இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் இனிமேல் சரி தமிழ் மொழியையும், உரிமைகளையும், நிலத்தையும் பாதுகாக்க வரும் காலத்தில் முயற்சி செய்தால், அதற்கு முன்பு அரசியல் தலைவர்கள் சேர் பொன் ராமநாதன் முதல், ஜிஜி பொன்னம்பலம், செல்வநாயகம், அதற்குப் பின்பு அமிர்தலிங்கம் தொடர்ந்து இன்று வரை உள்ள அரசியல் தலைவர்கள், இவர்களது பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, ஆயுதம் தூக்கிய இளைஞர் படை, பிரிந்து பிரிந்து சுயநலத்துக்காக அதாவது தனது தலைமையில் தான் தமிழீழம் பெற வேண்டும் என்ற கற்பனை நினைவில் ஒவ்வொருவர் தலைமையிலும் பல ஆயுத குழுக்கள் தோன்றி இளைஞர்களை தொடர்ந்து சுதந்திரம் தமிழீழம் என்ற மாயமானை காட்டி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களே தனித்தனி இயக்கங்களில் சேர்த்து, தனது தலைமையை காப்பாற்றிக்கொள்ள தங்களை நம்பி வந்த பல தமிழ் இளைஞர்களையே கொன்றும், எதிர் தமிழ் இயக்கங்களை பலவீனப்படுத்த அந்த இயக்க தமிழ் இளைஞர்களை கொன்றும் சிங்கள அரசுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் மறைமுகமாக விசுவாசமாக நடந்து கொண்டார்கள்.
அதோடு விட்டார்களா, தமிழர் சமூகத்தில் உண்மையான படித்த அறிவு ஜீவிகள், தவறை தட்டிக் கேட்கக் கூடிய படித்த அறிஞர்கள், விடுதலை இயக்கங்களை பற்றி கவலைப்படாமல் தமிழ் மாணவ சமூகத்தை படிப்பில் கவனம் செலுத்தி சிறந்த படித்த தமிழ் சமூகத்தை உருவாக்க முனைந்த பல அறிஞர்கள் ஆசிரியர்கள் கல்லூரி அதிபர்கள் இந்த தமிழ் விடுதலை இயக்கங்களால் கொலை செய்யப்பட்டார்கள்.
இதன் பாதிப்பு தான் இன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒழுக்கம் அறிவு போன்றவை, இவர்களா எமது தலைவர்கள் என்று நினைக்க வைக்கிறது.
கடந்த கால அரசியல் தலைவர்கள், விடுதலை இயக்கங்கள், விடுதலை இயக்கத் தலைவர்கள் செய்த தவறுகளை ஒன்றும் செய்ய முடியாது. அந்தந்த காலமும் சூழ்நிலையும் தவறுகள் நடக்க காரணமாக இருந்தன. இனி அவர்களை குறை கூறி பயனில்லை.
ஆனால் அந்த காலகட்டங்களில் நடந்த தவறுகளை தமிழர்கள், இளைஞர்கள் அறிந்து வருங்காலத்தில் தங்கள் போராட வேண்டி வந்தால், ஏன் போராடுகிறோம் யாருக்காக போராடுகிறோம், இந்தப் போராட்டத்தால் தமிழர்களின் உரிமை தாய்நிலம் பாதுகாக்கப்படுமா உலக நாடுகள் ஆதரிக்குமா, முக்கியமாக எமது போராட்டத்தின் நோக்கத்தை சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும், என்று பலமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவைக்காகவே அப்படியான விடுதலை இயக்கங்கள் பற்றிய பதிவுகளை போடுவதற்கு ஒரு காரணம்
No comments:
Post a Comment