய தமிழ் தலைவர்களின் முயற்சியால என்று தெரியவரும்.
சதி வலையில் சிக்கி உள்ள தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈழத் தமிழர்களின் மத்தியில் ஒற்றுமையை கொள்கை உறுதியையும் உறுதிப்பாட்டை ஏற்படுத்திய ஒரு அமைப்பாகும் இதுல விடுதலை என்ற எண்ணத்தை தமிழர் மத்தியில் ஆழ விதைத்தது இந்த அமைப்பாகும் இந்த அமைப்பின் பல தலைவர்களும் பல முக்கிய செயல்பாட்டார்களும் கொல்லப்பட்டார்கள். யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் அறிந்ததே. இவர்கள் கொலை செய்தது தமிழ் தலைவர்களை மட்டுமல்ல தமிழ் இளைஞர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஏற்படுத்திய ஒரு கட்சியின் அழிவையும்த்தான்.
இது பற்றிய மேலும் விபரம் அறிந்தவர்கள் உண்மையை அறிந்தவர்கள் பதிவுகளை போடுங்கள்.
No comments:
Post a Comment