இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதே நேரம் இலங்கையில் நடந்த வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் போது டெல்லியில் பிரம்மாண்ட ஊர்வலத்தையும் இலங்கை அரசாங்கத்துக்காக எதிராக நடத்தி இந்திய மக்களையும், மற்றும் வெளிநாட்டு தூதுவர்களையும் தமிழ்நாட்டு மக்களின் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை திரும்பிப் பார்க்கச் செய்தார்.
1983 ஆண்டு நெருக்கடியான நிலையில் இருந்த இலங்கை தமிழ் போராளிகளுக்கு, தனது ஆதரவான குரலை மட்டும் கொடுக்கவில்லை, போராளிகள் டெல்லியில் வந்து தங்கி லெபனானில் பயிற்சி பெற போவதற்கும், தனது டில்லி வீட்டை பாவிப்பதற்கும் அனுமதி கொடுத்த எல். கணேசன் அண்ணாவை மறக்க முடியாது.
இன்று எல். கணேசன் அண்ணாவுக்கு தமிழ்நாடு அரசாங்கம் அண்ணா விருது அறிவித்திருப்பதற்கு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
No comments:
Post a Comment