1983 ஆம் ஆண்டு சென்னை டி நகர் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழில விடுதலை போராளி தலைவர்களை இலங்கை நாட்டுக்கு திரும்ப ஒப்படைக்க எம்ஜிஆர் அரசு முயற்சி செய்தபோது, அதற்கு எதிராகதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு எல். கணேசன் அண்ணா அவர்கள் தலைமையில் டெல்லியில் பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல் விடுதலை போராளிகள் பாலஸ்தீனபயிற்சிக்காக லெபனான் செல்லும்போது டெல்லியில் போராளிகள் தங்கி செல்வதற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் விடுதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தவர்தான் எங்கள் மதிப்புக்குரிய அன்புக்குரிய அண்ணன் L. கணேசன் அவர்கள். அந்த காலத்தில் எந்தவித பிரதிபலன் பாராமல் உதவி செய்தவர்களில் ஒருவர்.
L. கணேசன் அண்ணாவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரோடு பழகிய நாட்களும் அவர் எனக்கும் எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கும் செய்த உதவிகள் ஏராளம்.
முன்னாள் ஈழ விடுதலைப் போராளிகள் சார்பாக அவரின் குடும்பத்தாருக்கும் திமுக குடும்ப நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment